வருமான வரிக்கழிவுகள் / வரிச்சலுகைகள் - 2024
வருமான வரித் திட்டமிடலை நிதியாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல்
மாதத்திலேயே திட்டமிட்டுக் கொள்வது பயனுள்ளதாகும். இதனால் மாதந்தோறும் கட்ட வேண்டிய
வருமான வரித் தொகையைக் கணக்கிட்டு அதன்படி மாதந்தோறும் தவணைகளைச் செவ்வனே செலுத்தி
வர இயலும். இப்படிச் செலுத்துவது பிப்ரவரி மாதத்தில் வருமான வரி செலுத்தும் போது சுலபத்தையும்
எளிமையையும் உணர வைக்கும்
வருமான வரித் திட்டமிடலில் வரிக்கழிவுகள் எனப்படும் வரிச்சலுகைகள்
முக்கியமானவை. பழைய வருமான வரி முறை மற்றும் புதிய வருமான வரி முறைக்கான வரிக்கழிவுகள்
அல்லது வரிச்சலுகைகள் பற்றிக் கீழே உள்ள அட்டவணை மூலமாக ஒப்பிட்டு அறிந்து கொள்வோம்.
இது குறித்த அறிதல் வருமான வரிக்கான திட்டமிடலில் இரண்டு முறைகளிலும் கணக்கிட்டு உங்களுக்கு
உகந்த முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உங்களுக்குப் பெரிதும் உதவும்.
பழைய வருமான வரி
முறைக்கான வரிச்சலுகைகள் |
புதிய வருமான வரி
முறைக்கான வரிச்சலுகைகள் |
நிரந்தரக் கழிவு ரூ.50,000/- |
நிரந்தரக் கழிவு ரூ.50,000/- |
வீட்டு வாடகைப்படிச் சலுகை |
பிரிவு 51 IIA குடும்ப ஓய்வூதிய வருமானக் கழிவு
ரூ.15,000/- வரை |
80C சலுகைகள் ரூ.1,50,000/- வரை Ø போது சேமநல நிதி (பி.பி.எப்.) Ø ஊழியர் சேமநல நிதி (இ.பி.எப்.) Ø தன்விருப்பு சேமநல நிதி (வி.பி.எப்.) Ø மூன்றாண்டு கால வரிச்சேமிப்புக்கான பங்கு சார்ந்த
பரஸ்பர நிதி முதலீடு (இ.எல்.எஸ்.எஸ்) Ø 5 ஆண்டு நிரந்த வைப்பு (எப்.டி.) Ø செல்வமகள் Ø தேசியச் சேமிப்பு பத்திரம் Ø கல்விக் கட்டணம் |
80CCD (2) தேசிய ஓய்வூதிய முறைமையில் நிறுவனத்தின்
பங்களிப்பு |
80CCD (1B) ரூ.50,000 தேசிய ஓய்வூதிய முறைமை (என்.பி.எஸ்.)
பணியாளரின் பங்களிப்பு |
அலுவலகச் சுற்றுலா, போக்குவரத்து, பணிமாற்றம்,
தினசரி படி போன்ற சலுகை |
80D மருத்துவக் காப்பீட்டுத் தொகை வரிதாரருக்கு ரூ.25,000/- பெற்றோருக்கு ரூ.25,000/- (60 வயதுக்குள்), ரூ.50,000/-
(60 வயதுக்கு மேல்) |
மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்துச் சலுகைப்படி |
24B வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சம் வரையில் |
10 (10C) பிரிவின்படி விருப்ப ஓய்வு பணம் |
80DDB மருத்துவச் செலவு |
10 (10) பிரிவின்படி பணிக்கொடை |
80E கல்விக்கடனுக்கான வட்டிச் செலுகை |
10 (10AA) பிரிவின்படி விடுப்பு சலுகைப்படிகள் |
80EEA வீட்டுக்கடன் கூடுதல் வட்டி ரூ.1.5 லட்சம்
வரை |
கடனில் வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டுக்
கடனுக்கான வட்டிச் சலுகை |
80EEB மின்சார வாகனக் கடன் வட்டி ரூ.1.5 லட்சம்
வரை |
|
80G அறக்கட்டளை நன்கொடை |
|
உணவுச்சலுகை ரூ.25,000/- வரை |
|
தொழில் வரி |
|
விடுமுறை கால பயணப்படி (எல்.டி.ஏ.) மற்றும் இதர
அலுவலகச் சலுகைகள் |
*****
No comments:
Post a Comment