தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன்.
(SAT).
அறிவியல் .
ஏழாம் வகுப்பு .
அளவீட்டியல் .
நிறை,
எடை, வெப்பநிலை, கன அளவு போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படுகின்றன.
இயற்பியல்
அளவுகள் அடிப்படை அளவுகள், வழி அளவுகள் என இருவகைப்படும்.
நீளம்,
நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகியன ஏழு அடிப்படை
அளவுகளாகும்.
பரப்பளவு,
கன அளவு போன்ற 22 வழி அளவுகள் உள்ளன.
நீளத்தின்
அடிப்படை அலகு மீட்டர்.
நிறையின்
அடிப்படை அலகு கிலோ கிராம்.
காலத்தின்
அடிப்படை அலகு வினாடி.
வெப்பநிலையின்
அடிப்படை அலகு கெல்வின்.
மின்னோட்டத்தின்
அடிப்படை அலகு ஆம்பியர்.
பருப்பொருளின்
அளவின் அடிப்படை அலகு மோல்.
ஒளிச்செறிவின்
அடிப்படை அலகு கேண்டிலா.
பரப்பளவின்
அலகு சதுர மீட்டர் அல்லது மீ2.
கனஅளவின்
அலகு கன மீட்டர் அல்லது மீ3.
சதுரத்தின்
பரப்பு பக்கம் × பக்கம் அல்லது a2 சதுர அலகு.
செவ்வகத்தின்
பரப்பு நீளம் × அகலம் அல்லது lb சதுர அலகு.
வட்டத்தின்
பரப்பு πr2 சதுர அலகு.
முக்கோணத்தின்
பரப்பு ½ bh சதுர அலகு.
ஒழுங்கற்ற
பொருளின் பரப்பளவை வரைபடத்தாள் கொண்டு கணக்கிடலாம்.
கனசதுரத்தின்
கன அளவு a3 கன அலகு.
கனசெவ்வகத்தின்
கன அளவு lbh கன அலகு.
கோளத்தின்
கள அளவு 4/3πr3 கன அலகு.
உருளையின்
கன அளவு πr2h கன அலகு.
ஒழுங்கற்ற
வடிவமுடைய பொருளின் கன அளவை அளவிடும் முகவை மூலமாகக் கணக்கிடலாம்.
அடர்த்தியின்
அலகு கிலோ கிராம் / மீட்டர்3.
தளக்கோணத்தின்
அலகு ரேடியன்.
ஒரு
ரேடியன் என்பது 1800/π ஆகும்.
திண்மக்கோணத்தின்
அலகு ஸ்ட்ரேடியன்.
துணை
அளவுகளான தளக்கோணமும், திண்மக் கோணமும் 1995 ஆம் ஆண்டு வழி அளவுகளில் சேர்க்கப்பட்டன.
வானியல்
அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு ஆகும். இதன் மதிப்பு
1.469×1011 மீ. கோள்களுக்கு இடைப்பட்ட தொலைவைக் கணக்கிட இவ்வலகு பயன்படுகிறது.
ஒளியாண்டு
என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவாகும். இதன் மதிப்பு
9.46×1015 மீ. விண்மீன்களுக்கு இடையே உள்ள தொலைவைக் கணக்கிட இவ்வலகு பயன்படுகிறது.
லண்டன்
நகருக்கு அருகில் உள்ள கிரீன்விச் என்னும் இடத்தில் ராயல் வானிலை ஆய்வு மையம் உள்ளது.
இதன் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோடு 00 தீர்க்கக் கோடாகும்.
உத்திரபிரதேசத்தில்
உள்ள மிர்சாபூர் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட
நேரம் கணக்கிடப்படுகிறது. இது 82.50 கிழக்குத் தீர்க்கக் கோடாகும்.
இந்திய
திட்ட நேரத்தைக் கணக்கிட கிரீன்விச் நேரத்தோடு 5.30 மணியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
புவியானது
150 தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குவார்ட்ஸ்
கடிகாரங்களின் துல்லியம் 109 வினாடிக்கு ஒரு வினாடி ஆகும்.
அணு
கடிகாரங்களின் துல்லியம் 1013 வினாடிக்கு ஒரு வினாடி ஆகும்.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் .
1. கீழ்கண்டவற்றுள்
எது வழி அளவு கிடையாது?
1) பரப்பளவு 2) கன அளவு 3) நீளம் 4) அடர்த்தி.
விடை : நீளம்.
2. பின்வருவனவற்றுள்
எது SI அலகு முறைப்படி சரியானது?
1) newton 2) Joule 3)
kgs 4) M.
விடை : newton.
(விடைக்கான
காரணம் : SI அலகு முறையில் Capital Letter மற்றும் Plural Form இடம் பெறக் கூடாது)
3. மிக துல்லியத் தன்மை
கொண்ட கடிகாரம் எது?
1) அணுக் கடிகாரம் 2) எண்ணிலக்க கடிகாரம்
3) குவார்ட்ஸ் கடிகாரம் 4) சூரியக் கடிகாரம்.
விடை : அணுக்கடிகாரம் .
4. பொருத்துக.
வெப்பநிலை - கேண்டிலா
பொருளின்
அளவு -
கெல்வின்
ஒளிச்செறிவு -
மோல்
நிறை - கிலோகிராம்.
விடை :
வெப்பநிலை - கெல்வின்
பொருளின் அளவு - மோல்
ஒளிச்செறிவு - கேண்டிலா
நிறை -
கிலோகிராம்.
முக்கிய வினாக்கள்.
1. பின்வருவனவற்றுள்
எது வழி அளவு?
1) நிறை 2) நேரம் 3)
பரப்பு 4) நீளம்.
விடை : பரப்பு.
2. அடர்த்தியின்
SI அலகு எது?
1) கிகி / மீ2 2) கிகி / மீ3 3) கிகி / மீ 4) கிகி / செமீ.
விடை : கிகி / மீ3
.
3. பொருத்துக.
தொலைவு - கிலோ கிராம்
நிறை - ஒளி ஆண்டு
தளக்கோணம் - ஸ்ட்ரேடியன்
திண்மக் கோணம் - ரேடியன்.
விடை :
தொலைவு –
ஒளி ஆண்டு,
நிறை –
கிலோ கிராம்,
தளக்கோணம் –
ரேடியன்,
திண்மக் கோணம் – ஸ்ட்ரேடியன்.
4. தவறான இணையைக் கண்டறியவும்.
பரப்பு -
நீளம் × அகலம்
கன அளவு - நீளம் × அகலம்
× உயரம்
மின்னூட்டம் - மின்னோட்டம் × நேரம்
அடர்த்தி - நிறை × கன அளவு
.
விடை : நிறை × கன அளவு .
5. ஓர் இலையின் பரப்பை
எதைப் பயன்படுத்திக் கண்டறியலாம்?
1) வண்ணத் தாள் 2) வரைபடத் தாள் 3) வட்டத் தாள் 4) செய்தித்
தாள்.
விடை : வரைபடத் தாள் .
6. சூரிய குடும்பத்திற்கு
அருகில் உள்ள விண்மீன்?
1) துருவ விண்மீன் 2)
கேனிஸ் மைனோரிஸ்
3) ப்ராக்சிமா சென்டாரி 4)
பிக் டிப்பர் .
விடை : ப்ராக்சிமா சென்டாரி.
7. தங்கத்தின் அடர்த்தி
எவ்வளவு கிகி/ மீ3?
1) 19000 2) 19100 3) 19300 4) 19400.
விடை : 19300.
8. 900
என்பதை ரேடியனாக மாற்றுக.
1) π/2 ரேடியன் 2) π/3 ரேடியன் 3) π ரேடியன் 4) 3ரேடியன்.
விடை : π/2 ரேடியன்.
9. பாதரசத்தின் அடர்த்தி
எவ்வளவு கிகி/மீ3?
1) 13000 2) 13100 3)
13300 4) 13600
விடை : 13600 .
10. π/4 ரேடியனின் மதிப்பு
எவ்வளவு?
1) 600 2) 450 3) 300 4) 150 .
விடை : 450 .
11. பின்வருவனவற்றுள்
முப்பரிமாணம் கொண்டது எது?
1) தளக்கோணம் 2) திண்மக் கோணம்
3) செங்கோணம் 4) ஐங்கோணம்.
விடை : திண்மக்கோணம்.
*****
No comments:
Post a Comment