Tuesday, 23 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.09.2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.09.2025

1) அக்டோபர் 2 இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்களைப் பங்கேற்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2) பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க ‘வளர்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’ என்ற முன்னெடுப்பு துவங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

3) கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கன மழையில் 10 பேர் பலியாகினர்.

4) தங்கத்தின் விலை சவரனுக்கு 85000 ரூபாயைக் கடந்தது.

5) நாளை புதுதில்லியில் நடைபெறும் உணவுத்துறைக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

6) 2027 இல் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

7) போரை நிறுத்த விட்டால் ரஷ்யா மீது கடும் வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.







Education & General Knowledge News – 24.09.2025

1) The School Education Department has advised school teachers to participate in the Gram Sabha meeting to be held on October 2.

2) Union Education Minister Dharmendra Pradhan has announced that an initiative called ‘Developed Bharat Hackathon’ will be launched to promote the innovation skills of school students.

3) 10 people died in heavy rains in Kolkata.

4) The price of gold crossed Rs 85,000 per sovereign.

5) Prime Minister Narendra Modi will inaugurate the Food Industry Expo to be held in New Delhi tomorrow.

6) ISRO has said that humans will be sent to space from India in 2027.

7) US President Donald Trump has warned that heavy taxes will be imposed on Russia if it does not stop the war.

No comments:

Post a Comment