Monday, 23 November 2026

NMMS - அணு அமைப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் & எட்டாம் வகுப்பு.

அணு அமைப்பு.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள் 118. இவற்றுள் 92 இயற்கையில் கிடைக்கக் கூடியவை. 26 ஆய்வக தயாரிப்பில் கிடைக்கக் கூடியவை.

அணு என்பது அட்டாமஸ் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது.

அணு கொள்கையை வெளியிட்டவர் ஜான் டால்டன்.

அணு என்பது மிகச் சிறிய பிளக்க இயலாத துகள் அத்துடன் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது டால்டனின் அணுக் கொள்கையாகும்.

டால்டனின் அணுக் கொள்கை வேதிச் சேர்க்கை விதி, பொருண்மை அழிவின்மை விதியை விளக்குகிறது.

ஐசோடோப்புகள் என்பவை ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ள அணுக்கள்.

ஐசோபார்கள் என்பவை வெவ்வேறு தனிமத்தின் ஒரே அணுநிறையைப் பெற்றுள்ளவை.

வில்லியம் குரூக் எதிர்மின்வாய்க் கதிர்களுக்கு கேதோடு கதிர்கள் எனப் பெயரிட்டார். இவை எலெக்ட்ரான்கள் ஆகும்.

நேர்மின்வாய் ஆனோடு எனவும், எதிர்மின்வாய் கேதோடு எனவும் அழைக்கப்படுகிறது.

மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது எலெக்ட்ரான்கள் வெளியேறி அயனிகள் உருவாதல் மின்னிறக்கம் எனப்படுகிறது.

தொலைக்காட்சிப் பெட்டியில் கேதோடு கதிர்கள் ஒளிப்படத்தை உருவாக்குகின்றன.

தாம்சன் அணுவைத் தர்பூசணிப் பழத்துடன் ஒப்பிட்டார். இவரது அணுக்கொள்கை அணுக்கரு பற்றியது.

தாம்சனின் அணு மாதிரி நியூட்ரான்களைப் பற்றிக் கூறவில்லை. மேலும் இம்மாதிரியில் அணுநிறை அணு முழுவதும் பரவியிருப்பதாகத் தவறாகக் கருதப்பட்டது.

தாம்சன் அணுவில் எலெக்ட்ரான்கள் காணப்படுவதைச் சோதனை மூலம் நிரூபித்ததற்காக 1906 இல் நோபல் பரிசு பெற்றார்.

மெல்லிய தங்கத் தகட்டினை ஆல்பா கதிர்களைக் கொண்டு மோதச் செய்து ரூதர்போர்டு ஆய்ந்தார்.

அணு மையத்தில் அணுக்கரு நேர்மின் தன்மை கொண்டது. எலெக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. அணுக்கரு அளவில் மிகச் சிறியது என்றார் ரூதர்போர்டு.

ரூதர்போர்டு தனது அணுக்கொள்கைக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

அணுவின் நிறை என்பது அணுக்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் நிறையாகும்.

அணுக்கருவின் வெளியே உள்ள எலெக்ட்ரான்களின் மொத்த எதிர்மின்னூட்டமும் அணுக்கருவின் உள்ளே உள்ள புரோட்டான்களின் மொத்த நேர் மின்னூட்டத்துக்குச் சமம். இதனால் அணுக்கள் மின் நடுநிலைமையுடன் உள்ளன.

புரோட்டான்களைக் கண்டறிந்தவர் கோல்ட்ஸ்டீன்.

நேர்மின்வாய்க் கதிர்கள் ஆனோடு கதிர்கள், கால்வாய் கதிர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

புரோட்டான் ஹைட்ரஜன் அயனி எனவும் அழைக்கப்படுகிறது.

கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் துத்தநாக சல்பைடு பூசப்பட்ட திரையில் ஒளிர்கின்றன.

நியூட்ரானைக் கண்டறிந்தவர் ஜேம்ஸ் சாட்விக். நியூட்ரான் மின்சுமை அற்றது.

ஹைட்ரஜன் தவிர அனைத்து அணுக்களும் நியூட்ரான்களைக் கொண்டுள்ளன.

அணுவில் நியூட்ரான்களின் அமைவிடத்தைப் பற்றிக் கூறியவர் ரூதர்போர்டு.

நியூட்ரானின் நிறை புரோட்டானின் நிறைக்குச் சமம்.

போரின் அணுக்கொள்கை ஆற்றல் மட்டங்களின் அடிப்படையில் அமைந்தது.

ஷிராடிங்கரின் அணுக்கொள்கை எலெக்ட்ரான் கூட்டங்கள் மாதிரி பற்றி கூறுகிறது.

மனித உடலில் ஏழு பில்லியன் செல்கள் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் மனித உடலில் 98 சதவீத செல்கள் இறந்து புதிய செல்கள் உண்டாகின்றன.

ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையே அத்தனிமம் எத்தகையது என்பதை நிர்ணயம் செய்கிறது.

அணுவின் உட்கருவினுள் ஒரு புரோட்டான் இருந்தால் அது ஹைட்ரஜன் அணுவாகும்.

அணுவின் உட்கருவினுள் எட்டு புரோட்டான் இருந்தால் ஆக்சிஜன் அணுவாகும்.

அணு எண் என்பது எலெக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை. இது இசட் என குறிக்கப்படுகிறது.

நிறை எண் என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை. இது. ஏ. என குறிக்கப்படுகிறது.

ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் பெற்ற தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள். புரோட்டியம், டியூட்ரியம், டிரிட்டியம் என்பன ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.

ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் ஐசோபார்கள். கால்சியமும் ஆர்கானும் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

இணைதிறன் என்பது ஓர் அணு எத்தனை ஹைட்ரஜன் அணுக்களைப் பிணைத்து வைத்திருக்க இயலும் என்பதைக் கொண்டு அளவிடப்படுகிறது.

ஆக்சிஜன், கால்சியம், மெக்னீசியத்தின் இணைதிறன் 2.

ஹைட்ரஜன், சோடியம், குளோரினின் இணைதிறன் 1.

கார்பனின் இணைதிறன் 4.

உட்கருவைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களின் பாதை ஆர்பிட் அல்லது எலெக்ட்ரான் கூடு.

கடைசி எலெக்ட்ரான் கூட்டில் உள்ள எலெக்ட்ரான்கள் இணைதிறன் எலெக்ட்ரான்கள். அக்கூடு இணைதிறன் கூடு.

இணைதிறன் கூட்டில் இரண்டு அல்லது எட்டு எலெக்ட்ரான்களைப் பெற்ற அணுக்கள் நிலைத்தன்மை பெற்றவை. எனவே மந்த வாயுக்கள் நிலைத் தன்மை அதிகம் பெற்றுள்ளன.

இணைதிறன் எலெக்ட்ரான்கள் அணுவின் வேதிப்பண்பைத் தீர்மானிக்கின்றன.

சோடியம் ஓர் எலெக்ட்ரானை இழந்து நேர்மின் தன்மை பெறுகிறது.

குளோரின் ஓர் எலெக்ட்ரானை ஏற்று எதிர்மின்தன்மை பெறுகிறது.

உலோக அணுக்கள் இணைதிறன் கூட்டில் 1 முதல் 3 எலெக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.

அலோக அணுக்கள் இணைதிறன் கூட்டில் 4 முதல் 7 எலெக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.

ஹைட்ரஜனோடு வினைபுரியாத தனிமங்களின் இணைதிறனைக் குளோரின், ஆக்சிஜனைப் பொருத்து கணக்கிடலாம்.

தாமிரம் (1,2), இரும்பு (2,3), நைட்ரஜன் (1,3), அலுமினியம் (1,3), மெர்குரி (1,2), டின் (2,4) போன்றவை மாறுபடும் இணைதிறன்களைப் பெற்றுள்ளன.

உலோகம் மற்றும் அலோகம் கலந்த சேர்மத்தின் பெயரை எழுதும் போது உலோகத்தின் பெயரே முதலாவதாக வரும். அலோகத்தின் பெயரோடு ஐடு அல்லது ஏட் அல்லது ஐட் என்ற பின்னொட்டைச் சேர்க்க வேண்டும்.

இரு அலோகங்களைக் கொண்ட சேர்மங்களுக்குப் பெயரிடும் போது மோனோ அல்லது டை அல்லது டிரை அல்லது டெட்ரா அல்லது பென்டா என்கிற முன்னோட்டைச் சேர்க்க வேண்டும்.

ஒரு வேதி வினையை குறியீடுகள் மற்றும் வாய்பாடுகள் வடிவில் எழுதும் குறியீட்டு முறை வேதிச் சமன்பாடு ஆகும்.

வேதிவினையில் ஈடுபடக் கூடிய பொருள்கள் வினைபடு பொருள்கள், உருவாகக் கூடிய பொருள்கள் விளைபொருள்கள் எனப்படுகின்றன.

வேதிச்சமன்பாட்டில் வாயுவை மேல்நோக்கிய அம்புக்குறியாலும், வீழ்படிவைக் கீழ்நோக்கிய அம்புக்குறியாலும் குறிக்க வேண்டும்.

சேர்மங்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை வேதிச் சமன்பாட்டில் மாற்றக் கூடாது.

பொருண்மை அழியா விதியை வெளியிட்டவர் லவாய்சியர்.  இவ்விதியின்படி ஒரு வேதிவினை நிகழும் போது உருவாகும் வினைவிளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடுபொருள்களின் மொத்த நிறைக்குச் சமம்.

வேதிவினையின் மூலம் நிறையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.

நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனிலிருந்து அம்மோனியா உருவாகும் வினை ஹேபர் முறை.

மாறா விகித விதியை வெளியிட்டவர் பிரௌஸ்ட். இதன்படி தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து சேர்மத்தை உருவாக்குகின்றன.

நீரிலுள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் நிறை விகிதம் 1  ஈஸ்ட்  8 ஆகும்.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

பொருந்தாத இணை எது?

            1) நியூட்ரான் – சாட்விக்.                2) புரோட்டான் - டால்டன்.

            3) நியூக்ளியஸ் - ரூதர்போர்டு.      4) எலெக்ட்ரான் - தாம்சன்.

விடை : புரோட்டான் - டால்டன்.

கீழ்கண்டவற்றுள் பூஜ்ஜிய இணைதிறன் கொண்ட தனிமம் எது?

            1) துத்தநாகம்.                                  2) கால்சியம்.

            3) ஹீலியம்.                                      4) சோடியம்.

விடை : ஹீலியம்.

மாறா விகித விதியைக் கூறியவர் யார்?

            1) தாம்சன்.                            2) லவாய்சியர்.

            3) டால்டன்.                         4) ஜோசப் பிரௌஸ்ட்.

விடை : ஜோசப் பிரௌஸ்ட்.

முக்கிய வினாக்கள்

ரூதர்போர்டு மின்னூட்டம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்திய கதிர் எது?

            1) ஆல்பா கதிர்.                               2) பீட்டா கதிர்.

            3) காமா கதிர்.                                   4) எக்ஸ் கதிர்.

விடை : ஆல்பா கதிர்.

நீரில் ஆக்சிஜனின் இணைதிறன் எவ்வளவு?

            1) ஒன்று.                                2) இரண்டு.

            3) மூன்று.                              4) நான்கு.

விடை : இரண்டு.

மீத்தேனில் கார்பனின் இணைதிறன் எவ்வளவு?

            1) ஆறு.                                  2) நான்கு.

            3) இரண்டு.                           4) ஒன்று.

விடை : நான்கு.

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளை அளக்கப் பயன்படும் அலகு எது?

            1) நேனோ மீட்டர்.              2) மில்லி மீட்டர்.

            3) சென்டி மீட்டர்.               4) கிலோ மீட்டர்.

விடை : நேனோ மீட்டர்.

*****

No comments:

Post a Comment