கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் (16.09.2025)
1) மத்திய கல்வி வாரியப்
பள்ளிகளில் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப் பதிவும், அக மதிப்பீடும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2) வருமான வரி தாக்கல்
செய்ய நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக
வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
3) நாய் கடித்தவர்கள்
உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
4) முற்றிலும் இந்தியாவிலேயே
தயாரிக்கப்பட்ட ஆந்த்ரோத் நீர்மூழ்கிக் கப்பல் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
5) உஸ்பெகிஸ்தானில்
நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சாதனையாளர் பரிசை இந்தியாவின் வைஷாலி பெற்றார்.
Education & GK News
1) 75 percent attendance and internal
assessment have been made mandatory for students appearing for Class 10 and
Class 12 exams in Central Board of Secondary Education (CBSE) schools.
2) The Income Tax Department has
announced that an additional day will be given today as the deadline for filing
income tax returns expired yesterday.
3) The Health Department has advised
that those bitten by dogs should get rabies vaccination immediately.
4) The fully-made Androth submarine
was handed over to the Navy.
5) India's Vaishali won the
championship prize in a chess tournament held in Uzbekistan.
*****
No comments:
Post a Comment