Monday, 23 November 2026

NMMS - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் & எட்டாம் வகுப்பு.

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்.

இயற்பியல் மாற்றங்களில் புதிய பொருள் உருவாகாது. இயற்பியல் மாற்றங்கள் தற்காலிகமானது, மீள் தன்மை கொண்டது.

உருகுதல், உறைதல், ஆவியாதல், ஆவி சுருங்குதல், பதங்கமாதல், படிகமாக்கல் போன்றன நிலை மாற்றங்கள் ஆகும். அதாவது இவை இயற்பியல் மாற்றங்கள்.

நீர் ஆவியாதல், பனிக்கட்டி உருகுதல், நீர் உறைதல், மணலினையும் நீரினையும் கலத்தல், தகரம் நசுங்குதல், மரக்கட்டையினை வெட்டுதல் போன்றன இயற்பியல் மாற்றங்கள்.

தீக்குச்சி எரிதல், இரும்பு துருப்பிடித்தல், உணவு செரித்தல், முட்டையை வேக வைத்தல், வாழைப்பழம் அழுகுதல், கட்டை எரிதல் போன்றன வேதியியல் மாற்றங்கள் ஆகும்.

பருவகால மாற்றங்கள், அமாவாசை, பௌர்ணமி, ஊசலின் அலைவு, இதயத் துடிப்பு, கடிகார முட்களின் இயக்கம் ஆகியன கால ஒழுங்கு மாற்றமாகும்.

விபத்து, சுனாமி, நிலச்சரிவு, இடி, மின்னல் போன்றன கால ஒழுங்கற்ற மாற்றம்.

சோடியம் ஹைட்ராக்ஸைடை நீரில் கரைத்தல் வெப்ப உமிழ் வினையாகும்.

குளுக்கோஸ் நீரில் கரைதல் வெப்ப ஏற்பு மாற்றமாகும்.

காற்றின் ஈரப்பதம் அதிகமிருந்தால் இரும்பு துருப்பிடித்தல் விரைவாக நடக்கும்.

இரும்புப் பொருட்களின் மீது பெயிண்ட் அடித்தல், கிரீஸ் பூசுதல், துத்தநாகம் அல்லது குரோமியம் பூசூதல் துருப்பிடித்தலைத் தடுக்கும் முறையாகும்.

மெக்னீசியம் நாடா எரியும் போது மெக்னீசியம் ஆக்சைடு எனும் புதிய பொருள் உருவாகிறது.

ஈஸ்ட், பாக்டீரியாக்களால் சர்க்கரைக் கரைசல் ஆல்கஹாலாகவும் கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறும் நிகழ்வு நொதித்தல் எனப்படும்.

நொதித்தலை முதன் முதலில் விவரித்தவர் லூயி பாஸ்டியர். இவர் ரேபிஸ் நோய்க்கு (வெறிநாய்க் கடி) மருந்து கண்டுபிடித்தவர் ஆவார்.

சமையல் சோடா (சோடியம் பை கார்பனேட்) மற்றும் சிட்ரிக் அமில வினையில் சோடியம் சிட்ரேட்டும் கார்பன் டை ஆக்சைடும் நீரும் உண்டாகின்றன.

வெப்பம், அழுத்தம், ஒலி, ஒளி, வீழ்படிவு, வாயுக்கள் உருவாதல் ஆகியன வேதி வினையின் விளைவுகளாகும்.

சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்சைடு) நீர் சேர்க்கும் போது நீற்றுச் சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) கிடைக்கிறது.

சில்வர் நைட்ரேட்டும் சோடியம் குளோரைடும் சேர்ந்து சோடியம் நைட்ரேட் கரைசலும் சில்வர் குளோரைடு வீழ்படிவும் உண்டாகின்றன. இவ்வினை கரைசல் நிலையில் நடக்கும் வினையாகும்.

சல்ப்யூரிக் அமிலம் சேர்ந்த நீரில் மின்சாரத்தைச் செலுத்தும் போது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வாயுக்களாக வெளிப்படுகின்றன.

பிரைன் எனும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைடும் அத்துடன் குளோரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளிவருகின்றன. இவ்வகை வினைகள் மின்னாற் பகுத்தல் எனப்படுகின்றன. இச்சொல்லை அறிமுகப்படுத்தியவர் மைக்கேல் பாரடே.

லெட் நைட்ரேட் உப்பினைச் சுடரின் மீது காட்டும் போது ஒலியிடன் செம்பழுப்பு நிற நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது.

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிப்பில் வினையூக்கியாகச் செயல்படுவது இரும்பு.

வனஸ்பதி நெய் தயாரிப்பில் வினையூக்கியாகச் செயல்படுவது நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம்.

என்சைம்கள் மற்றும் நொதிகள் உயிரி வினையூக்கிகள் ஆகும்.

அழுகிய முட்டையிலிருந்து வெளிப்படும் வாயு ஹைட்ரஜன் சல்பைடு.

ஆப்பிளில் காணப்படும் என்சைம் பாலி பீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ்.

பழுப்பு நிறமிகள் மெலனின்.

தீக்குச்சியின் தலைப்பகுதியில் பொட்டாசியம் குளோரேட்டும் ஆன்டிமணி டிரை சல்பைடும் உள்ளன.

தீப்பெட்டியின் பக்கவாட்டில் சிவப்பு பாஸ்பரஸ் பூசப்படுகிறது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

குளுக்கோசும் உயிர்வளியும் வினைபுரிந்து கிடைப்பன எவை?

            1) ஆக்சிஜன் + நீர்.                           2) கரியமில வாயு + நீர்.

            3) எத்தில் ஆல்கஹால் + நீர்.        4) கரியமில வாயு + ஆக்சிஜன்.

விடை : கரியமில வாயு + நீர்.

எண்ணெய் தீப்பற்றி எரியும் போது எதைப் பயன்படுத்தக் கூடாது?

            1) மண்.                                              2) நீர்.

            3) கார்பன் டை ஆக்சைடு.             4) நுரைப்பான்.

விடை : நீர்.

இரும்பு துருப்பிடித்தல் எவ்வகை எரிதலுக்கு உதாரணம்?

            1) முற்றுப்பெறா.                            2) அதிவேகமாக.

            3) வேகமாக.                                     4) மெதுவாக.

விடை : மெதுவாக.

கீழ்கண்டவற்றுள் எது வேதியியல் மாற்றம்?

            1) பால் தயிராக மாறுதல். 2) குச்சி ஐஸ் உருகுதல்.

            3) படிகமாக்கல்.                  4) காகிதத்தைத் துண்டுகளாக்குதல்.

விடை : பால் தயிராக மாறுதல்.

பின்வருவனவற்றுள் எத்தனை இயற்பியல் மாற்றங்கள் உள்ளன?

உருகுதல், உறைதல், துருப்பிடித்தல், கொதித்தல், நொதித்தல், தயிராகுதல், ஆவி சுருங்குதல்.

            1) 5.                 2) 6.                 3) 4.                 4) 7.

விடை : 4.

ஈஸ்ட் என்பது.

            1) பூஞ்சை.                             2) வினையூக்கி.                    

            3) நுண்ணுயிரி.                     4) அனைத்தும்.

விடை : அனைத்தும்.

சுண்ணாம்புக் கல் எதனை முதன்மையாகக் கொண்டுள்ளது?

            1) சோடியம் குளோரைடு.             2) சோடியம் சல்பைடு.

            3) கால்சியம் கார்பனேட்.              4) கால்சியம் ஆக்சைடு.

விடை : கால்சியம் கார்பனேட்.

புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவை.

            1) கார்பன் டை ஆக்சைடு. 2) குளோரோ புளூரோ கார்பன்.

            3) மீத்தேன்.                           4) அனைத்தும்.

விடை : அனைத்தும்.

உப்பு சேர்க்கப்படாத இட்லி மாவில் தயாரிக்கப்பட்ட இட்லியின் மீது உப்பைத் தூவாமல் உப்பு நீரைத் தெளிப்பதன் அறிவியல் தத்துவம்.

            1) கரைசல் நிலையில் உப்பு நன்கு விரவும்.

            2) உப்பு நீரில் கரையும்.                 

            3) இட்லியின் சுவையைக் கூட்டும்.

            4) உடல் செயல்பாட்டுக்கு உப்பு அவசியம்.

விடை : கரைசல் நிலையில் உப்பு நன்கு விரவும்.

நறுக்கிய ஆப்பிள், உருளைக் கிழங்கு நிறம் மாறக் காரணமான நிறமி எது?

            1) குளோரோபில்.               2) ஹீமோகுளோபின்.

            3) மெலனின்.                       4) சாந்தோபில்.

விடை : மெலனின்.

பதங்கமாகும் பொருளுக்கு உதாரணம்.

            1) கற்பூரம்.                                        2) நாப்தலீன்.

            3) அம்மோனியம் குளோரைடு.   4) அனைத்தும்.

விடை : அனைத்தும்.

மழைநீரில் நைட்ரஜன், சல்பர் ஆக்சைடுகள் கரைவதால் உருவாவது எது?

            1) அமில மழை.                               2) கார மழை.

            3) ஆலங்கட்டி மழை.                     4) அனைத்தும்.

விடை : அமில மழை.

*****

No comments:

Post a Comment