கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.09.2025)
1) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக்
கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர். தமிழக அரசியல் பிரச்சாரக் கூட்டமொன்றில்
இந்த அளவுக்கு நெரிசலில் உயிர் பலி ஏற்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.
2) கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்குப்
பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3) கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக நீதி
விசாரணைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
4) கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிப்
பலியானோருக்குக் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் ஆகியோர்
இரங்கல் தெரிவித்துள்ளனர்.
5) நாடு முழுவதும் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்)
நான்காம் தலைமுறை அலைவரிசை சுதேசி (4ஜி) சேவையைத் துவங்கியது.
6) பயிர் உற்பத்தியில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
7) இந்தியாவில் அதிக அளவு பார்வையிட்ட சுற்றுலா தலங்களில் தாஜ்மஹால்
முதலிடம் பிடித்துள்ளது.
8) மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 85000 ரூபாயைக் கடந்தது.
9) எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார். அவருக்கு வயது 61.
Education & GK News
1) 39 people died in a stampede at a campaign rally of
TVK leader Vijay in Karur. This is the first time that such a large number of
lives have been lost in a stampede at a political campaign rally in Tamil Nadu.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced a
compensation of Rs 10 lakhs to the families of those who died in the Vijay
campaign rally stampede in Karur.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered a
judicial inquiry into the deaths at the Karur Vijay campaign rally.
4) The President, Prime Minister, Governor of Tamil Nadu
and Chief Minister of Tamil Nadu have expressed their condolences to the
victims of the stampede at the Vijay campaign rally in Karur.
5) Bharat Sanchar Nigam Limited (BSNL) has launched
Swadeshi 4G service across the country.
6) Tamil Nadu has topped the list of Indian states in
green gram production.
7) Taj Mahal has topped the list of most visited tourist
destinations in India.
8) Gold price crosses Rs 85,000 per sovereign again.
9) Writer Ramesh Preethan passes away. He was 61.
No comments:
Post a Comment