மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!
கூகுள்
மேப் என்பதே ஒரு சுவாரஸ்யமான கலைப்படைப்புதான்.
அந்த மேப்பைக் கையில்
வைத்துக்கொண்டு "இன்னும் 50 மீட்டரில்
வலது பக்கம் திரும்பவும்" என்று அந்தச் செயலி வழிகாட்டும்போது, நாம் ஒரு சாக்கடை அடைப்புக்குள் இறங்க வேண்டியிருக்கும்.
ஆனால்,
அந்த நவீனத் தொழில்நுட்பத்தை அப்படியே தூக்கிக் கொண்டுவந்து
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொருகினால் என்னவாகும் என்பதற்குத் தற்போதைய களநிலவரமே
சாட்சி.
அப்படித்தான்
தாம்பரம் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் ஒரு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பாளர் கையில் மொபைலோடு தவித்து நின்று கொண்டிருக்கிறார்.
அவருக்கு
ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,000 வீடுகள்!
சாதாரணமாக
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 முதல் 300
வீடுகள் ஒதுக்குவதுதான் உலக வழக்கு.
ஆனால்,
கூகுள் மேப் தனது பரந்த வான்வழிப் பார்வையால் மேலே இருந்து
பார்த்திருக்கிறது. செயற்கைக்கோளுக்கு மேலிருந்து பார்க்கும்போது அடுக்குமாடி
குடியிருப்பு என்பது வெறும் ஒரு சதுரப் பெட்டிதானே?
அட,
ஒரே ஒரு கட்டிடம்தானே என்று அதை ஓர் அலுவலருக்கு ஒதுக்கி
விட்டார்கள். ஆனால் அந்த ஒற்றைப் பெட்டிக்குள் 25
பிளாக்குகள், ஆயிரக்கணக்கான மனிதர்கள், லட்சக் கணக்கான கேள்விகள் ஒளிந்திருப்பது கூகுள் மேப்பிற்கு எப்படித்
தெரியும்?
ஒரு
வீட்டிற்கு 33 கேள்விகள் கேட்க வேண்டும். வீட்டின் கூரை என்ன
பொருள்? சுவர் என்ன பொருள்? கழிப்பறை
இருக்கிறதா? டிவி, இணையதளம், வண்டி இருக்கிறதா? என்று அதன் பட்டியல் பெரிது.
அத்துடன் 34 ஆவது கேள்வியாக அலைபேசி எண்ணைப் பெற வேண்டும்.
ஆக மொத்தம் 34 கேள்விகள்.
மூவாயிரம்
வீடுகளுக்கு இந்தக் கேள்விகளைப் பெருக்கிப் பார்த்தால், மொத்தம்
ஒரு லட்சத்து இரண்டாயிரம் பதில்களைச் சேகரிக்க வேண்டும்.
இதை
மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கே தலைச்சுற்றல் வந்துவிடும்.
தொழில்நுட்பம்
மனிதர்களின் வேலையை எளிதாக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நமது
ஊரில் தொழில்நுட்பம் என்பது இப்படித்தான் ஒற்றை அலுவலருக்கு 3000 வீடுகளை ஒதுக்குகின்றன.
*****

No comments:
Post a Comment