Showing posts with label அன்றாட வாழ்வில் வேதியியல். Show all posts
Showing posts with label அன்றாட வாழ்வில் வேதியியல். Show all posts

Monday, 23 November 2026

NMMS - அன்றாட வாழ்வில் வேதியியல்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் வகுப்பு.

அன்றாட வாழ்வில் வேதியியல்.

1971 வங்காளதேச விடுதலைப் போரில் வெளியேறிய மக்கள் காலராவால் பாதிக்கப்பட்ட போது வாய்வழி நீரேற்றுக் கரைசல் (ORS) மூலமாக இறப்பு விகிதம் 50 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்திய மருத்துவர் மஹாலபாபைஸ் 1971 – 1972 காலராவைக் கட்டுப்படுத்துவதில் ORS இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மணிப்பூரில் காலரா தொற்றின் போது களச் சோதனையில் ORS முக்கிய பங்கு வகித்தது.

மனித குடல் சுவரில் 20 லிட்டர் தண்ணீர் தொடர் பரிமாற்றம் நிகழ்கிறது.

உடலின் திரவத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால் இறப்பு நேரிடுகிறது. ஆகவே வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீர்ப்போக்கினால் இறப்பு நேரிடுகிறது.

ORS என்பது உப்பு, சர்க்கரை, நீர் கரைசல் ஆகும். இது நீர் பற்றாக்குறையை நீர் மற்றும் எலெக்ட்ரோலைட்டுகள் மூலம் மீட்டெடுக்கிறது. 90 முதல் 95 சதவீத வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கு இக்கரைசல் சிறந்த சிகிச்சை ஆகும்.

உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் தேவை. சோடியம் இல்லையெனில் குடல் உறிஞ்சிகளால் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.

சோடியம் அயனியானது செறிவின் அடிப்படையில் உடல் செல்லிற்குச் செல்கின்றது.

வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீர் இழப்பினால் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை உடல் இழக்கிறது.

குளுக்கோசுடன் உப்பை எடுத்துக் கொள்ளும் போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.

சோடியம் மற்றும் குளுக்கோஸ் குடலின் நீர் உறிஞ்சும் தன்மையைத் துரிதப்படுத்துகிறது. இக்கண்டுபிடிப்பு இந்நூற்றாண்டின் முக்கிய மருத்துவ முன்னேற்றம் ஆகும்.

உணவுச் செரிமானம் வயிற்றில் சுரக்கும் இரப்பை நீர் அல்லது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் நடக்கிறது.

வயிற்றுப் புறணிச் செல்கள் 1 முதல் 3 பி.ஹெச். வரையிலான அமிலத்தைத் தாங்கும்.

அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சலுக்கான மருந்து ஆன்டாசிட். இது ஒரு வலுவற்ற காரமாகும். அமில நீக்கிகள், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு, மெக்னீசியம் கார்பனேட், அலுமினியம் ஹைட்ராக்ஸைடு நடுநிலையாக்கலுக்குப் பயன்படுகின்றன.

உலகின் முதல் ஆண்டிபயாடிக் பென்சிலின். இதை 1928 இல் கண்டறிந்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி.

பென்சிலின் பெனிசிலியம் நொடேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் காயமடைந்த வீரர்களுக்குப் பென்சிலின் பெரிதும் உதவியது. நிமோனியாவினால் ஏற்பட்ட இறப்பும் 18 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைந்தது.

குளோரோபினிகால், டெட்ராசைக்ளின் என்பன புதிய வகை ஆண்டிபயாடிக்குகள். இவை செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆண்டிபயாடிக்குகளினால் பாக்டீரிய தொற்று நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.

சளி மற்றும் புளூ போன்ற வைரஸ் நோய்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்வதில்லை.

தொடர்ச்சியாக ஆண்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நலம்.

வலி நிவாரணிகள் அல்லது வலி நீக்கிகள் (Analgesics) மைய அல்லது புற நரம்பு மண்டலத்தில் செயல்படுவது மூலம் உணர்வு நிலையை  மாற்றாமல் வலியைக் குறைக்கிறது.

பாரசிட்டாமால் வலி மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தைப் பிரித்தெடுத்தார்.

ஆஸ்பிரின் போதைத் தன்மையற்ற வலிநீக்கியாகும். கோடீன் போதைத் தன்மை வாய்ந்த வலிநீக்கியாகும்.

சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலை 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இந்நிலைக்கு மேல் உடல் வெப்பநிலை சென்றால் அது காய்ச்சல் ஆகும்.

உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதாலமஸ். நோய்த்தொற்றின் போது பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை அடைந்து புரோஸ்டாகிளான்டினை வெளியிட உடல் வெப்பநிலை அதிகமாகிறது.

உடல் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் போது புரதம் மற்றும் மூளையைத் தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் வெப்பத் தணிப்பி (ஆண்டிபைரடிக்ஸ்) என்பது காய்ச்சலைக் குறைக்கும் வேதிப்பொருள். இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியைக் குறைத்து காய்ச்சலைக் குறைக்கின்றன. பாராசிட்டாமால் பொதுவான ஆண்டிபைரடிக்ஸ். ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்கோபினாக் ஆகியன பிற ஆண்டிபைரடிக்ஸ் ஆகும்.

குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக் நீர்மங்கள், எத்தனால், போரிக் அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக் ஆகும்.

பூண்டு, மஞ்சள், சோற்றுக் கற்றாழை, வெங்காயம், முள்ளங்கி போன்றன இயற்கையான ஆண்டிசெப்டிக் ஆகும்.

கிருமிநாசினி (டெட்டால்) என்பது குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கால் சேர்ந்த கலவையாகும்.

அயோடின் (Tincture) + 2 முதல் 3 சதவீதம் ஆல்ஹகால், நீர் கலந்த சோப்புக் கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியன கிருமிநாசினிகளாகும்.

டைஃபினைல் ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன், சிமெடிடின் ஆகியன ஒவ்வாமை பாதிப்பு நீக்கமருந்துகளுக்கான (ஆண்டிஹிஸ்டமின்கள்) எடுத்துக்காட்டுகளாகும்.

அனைத்து ஆண்டிசெப்டிக்குகளும் கிருமிநாசினிகள் ஆகும். அனைத்துக் கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக்குகள் அல்ல.

ஆண்டிசெப்டிக்குகள் உயிருள்ள செல்களின் மீது செயல்படுகின்றன. கிருமிநாசினிகள் உயிரற்ற பொருட்களின் மீது தெளிக்கப்படுகின்றன.

வாய்வழி பயன்பாடு, வெளிப்புற பயன்பாடு, ஊசி மருந்துகள்  வழியாக எடுத்துக் கொள்ளுதல் என்பன மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

எரிதல் என்பது ஓர் எரிபொருள் ஆக்ஸிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.

ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த ஒரு வினையும் ஆக்ஸிஜனேற்ற வினையாகும்.

அனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினையாகும்.

ஹைட்ரோ கார்பனை ஆக்ஸிஜனுடன் எரிக்கும் போது கார்பன் டை ஆக்சைடு, நீர், வெப்ப ஆற்றல் உண்டாகிறது.

ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை எரி வெப்பநிலை.

ஒரு பொருள் எரி வெப்பநிலையை விட குறைவாக இருந்தால் தீப்பிடிக்காது.

பெட்ரோல், ஆல்கஹால், எல்.பி.ஜி, (திரவ பெட்ரோலிய எரிவாயு), சி.என்.ஜி. (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) ஆகியன குறைந்த எரி வெப்பநிலை கொண்டவை. எனவே எளிதில் தீப்பற்றக் கூடியவை.

நெருப்பு ஒரு பருப்பொருள்.

உப்புகளை ஆல்கஹால் கலவையுடன் சுடராக்கினால் பின்வரும் வண்ண சுடர்கள் உருவாகின்றன. அவையாவன, எப்சம் உப்பு – வெண்மை சுடர், லித்தியம் உப்பு – ஊதா சுடர், பொட்டாசியம் குளோரைடு – இண்டிகோச சுடர், போராக்ஸ் பவுடர் – பச்சை சுடர், கால்சியம் குளோரைடு – மஞ்சள் சுடர், சமையல் உப்பு – ஆரஞ்சு சுடர், ஸ்டிரான்ஸ்யம் குளோரைடு - சிவப்பு சுடர்.

ஆவியாகாத பொருளைக் கொண்டுள்ளவை சுடரை உருவாக்காது. (எடுத்துக்காட்டு.) நிலக்கரி.

சுடரானது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவையாவன சுடரின் வெளிப்புறப் பகுதி, நடுப்பகுதி, உட்புறப் பகுதி ஆகும்.

வெளிப்புறப் பகுதி முழுமையான எரிதல் நடைபெறும் நீல நிறப் பகுதியாகும். இது ஒளிராத பகுதியாகும்.

நடுப்பகுதி குறைவான எரிதல் நடைபெறும் மஞ்சள் நிறப் பகுதியாகும். இது ஒளிரும் பகுதியாகும்.

உட்புறப் பகுதி எரியாத வாயுக்கள் கொண்ட கருமை நிறப் பகுதியாகும். இது மிகக் குறைந்த வெப்ப பகுதியாகும்.

வெப்பச் சலனக் கொள்கையின்படி சுடரானது மேல்நோக்கி இருக்கிறது.

ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும் வெப்ப ஆற்றலின் அளவானது ஒரு கலோரிபிக் மதிப்பு.

கார்பன் மோனாக்சைடு (C.O.) சுவாசப் பிரச்சனைக்கும், கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உலக வெப்பமயமாதலுக்கும், கந்தகம் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் (SO2, NO2) அமில மழைக்கும் காரணமாகின்றன.

எரிதல் வேகமாக எரிதல், தன்னிசையாக எரிதல், வெடித்தல், மெதுவாக எரிதல் என வகைபடுத்தப்படுகின்றது.

எல்.பி.ஜி. (திரவ பெட்ரோலிய எரிவாயு) எரிதல் வேகமாக எரிதல் ஆகும்.

அறை வெப்பநிலையில் பாஸ்பரஸ் எரிதல் தன்னிசையாக எரிதல் ஆகும்.

சுவாசம் என்பது மெதுவாக எரிதல் ஆகும்.

தீயணைப்பான் நீர், நுரை, உலர்ந்த வேதித்துகள், கார்பன் டை ஆக்ஸைடு, நீர்ம இரசாயனம் என வகைப்படுத்தப்படுகிறது.

நெருப்பு வகுப்பு ஏ, B, C, D, E நெருப்பு என வகைப்படுத்தப்படுகிறது.

வகுப்பு ஏ என்பது திடப்பொருளில், வகுப்பு B என்பது திரவப் பொருளில், வகுப்பு C என்பது வாயுப் பொருளில், வகுப்பு D என்பது எண்ணெய்யில், வகுப்பு E என்பது மின்சாரத்தில் ஏற்படும் தீயைக் குறிக்கிறது.

நீர். வகுப்பு A வகை தீயை அணைக்கவும், நுரை. வகுப்பு A, B வகை தீயை அணைக்கவும், உலர் தூள் அனைத்து வகுப்பு தீயை அணைக்கவும், கார்பன் டை ஆக்சைடு. வகுப்பு B வகை தீயை அணைக்கவும், ஈரமான ரசாயனம். வகுப்பு A, F வகை தீயை அணைக்கவும் பயன்படுகிறது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

திரவப் பெட்ரோலிய வாயு என்பது எது?

            1) ஆக்சிஜனும் புரோப்பேனும்.              2) மீத்தேனும் பியூட்டேனும்.

            3) புரோப்பேனும் பியூட்டேனும்.          4) ஆக்சிஜனும் ஹைட்ரஜனும்.

விடை : புரோப்பேனும் பியூட்டேனும்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாயு எது?

            1) இயற்கை வாயு.                           2) கார்பன் டை ஆக்சைடு.

            3) கார்பன் மோனாக்சைடு.                        4) நைட்ரஜன் ஆக்சைடு.

விடை : இயற்கை வாயு.

முக்கிய வினாக்கள்

நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள மருந்து எது?

            1) ஸ்ட்ரெப்டோமைசின்.              2) குளோரோம்பெனிகால்.

            3) பென்சிலின்.                                4) சல்பாகுனிடின்.

விடை : பென்சிலின்.

ஆஸ்பிரின் என்பது பின்வருவனவற்றுள் எது?

            1) ஆண்டிபயாடிக்.                          2) ஆண்டிபைரடிக்.

            3) மயக்க மருந்து.                            4) சைக்கீடெலிக்.

விடை : ஆண்டிபைரடிக்.

மெழுகுவர்த்தி சுடரில் வெப்பமான பகுதி எது?

            1) நீலம்.                                             2) மஞ்சள்.

            3) கருப்பு.                                          4) உள் பகுதி.

விடை : நீலம்.

ஒரு பொருள் தீப்பிடிக்கத் தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை எது?

            1) கொதிநிலை.                                2) உருகுநிலை.

            3) எரி வெப்பநிலை.                      4) உறைநிலை.

விடை : எரி வெப்பநிலை.

*****