Tuesday, 11 May 2021

இணைச்சொற்கள் அறிவோம்!

தமிழறிவோம்

இணைச்சொற்கள் அறிவோம்!

            இணைச்சொற்களை அறிவதற்கு முன்பாகக் கீழே உள்ள ஒரு பயிற்சியைச் செய்து பாருங்கள்!

பயிற்சி :

தொடரைப் படித்து இணைச்சொற்களை அடிக்கோடு இடுக.

            எங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள செடிகளை வாடி வதங்காமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டதால் அடுக்கடுக்காகப் பூக்கள் வெள்ளைவெளேர் என்று பூத்திருக்கின்றன.

விடை :

            எங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள செடிகளை வாடி வதங்காமல்   கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டதால் அடுக்கடுக்காகப் பூக்கள் வெள்ளைவெளேர் என்று பூத்திருக்கின்றன.

 

            மேலே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியிலிருந்தும் அதற்கான விடையிலிருந்தும் இணைச்சொற்கள் என்றால் என்னவென்பதை அறிந்திருப்பீர்கள். தற்போது மேலும் சில இணைச்சொற்களை அறிந்து கொண்டால் இணைச்சொற்கள் பற்றிய புரிதல் கிடைத்து விடும்.

மேலும் அறிந்து கொள்ள சில இணைச்சொற்கள்

Ø சீரும் சிறப்பும்

Ø பேரும் புகழும்

Ø ஈடு இணை

Ø உற்றார் உறவினர்

Ø நோய் நொடி

Ø குற்றங் குறை

Ø கூன் குருடு

Ø வாடி வதங்கி

Ø முக்கலும் முனங்கலும்

Ø வாயும் வயிறும்

Ø மூக்கும் முழியும்

Ø ஆற அமர

Ø அல்லும் பகலும்

Ø உயர்வு தாழ்வு

Ø அடியும் நுனியும்

Ø உள்ளும் புறமும்

Ø குறுக்கும் நெடுக்கும்

Ø உச்சிமுதல் உள்ளங்கால் வரை

Ø ஐயந்திரிபற

Ø இருளும் ஒளியும்

Ø கிழக்கும் மேற்கும்

Ø வடக்கும் தெற்கும்

Ø ஏட்டிக்குப் போட்டி

Ø மேடு பள்ளம்

Ø செக்கச் செவேல்

Ø வெள்ளை வெளேர்

Ø பச்சைப் பசேல்

Ø நட்ட நடுவில்

இணைச்சொற்களுக்கான விளக்கம்

ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது இணைச்சொல் எனப்படும்.

*****

இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download


No comments:

Post a Comment