தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல் .
ஏழாம் & எட்டாம் வகுப்பு.
மின்னோட்டவியல் & மின்னியல்.
அனல், நீர், அணு மற்றும் காற்றாலை முறைகளில் டர்பைன் சக்கரத்தைச்
சுழலச் செய்து டைனமோவை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் முறையில் சூரிய
பலகை பயன்படுகிறது.
1899 இல் இந்தியாவில் மின்சாரப் பயன்பாடு துவங்கியது.
இந்தியாவின் முதல் அனல் மின் நிலையம் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
1900 இல் சென்னையில் பேசின் பாலம் அனல் மின் நிலையம் துவங்கப்பட்டது.
அணுவின் உட்கருவில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் உள்ளன.
புரோட்டான் நேர்மின்சுமை கொண்டது. எலெக்ட்ரான் எதிர்மின்சுமை
கொண்டது.
மின்னூட்டத்தின் அலகு கூலூம்.
தனித்துக் காணப்படும் ஒரு துகளின் மின்னூட்டம் சிறும மின்னூட்டம்.
இதன் மதிப்பு 1.602 பெருக்கல் 10 இன் அடுக்கு மைனஸ் 19 கூலூம்.
ஒரு கூலூம் என்பது 6.242 பெருக்கல் 10 இன் அடுக்கு
18 புரோட்டான்கள் அல்லது எலெக்ட்ரான்களின் மின்சுமைக்குச் சமம்.
மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம்.
மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
நேர் முனையில் இருந்து எதிர் முனைக்குச் செல்லும் நேர்
மின்னூட்டங்களின் ஓட்டம் மரபு மின்னோட்டம்.
மின்கலத்தின் எதிர் முனையிலிருந்து நேர்முனைக்குச் செல்லும்
எலெக்ட்ரான்களின் ஓட்டம் எலெக்ட்ரான் ஓட்டம். இது மரபு மின்னோட்டத்தின் திசைக்கு எதிரானது.
மரபு மின்னோட்டமானது உயர் மின்னழுத்தப் புள்ளியிலிருந்து
தாழ் மின்னழுத்தப் புள்ளியை நோக்கிப் பாயும். எலெக்ட்ரான்களின் ஓட்டம் இதற்கு எதிரானது.
எதிர் மின்னூட்டம் கொண்ட கோளம் குறைந்த மின்னழுத்தம் கொண்டதாகவும்,
நேர் மின்னூட்டம் கொண்ட கோளம் உயர் மின்னழுத்தம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட்.
மின்னோட்டத்தை அளவிட அம்மீட்டர் பயன்படுகிறது.
குறைந்த அளவு மின்னோட்டத்தை அளவிட கால்வானா மீட்டர் பயன்படுகிறது.
மின்னழுத்த வேறுபாட்டை அளவிட வோல்ட் மீட்டர் பயன்படுகிறது.
அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்.
மின்தடை என்பது மின்னழுத்த வேறுபாடு பை மின்னோட்டம் ஆகும்.
மின்தடையின் அலகு ஓம்.
மின்கடத்துத் திறனின் அலகு சீமென்ஸ் பை மீட்டர் அல்லது
mho ஆகும்.
மின்தடை எண்ணின் அலகு ஓம் மீட்டர்.
சிப்புகள் சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைகடத்திகளால்
ஆனவை.
வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி மின்கலன்கள்.
வோல்டா மின்கலன், லெக்லாஞ்சி மற்றும் உலர் மின்கலன்கள்
முதன்மை மின்கலங்கள். இவற்றை ஒரு முறை மட்டும் பயன்படுத்த முடியும். மறுமுறை மின்னேற்றம்
செய்து பயன்படுத்த முடியாது. இவற்றில் நடைபெறுவது மீளா வினை. கடிகாரம் மற்றும் ரோபோக்களில்
இது பயன்படுகிறது.
உலர் மின்கலன் யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது. இது லெக்லாஞ்சி
மின்கலத்தின் எளிய வடிவம் ஆகும். இதன் கேதோடு அதாவது எதிர்மின்வாய் துத்தநாக மின்தகடு.
ஆனோடு அதாவது நேர்மின்வாய் கார்பன் தண்டு. மின்பகுளி அம்மோனியம் குளோரைடு. மின்முனைவாக்கி
மாங்கனிசு டை ஆக்சைடு. துத்தநாக குளோரைடு ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது.
காரீய அமில சேமக்கலன், பொத்தான் மின்கலன்கள், எடிசன் சேமக்கலன்,
நிக்கல் இரும்பு சேமக்கலன் போன்றவை துணை மின்கலன்கள்.
துணை மின்கலன்களை மின்னேற்றம் செய்து பலமுறை பயன்படுத்தலாம்.
இவற்றில் நடைபெறும் வினை மீள்வினை. கைபேசி, மடிக்கணினி போன்றவற்றில் பயன்படுகின்றன.
வோல்டா 1791 இல் மின்கல கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
1800 இல் மின்கல அடுக்கினை உருவாக்கினார்.
எளிய, தொடர், பக்க மின்சுற்று என மின்சுற்று மூன்று வகைப்படும்.
தொடர் மின்சுற்றில் மின்னோட்டம் மாறிலி. இம்மின்சுற்றில்
ஒரு மின்விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது.
பக்க மின்சுற்றில் மின்னழுத்தம் மாறிலி.
வெல்டிங் செய்தல் குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும்
வெப்பத்தின் நடைமுறை பயன்பாடு ஆகும்.
உராய்வு, கடத்துதல், மின்தூண்டல் மூலம் மின்துகளான எலெக்ட்ரான்
இடமாற்றம் அடைகிறது.
எபோனைட் தண்டைக் கம்பளியால் தேய்க்க எதிர்மின்னூட்டம் அடைகிறது.
கண்ணாடித் தண்டைப் பட்டுத் துணியால் தேய்க்க நேர் மின்னூட்டம்
அடைகிறது.
மின்னூட்டத்தை அறிய மின்னூட்டங்காட்டி அல்லது நிலைமின்காட்டி
பயன்படுகிறது. இது வில்லியம் கில்பர்ட்டால் கண்டறியப்பட்டது. இது வெர்ச்சோரியம் எனவும்
அழைக்கப்பட்டது.
தங்க இலை மின்னூட்டங்காட்டி ஆபிரகாம் பெனட்டால் கண்டறியப்பட்டது.
மேகங்களுக்கு இடையில் அல்லது மேகங்கள் மற்றும் பூமிக்கு
இடையில் மின்னிறக்கம் நடப்பதால் மின்னல் ஏற்படுகிறது.
மேகங்களின் மேற்பகுதி நேர்மின்னூட்டம் கொண்ட துகள்களாலும்
கீழ்பகுதி எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்களாலும் நிறைந்திருக்கும்.
மின்னலின் மூலம் 3000 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பம்
உருவாகிறது.
இடியோசை கேட்பதற்கு முன்பாக மின்னல் கண்களுக்குத் தெரியும்.
இதற்குக் காரணம் ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தை விட அதிகமாக இருப்பதாகும்.
புவித்தொடுப்பு கம்பி மின்கசிவு அல்லது மின்னதிர்ச்சியிலிருந்து
காக்கிறது.
புவியானது மிகச் சிறந்த மின்கடத்தி.
மின்னல் கடத்தி அல்லது இடிதாங்கி மின்னல் பாதிப்புகளிலிருந்து
பாதுகாக்கிறது.
மின்னாட்டத்தால் வெப்ப, காந்த, இயந்திர ஆற்றல், மின் வேதி
விளைவு ஏற்படுகிறது.
தாமிரத்தால் ஆன மின்கடத்திகள் குறைந்த மின்தடையைக் கொண்டுள்ளது.
மின்கடத்தாப் பொருட்கள் அரிதிற் கடத்திகள். இவை அதிக மின்தடையைக்
கொடுக்கின்றன.
தாமிரக் கம்பி மின்தடை குறைவாகக் கொண்டுள்ளதால் எளிதில்
வெப்பமடையாது.
நிக்கல், இரும்பு, குரோமியம் சேர்ந்த கலவை நிக்ரோம். இது
வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுகிறது.
டங்க்ஸ்டன், குரோமியத்தால் ஆன கம்பி அதிக மின்தடை கொண்டுள்ளதால்
எளிதில் வெப்பமடையும். இது மின்விளக்குகளில் பயன்படுகிறது.
குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் உலோகக்
கலவையால் மின் உருகி தயாரிக்கப்படுகிறது.
மின் சமையற்கலனானது வெப்பமடையும் கம்பிச் சுருளில் இருந்து
வெப்ப ஆற்றலை வெப்பக் கடத்தல் மூலமாகப் பெறுகிறது.
மின்கொதிகலனில் உருவாகும் வெப்பமானது திரவம் முழுவதும்
வெப்பச் சலன முறையில் பரவுகிறது.
குறுசுற்றுத் துண்டிப்பான் தானாகவே மின்சுற்றைத் துண்டிக்கும்.
மீண்டும் மின்சாரத்தைத் தானாகவே மீட்டெடுக்கும்.
மின்னோட்டத்தின் காந்த விளைவு மின்சார மணி, பளு தூக்கி,
தொலைபேசி போன்றவற்றில் பயன்படுகிறது.
உலோகங்களைப் பிரித்தெடுத்தல், தூய்மைப்படுத்தல், மின் முலாம்
பூசுதல் போன்றவற்றில் மின்னாற் பகுத்தல் பயன்படுகிறது.
மின்னாற் பகுத்தல் மின்சாரத்தின் வேதி விளைவு ஆகும்.
துத்தநாக உலோகத்தை இரும்பின் மீது மின்முலாம் பூசும் போது
துத்தநாகம் நேர்மின் முனை, இரும்பு எதிர்மின் முனை, துத்தநாகக் குளோரைடும் ஹைட்ரோ குளோரிக்
அமிலமும் மின் பகுளி ஆகும்.
இரும்பின் மீது துத்தநாகப் பூச்சால் துரு பிடித்தல் தவிர்க்கப்படுகிறது.
உடலில் உருவாகும் மின் சைகைகளின் காரணமாக தசைகள் இயங்குகின்றன.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
ஒளி உமிழ் டையோடு என்பது எப்பொருட்களால் செய்யப்பட்டது?
1) மின்கடத்தும். 2) குறைகடத்தி.
3) மின்கடத்தா. 4) இவை அனைத்தும்.
விடை
: குறைகடத்தி.
நாகமுலாம் பூசுதல் என்பது என்ன?
1) குரோமியத்தை
இரும்பின் மீது பூசுதல்.
2) இரும்பின்
மீது துத்தநாகத்தைப் பூசுதல்.
3) வெள்ளீய
உலோகத்தை இரும்பின் மீது பூசுதல்.
4) வண்ணப்
பூச்சு பூசுதல்.
விடை
: இரும்பின் மீது துத்தநாகத்தைப் பூசுதல்.
சிம் கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்கள் சிலிகான் மற்றும் ஜெர்மேனியத்தால்
ஆனது. அவற்றின் எத்தன்மை நற்கடத்தி மற்றும் காப்பான்களுக்கு இடையில் அமைந்திருக்கும்?
1) காந்தத்
தூண்டல். 2) மின்னோட்டம்.
3) மின்கடத்தும்
திறன். 4) மின்தடை.
விடை
: மின்கடத்தும் திறன்.
செயற்கை இழையால் ஆன துணியால் காற்று நிரப்பப்பட்ட பலூனைத் தேய்த்து சுவரில்
வைத்து அழுத்தினால் பலூன் சுவருடன் ஒட்டிக் கொள்ள காரணமான விசை.
1) காந்த
விசை. 2) தொடு
விசை.
3) அழுத்தம். 4) நிலை மின்னியல் விசை.
விடை
: நிலை மின்னியல் விசை.
முக்கிய வினாக்கள்
நிலைமின்காட்டியின் தத்துவம் யாது?
1) ஓரின
மின்துகள் ஒன்றையொன்று ஈர்க்கும்.
2) ஓரின
மின்துகள் ஒன்றையொன்று விலக்கும்.
3) மின்
நடுநிலைத் தன்மை.
4) மேற்கூறிய
அனைத்தும்.
விடை
: ஓரின மின்துகள் ஒன்றையொன்று விலக்கும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னோட்ட வகை எது?
1) நேர்திசை. 2) மாறுதிசை.
3) எதிர்திசை. 4) அனைத்தும்.
விடை
: மாறுதிசை.
மின்கலத்தின் மின்னோட்ட வகை எது?
1) நேர்திசை. 2) மாறுதிசை.
3) எதிர்திசை. 4) அனைத்தும்.
விடை
: நேர்திசை.
அணுவிலுள்ள மின்சுமையற்ற துகள் எது?
1) புரோட்டான். 2) எலெக்ட்ரான்.
3) நியூட்ரான். 4) அனைத்தும்.
விடை
: நியூட்ரான்.
*****
No comments:
Post a Comment