Thursday, 25 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.09.2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.09.2025

1) உயர்கல்வியில் உன்னத நிலை அடைவதே தமிழகத்தின் இலக்கு எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2) தமிழ்மொழி திறனறித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

3) தமிழ் மின் நூலகத்தில் கணித மேதை சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட காலமாகப் பாதுகாத்துவைக்கப்பட்டிருந்த கணித மேதை சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப்படிகள், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சீனிவாச இராமானுஜனின் கையெழுத்துப் படிகள், 3 தொகுதிகளில் ஏறத்தாழ 700 பக்கங்களாக, இதில் இடம்பெற்றுள்ளன.

இம்மின் நூலகத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tamildigitallibrary.in

4) தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட.

ஆனால் தற்போது புதிய நடைமுறையில், 18 ஆவது சுற்றில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும். 20 சுற்றுகள் இருந்தால் 18 ஆவது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அடுத்தசுற்று எண்ண வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

5) சரக்கு மற்றும் சேவை வரி சீர்த்திருத்தங்கள் தொடரும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6) 2000 கி.மீ தாண்டி இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அக்னி பிரைம் ஏவுகணையைத் தொடர்வண்டியிலிருந்து வெற்றிகரமாகச் செலுத்தி சோதிக்கப்பட்டது.

7) எண்ம பணப் பரிவர்த்தனைக்கு (டிஜிட்டல் டிரான்சாக்சன்) புதிய நெறிமுறைகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 லிருந்து அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.






Today's Education & General Knowledge News – 26.09.2025

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that Tamil Nadu's goal is to achieve excellence in higher education.

2) The exam hall ticket for the Tamil Language Aptitude Test has been published on the website.

3) Minister Palanivel Thiagarajan has said that the manuscripts of mathematician Srinivasa Ramanujan have been uploaded to the Tamil e-Library.

The manuscripts of mathematician Srinivasa Ramanujan, which were preserved in the Madras University Library for a long time, have been electronically printed and uploaded to the Tamil e-Library as per the directions of the Chief Minister.

The manuscripts of Srinivasa Ramanujan, which are approximately 700 pages in 3 volumes, are included in this.

Click on the link below to go to this e-Library.

 https://tamildigitallibrary.in

4) The Election Commission has announced a new procedure for declaring the results of postal votes during the elections.

Earlier, instead of counting the postal votes and declaring the results, the results of postal votes were declared after counting the votes recorded in the electronic voting machines and declaring the results of all the rounds.

But now, under the new procedure, the postal votes should be counted and the results should be declared in the 18th round. If there are 20 rounds, the postal votes should be counted and the results should be declared at the end of the 18th round. The next round should be counted only after the postal votes are counted and the results are declared. The Election Commission has sent a circular to all state election commissioners stating that the rejected postal votes should be subjected to mandatory re-verification.

5) Prime Minister Narendra Modi has said that the Goods and Services Tax reforms will continue.

6) The Agni Prime missile, which can accurately hit targets beyond 2000 km, was successfully test-fired from a train.

7) The Reserve Bank of India plans to implement new norms for digital transactions from April 1 next year.

No comments:

Post a Comment