கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.09.2025
1) அரசு கலை அறிவியல்
மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட
உள்ளனர்.
2) மத்திய கல்வி வாரியத்தின்
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 இல் தொடங்குகின்றன.
3) 90 பேருக்குக்
கலைமாமணி விருதைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
4) உளுந்து மற்றும்
குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு
கிலோ உளுந்து 78 ரூபாயாகவும், பயிறு 87.68 ரூபாயுமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5) தமிழக அரசின் முதன்மைச்
செயலர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.
6) மதுரை மற்றும்
சென்னையில் நடைபெற உள்ள இளையோருக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்குத் தமிழ்நாடு
அரசு 100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
7) கப்பல் கட்டும்
துறை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்புத் துறைக்கு 69725 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Education & General Knowledge News – 25.09.2025
1) 881 additional guest lecturers are
to be appointed in government arts, science and education colleges.
2) The Central Board of Education’s
Class 10th and 12th public examinations will begin on February 17.
3) The Tamil Nadu government has
announced Kalaimamani awards for 90 people.
4) The Tamil Nadu government has ordered
the fixing of minimum support prices for black gram and green gram.
Accordingly, black gram has been fixed at Rs 78 per kg and green gram at Rs
87.68.
5) Principal Secretary to the Tamil
Nadu government Beela Venkatesan passed away due to health problems. She was 56
years old.
6) The Tamil Nadu government has
allocated Rs 100 crore for the Junior Hockey World Cup to be held in Madurai
and Chennai.
7) The Central Government has
allocated Rs 69725 crore for the shipbuilding sector and maritime
infrastructure sector.
No comments:
Post a Comment