கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.09.2025)
1) துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12 இல் பதவி ஏற்பார்.
2) பள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு படிப்புகளை சென்னை,
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) தொடங்கியுள்ளது.
3) தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா
காய்ச்சல் என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
4) இசைத் துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்குத் தமிழக அரசு
சார்பில் செப்டம்பர் 13 அன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
5) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்புக்கு 1600 கோடி
ரூபாயையும், இமாச்சலப் பிரதேசத்துக்கு 1500 கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
6) நேபாளத்தில் நடைபெற்று வரும் கிளர்ச்சிகளால் அந்நாட்டுக்குப்
பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
7) பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருப்பதாக
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Education & GK News
1) Vice President-elect C.P. Radhakrishnan will take
office on September 12.
2) The Indian Institute of Technology (IIT), Chennai,
has started artificial intelligence courses for school teachers.
3) The health department has explained that the rapidly
spreading fever in Tamil Nadu is influenza fever.
4) The Tamil Nadu government will felicitate Ilayaraja,
who celebrated his golden jubilee in the music industry, on September 13.
5) The central government has allocated Rs 1600 crore
for Punjab, which was affected by rains and floods, and Rs 1500 crore for
Himachal Pradesh.
6) The Indian government has asked people to avoid
traveling to Nepal due to the ongoing unrest.
7) US President Donald Trump has said that he is looking
forward to talking to Prime Minister Narendra Modi.
No comments:
Post a Comment