கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.08.2026
1) தமிழகத்தில்
உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு – அறிவுப் பாடத்திட்டம்’
அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2) அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு புதிய விளையாட்டு உடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
3) ஆண்டு
வருமானம் இரண்டரை லட்சத்துக்குக் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச
எரிவாயு உருளைகள் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
4) அக்டோபர்
2 முதல் புறநகர் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழக
முதல்வர் அறிவித்துள்ளார்.
5) பரந்தூர்
விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
6) வெங்காய
விலை உயர்வைக் கட்டுப்படுத்த நாசிக்கிலிருந்து விரைவுத் தொடர்வண்டிகள் மூலம் நாட்டின்
பல பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது.
Education & GK News
1) The ‘Tamil Nadu – Knowledge Curriculum’ is set to be
introduced in all government schools across Tamil Nadu starting from the next
academic year.
2) School Education Minister Rajmohan has announced that
new sports uniforms will be provided to government school students.
3) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay has
announced that three free LPG cylinders per year will be provided to families
with an annual income of less than Rs. 2.5 lakh.
4) The Chief Minister has announced that women will be
able to travel free of charge on mofussil buses starting October 2.
5) The Chief Minister has announced the cancellation of
the Parandur airport project.
6) To curb the rise in onion prices, onions are being
transported from Nashik to various parts of the country via express trains.





No comments:
Post a Comment