Monday, 23 November 2026

NMMS - அன்றாட வாழ்வில் விலங்குகள்

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் வகுப்பு.

அன்றாட வாழ்வில் விலங்குகள்.

பால் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த ஊட்டச்சத்து உணவாகும். பாலிலிருந்து பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு (கிரீம்), தயிர், வெண்ணெய், நெய் தயாரிக்கப்படுகிறது.

முட்டை ஆறு கிராம் எடையுள்ள உயர்ரகப் புரதத்தைக் கொண்டுள்ளது.

நல்ல முட்டை நீரில் மூழ்கும். அழுகிய முட்டை நீரில் மிதக்கும்.

நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடி வரை சென்றால் அது சுத்தமான தேன். நீரில் கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

கோழிகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு (சால்மோனெல்லோசிஸ்) பாக்டீரியா நோயாகும், அம்மை நோய் (ரானிக்கெட் நோய்) வைரஸ் நோயாகும், பலவீன நோய் (ஆஸ்பர்ஜில்லஸ் நோய்) பூஞ்சை நோயாகும்.

குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது.

கம்பளி இழை கேப்ரினே எனும் செம்மறி ஆடுகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது.

கம்பளியை உருவாக்குவதற்கான ஐந்து படிநிலைகளாவன, 1. கத்தரித்தல், 2. தரம் பிரித்தல், 3. கழுவுதல், 4. சிக்கெடுத்தல், 5. நூற்றல்.

கம்பளியானது வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது, ஈரப்பதத்தை உறிஞ்சும், குளிருக்கு எதிரானது, எளிதில் சுருங்காது, வெப்பக் காப்புப் பொருளாக உள்ளது.

இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்கவும் கம்பளி பயன்படுகிறது.

பட்டு என்பது பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழையாகும்.

பட்டுப்புழுக்கள் மல்பெரி இழைகளை உணவாக உண்ணும்.

பட்டுப் புழுக்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழும்.

பட்டுப்புழுக்களின் வாழ்க்கையில் நான்கு வளர்ச்சி நிலைகள் உள்ளன. அவையாவன, 1. முட்டை, 2. லார்வா நிலை (கம்பளிப் பூச்சி), 3. கூட்டுப்புழு (கக்கூன்), 4. பட்டுப்பூச்சி.

பட்டுப்பூச்சி வளர்ப்பு செரிகல்சர் எனப்படுகிறது.

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார் 500 முட்டைகள் இடும். இவை ஆறு வாரங்கள் குளிர் வெப்பநிலையில் வைத்து, பின் அடைகாக்கும் பெட்டியில் (இன்குபேட்டர்) வைக்க வேண்டும். பத்து நாள்கள் கழித்து முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் வெளிவரும்.

லார்வாக்கள் 35 நாட்கள் மல்பெரி இழைகளை உண்டு வாழும். இவை இவற்றின் ஆரம்ப எடையை விட 50000 மடங்கு எடையுள்ள மல்பெரி இலைகளை உண்கின்றன.

பட்டுப்பூச்சி தன்னைச் சுற்றி குக்கூனை உற்பத்தி செய்யும்.

பட்டுப்புழு ஐந்து நாட்களில் பட்டு இழைகளை உற்பத்தி செய்யும். பின் இவை கூட்டுப்புழுவாக மாறும்.

கக்கூன்களைக் கொதிநீரில் இட்டால் கூட்டுப்புழுக்கள் இறந்து செரசின் இழைகள் தளர்வதால் அவற்றிலிருந்து பட்டு இழைகளைப் பிரிக்கலாம்.

இயற்கை இழைகளில் வலிமையானது பட்டு இழை.

பட்டு இழை சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

பட்டானது கோடைக்காலத்தில் இதமாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கிறது.

பட்டு இழை அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுகிறது.

பட்டு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாமிடத்தை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.

கம்பளி ஆலைகளில் பணி புரிவோர் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியா தொற்றால் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு ஆட்படுகின்றனர். இந்நோய் பிரித்தெடுப்போர்கள் நோய் என்று அழைக்கப்படுகிறது.

ஆந்த்ராக்ஸ் நோயால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற நிமோனியாவை ஒத்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. வாந்தி, வயிற்றுப் போக்கும் ஏற்படுகின்றன.

பென்சிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் மருந்துகள் ஆந்த்ராக்ஸைக் குணமாக்குகின்றன.

விலங்குகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடுவது நலம் பயக்கும்.

ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.

1992 இல் ஆந்திராவின் குசுமா ராஜய்யா அகிம்சை பட்டு அல்லது அமைதி பட்டு முறையை உருவாக்கினார்.

விலங்கு வளர்ப்பு Animal Husbandary எனப்படுகிறது.

விலங்குகளைத் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்க அரசு 1960 இல் நான்கு புதிய சட்டங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டம் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை விற்பனை செய்பவர்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

விலங்குகளின் தோலில் இருந்து பெறப்படும் தடித்த உரோமங்கள் எதனால் ஆனது?

            1) கொழுப்பு.                                   2) புரதம்.

            3) கார்போஹைட்ரேட்.     4) பொட்டாசியம்.

விடை : புரதம்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

            1) வரையாடு.                                   2) செம்மறி ஆடு.

            3) வெள்ளாடு.                                  4) லாமா.

விடை : வரையாடு.

முக்கிய வினாக்கள்

பட்டுப்பூச்சி வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

            1) ஹார்டிகல்சர்.                              2) ஃபுளோரிகல்சர்.

            3) அக்ரிகல்சர்.                                  4) செரிகல்சர்.

விடை : செரிகல்சர்.

பிரித்தெடுப்போர்கள் நோய் எனப்படுவது எது?

            1) ஆஸ்துமா.                                                2) காலரா.

            3) ஆந்த்ராக்ஸ்.                                 4) டைஃபாய்டு.

விடை : ஆந்த்ராக்ஸ்.

முக்கிய வினாக்கள்

அமைதி பட்டு உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

            1) 1990.                                               2) 1991.

            3) 1992.                                               4) 1993.

விடை : 1992.

இயற்கை இழைகளில் வலிமையானது எது?

            1) பட்டு.                                            2) கம்பளி.

            3) பருத்தி.                                          4) சணல்.

விடை : பட்டு.

*****

No comments:

Post a Comment