Tuesday, 2 September 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.09.2025)

1) இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்துள்ளார். இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

2) 7020 கோடி ரூபாய்க்கான வர்த்தக ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாயின.

3) பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

4) ஆறாவது முறையாக இவ்வாண்டு மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

5) புது டெல்லியில் இன்று சரக்கு மற்றும் சேவை வரி குழுமக் கூட்டம் நடைபெறுகிறது. அலைபேசி மற்றும் குளிர்பதனப் பெட்டிகள் விலை குறைவதற்கான வரித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6) வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.

7) டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

8) ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.86 லட்சம் கோடியாக உள்ளது.

Education & GK News

1) President Draupadi Murmu has arrived in Tamil Nadu on a two-day visit. She will attend the convocation ceremony of Tiruvarur Central University today.

2) Trade agreements worth Rs 7020 crore were signed in Germany in the presence of Tamil Nadu Chief Minister M.K. Stalin.

3) Counseling for the appointment of graduate teachers begins today.

4) Mettur dam was filled for the sixth time this year. Surplus water is being released from the dam.

5) A meeting of the Goods and Services Tax Committee is being held in New Delhi today. According to reports, tax revisions will be made to reduce the prices of mobile phones and refrigerators.

6) A low-pressure area has formed in the northwest Bay of Bengal.

7) Heavy rains in Delhi have caused the Yamuna river to overflow.

8) The Goods and Services Tax collection for the month of August is Rs 1.86 lakh crore.

No comments:

Post a Comment