ஏப்ரல் 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம்
ஏப்ரல் 2023 மாதத்திக்கான
சிறார் திரைப்படமாக ‘ஹரிதாஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம்
நேரடித் தமிழ்த் திரைப்படமாகும். இதுவரை பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ‘மல்லி’ என்ற
திரைப்படத்திற்கு அடுத்ததாக இத்திரைப்படமே நேரடித் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டிசம் எனும் கற்றல் குறைபாட்டைப்
பற்றி பேசும் இத்திரைப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார்.
2013 இல் வெளியான இத்திரைப்படத்தில்
கிஷோர், பிரித்விராஜ், சினேகா, சூரி, பிரதிப் ரவட் போன்றோர் நடித்துள்ளனர்.
கிஷோர் காவலராகவும் (என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட்) ஆட்டிச பாதிப்புள்ள குழந்தையின் தந்தையாகவும் நடித்துள்ளார்.
பிரித்விராஜ் ஆட்டிசம் பாதித்த
குழந்தையாக நடித்துள்ளார்.
சினேகா மாநகராட்சிப் பள்ளி
ஆசிரியையாகவும் ஆட்டிசம் பாதித்த குழந்தை மேல் உள்ள நேசம் கொண்டவராகவும் நடித்துள்ளார்.
சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
பிரதிப் ரவட் வில்லனாக நடித்துள்ளார்.
காவலராகத் தொழில் வாழ்க்கையின்
நெருக்கடிகளுக்கு இடையே ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையின் தேவையைக் கிஷோர் எப்படி நிறைவு
செய்ய முயற்சிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் திரைக்கதையாகும்.
குதிரையைக் கண்டு உற்சாகம்
அடைவதைக் கண்டு ஓடுவதில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டறியும் கிஷோர்
பிரித்விராஜை ஓட்டப்பந்தய வீரனாக்க முயல்கிறார்.
அந்தக் கனவு நிறைவேறும் இடத்தில்
நிறைவில் வில்லன்களைத் தீர்த்துக் கட்டி அவரும் இறக்கிறார். சினேகா அக்குழந்தையைத்
தாங்கிப் பிடிக்கும் தாயாகக் கிஷோரின் இடத்தை நிறைவு செய்கிறார்.
11வது சென்னை பன்னாட்டுத்
திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. குழந்தை
நட்சத்திரத்திற்கான சிறப்பு விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.
இத்திரைப்படத்தை யூடியூப்பில்
காண கீழே உள்ள இணைப்பை இயக்கவும். (ப்ளே செய்யவும்)
*****
No comments:
Post a Comment