தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் & எட்டாம் வகுப்பு.
விசை, இயக்கம் மற்றும் அழுத்தம்.
கீழே விழும் பொருளின் இயக்கம் நேர்க்கோட்டு இயக்கம்.
கடிகார முள்ளின் இயக்கம் வட்டப்பாதை இயக்கம்.
ஊஞ்சலின் இயக்கம் அலைவு இயக்கம்.
பம்பரத்தின் இயக்கம் சுழற்சி இயக்கம்.
தேனீயின் இயக்கம் ஒழுங்கற்ற இயக்கம்.
புவியின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம்.
காற்றிலாடும் கொடியின் இயக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம்.
சாலையில் நடந்து செல்லும் மனிதரின் இயக்கம் தனித்த இயக்கம்.
தையல் இயந்திரத்தின் இயக்கம் கூட்டு இயக்கம்.
கடிகார முள்ளின் இயக்கம் சீரான இயக்கம்.
நிலையத்திற்கு நிற்க வரும் தொடர்வண்டியின் இயக்கம் சீரற்ற
இயக்கம்.
வான், கடல் தொலைவுகளை அளக்கப் பயன்படும் அலகு நாட்டிக்கல்
மைல். ஒரு நாட்டிக்கல் மைல் 1852 கிலோ மீட்டருக்குச் சமம்.
கப்பல், விமானங்களின் வேகத்தை அளக்கப் பயன்படும் அலகு நாட்.
வேகம் என்பது தொலைவு பை காலம் ஆகும். இதன் அலகு மீட்டர்
பை வினாடி.
திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி பை காலம். இதன் அலகு மீட்டர்
பை வினாடி.
திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாடு முடுக்கம். காலத்தைப்
பொருத்து திசைவேகம் அதிகரிப்பது நேர் முடுக்கம், குறைவது எதிர் முடுக்கம்.
திசைவேகம் சீராக அதிகரிப்பது அல்லது குறைவது சீரான முடுக்கம்.
சீரற்ற முறையில் திசைவேகம் அதிகரிப்பதோ, குறைவதோ சீரற்ற முடுக்கம்.
விசை ஒரு வெக்டர் அளவு. அதாவது எண்மதிப்பும் திசையும் கொண்டது.
விசையின் அலகு நியூட்டன்.
அழுத்தம் என்பது விசை பை பரப்பு. இதன் அலகு பாஸ்கல். ஒரு
பாஸ்கல் என்பது நியூட்டன் / மீட்டர் 2.
வளிமண்டல் அழுத்தத்தை அளக்க பாரமானியைக் கண்டுபிடித்தவர்
டாரிசெல்லி. பாரமானியில் பயன்படுவது பாதரசம்.
கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் 760 மில்லி மீட்டர்
பாதரசத் தம்பம்.
திரவங்கள் மற்றும் வாயுக்களின் அழுத்தத்தை அளவிட மானோமீட்டர்
பயன்படுகிறது.
நீரியல் அழுத்தி, நீரியல் உயர்த்தி, வாகனத் தடைகளில் பாஸ்கல்
விதி பயன்படுகிறது.
திரவங்கள் கோள வடிவைப் பெறக் காரணம் பரப்பு இழுவிசை. இதன்
அலகு நியூட்டன் / மீட்டர்.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
ஒரு மை உறிஞ்சும் குழாயின் முனையை மையினுள் வைத்து அழுத்தும் போது அதனுள்
உள்ள காற்றானது குமிழாக வெளியேறுகிறது. அதன் அழுத்தத்தை நிறுத்தும் போது மையானது உறிஞ்சுக்
குழாயினுள் ஊறுகிறது. அதற்குக் காரணம் எது?
1) மையின்
அழுத்தம். 2) புவியீர்ப்பு
விசை.
3) உறிஞ்சுக்
குழாயின் வடிவம். 4) வளிமண்டல அழுத்தம்.
விடை
: வளிமண்டல அழுத்தம்.
உராய்வு விசை எப்போதும் பொருள் இயங்கும் திசைக்கு எத்திசையில் செயல்படும்?
1) நேர்
திசை. 2) எதிர் திசை.
3) வெவ்வேறு
திசை. 4) அனைத்துத் திசை.
விடை
: எதிர்திசை.
நீரியல் அழுத்தி எதன் அடிப்படையில் இயங்குகிறது?
1) உராய்வு. 2) பரப்பு விசை.
3) திரவங்களின்
பரப்பு விசை. 4) பாஸ்கல் விதி.
விடை
: பாஸ்கல் விதி.
ஒரு மராத்தான் வீரர் 42 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரத்தில் கடக்கிறார்
எனில் அவரின் வேகம் எவ்வளவு?
1)
1.94 கிலோ மீட்டர் பை மணி. 2) 1.94 மீட்டர் பை
வினாடி.
3)
7 மீட்டர் பை வினாடி. 4) 7 கிலோ
மீட்டர் பை மணி.
விடை
: 7 கிலோ மீட்டர் பை மணி.
முக்கிய வினாக்கள்
திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
1) திரவத்தின்
அடர்த்தி. 2) திரவத் தம்ப உயரம்.
3)
1 மற்றும் 2. 4)
திரவத்தின் நிறம்.
விடை
: 1 மற்றும் 2.
பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படாத கருவி எது?
1) நீரியல்
உயர்த்தி. 2) நீரியல் கடிகாரம்.
3) நீரியல்
தடை. 4) நீரியல் அழுத்தி.
விடை
: நீரியல் கடிகாரம்.
சம அளவு விசை தரப்படும் போது எப்பொருளினால் அதிக அழுத்தம் தர இயலும்?
1) ஊசி. 2) கோடரி. 3) கம்பு. 4) கத்தி.
விடை
: ஊசி.
வாகனங்களில் ஓடாமீட்டர் காட்டுவது எதை?
1) வேகம். 2) இடப்பெயர்ச்சி.
3) தொலைவு. 4) முடுக்கம்.
விடை
: தொலைவு.
*****