கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.09.2025)
இன்று பேரறிஞர் அண்ணாவின்
117 ஆவது பிறந்த தினம்.
1) பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய்
வழங்கும் அன்புக்கரம் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
2) கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
2000 கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
3) ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான மூங்கில் உயிரி எத்தனால் ஆலையை
அசாமில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகில் இப்படி ஓர் ஆலை நிறுவப்படுவது
இதுவே முதல் முறையாகும்.
4) மிசோராமின் முதல் தொடர்வண்டி வழித்தடத்தைப் பிரதமர் திறந்து
வைத்தார்.
5) வரத்துக் குறைவாகக் காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2100 ரூபாயாக
உயர்ந்தது.
6) சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு தொடர்பான பதாகைகளை வணிக
நிறுவனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வலியுறுத்தியுள்ளார்.
7) ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள்
நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Education & GK News
Today is the 117th
birth anniversary of Perarignar Anna.
1) Tamil Nadu Chief Minister MK Stalin will launch the
Anbukaram scheme today, which will provide Rs 2,000 per month to children who
have lost their parents.
2) Tamil Nadu Chief Minister MK Stalin laid the
foundation stone for projects worth Rs 2,000 crore at a government function in
Krishnagiri.
3) Prime Minister Narendra Modi inaugurated a bamboo
bio-ethanol plant worth Rs 5,000 crore in Assam. This is the first time such a
plant has been set up in the world.
4) The Prime Minister inaugurated Mizoram's first train
route.
5) Jasmine rose to Rs 2,100 per kg due to low supply.
6) Finance Minister Nirmala Sitharaman has urged
business entities to display banners related to the reduction in the Goods and
Services Tax.
7) US President Donald Trump has said that NATO
countries should stop buying crude oil from Russia.
No comments:
Post a Comment