Sunday, 21 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.09.2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.09.2025

1) இன்று முதல் சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்த்திருத்தங்கள் (GST 2.0) அமலாகின்றன. அலைபேசி, தொலைகாட்சி உள்ளிட்ட பல பொருட்களின் விலை வரிக்குறைப்பால் குறைகின்றன.

2) மேல்நிலைப் பள்ளிகளில் திறன் மேம்பாடு சார்ந்த பாடத்திட்டத்தைச் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

3) இன்று முதல் தொடர்வண்டி நிலையங்களில் விற்பனையாகும் நீர்ப்புட்டிகளின் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது.

4) தமிழகத்தில் செப்டம்பர் 24 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

5) செப்டம்பர் 30க்குள் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் துவங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

6) எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) ஆளில்லா விமானப் பயிற்சி (டிரோன்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

7) ஆப்கனின் மிகப்பெரிய விமான தளமான பக்ராம் விமான தளத்தை அமெரிக்காவின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற டொனாட்ல்ட் டிரம்பின் கோரிக்கையை அந்நாட்டின் தலிபான் அரசு நிராகரித்துள்ளது.

8) பாலஸ்தீன தனிநாடு கோரிக்கையை கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் அங்கீகரித்துள்ளன.

Education & General Knowledge News – 22.09.2025

1) Goods and Services Tax (GST 2.0) reforms will come into effect from today. The prices of many items including mobile phones and televisions will come down due to tax cuts.

2) Union Education Minister Dharmendra Pradhan has said that the central government is considering including a skill development curriculum in higher secondary schools.

3) The price of water bottles sold at railway stations will be reduced by one rupee from today.

4) Moderate rains are likely in Tamil Nadu till September 24.

5) The Central Election Commission has instructed the state election commissions to start intensive voter verification work by September 30.

6) Drone training has been made mandatory in the Border Security Force (BSF).

7) The Taliban government has rejected Donald Trump's request to bring Bagram Air Base, Afghanistan's largest air base, under American control.

8) Canada, Britain, and Australia have recognized the Palestinian demand for a separate state.

No comments:

Post a Comment