உங்கள் பத்திரம் உங்கள் பெயரில் இருக்கிறதா?
உங்கள் பத்திரம் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா என்பதை எப்படி
அறிந்து கொள்வது தெரியுமா? உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அது ஒரு வழி.
மற்றொரு வழி இதற்கென இருக்கும் இணையதளத்தின் மூலமாக அறிந்து
கொள்ளலாம். இதற்கென தமிழக அரசின் இணையதளம் ஒன்று இருக்கிறது. அதே நேரத்தில் இந்த இணையதளத்தின்
மூலமாக நீங்கள் வாங்க இருக்கும் இடத்தின் பத்திரம் அந்த உரிமையாளர் பெயரில்தான் இருக்கிறதா
என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் ஓர் இடத்தின் பத்திரம் யார் பெயரில் இருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவும். இதற்கென உள்ள இந்த இணையதளத்தில்
சென்று ‘ஆவணம் வாரியாக’ என்பதைத் தெரிவு செய்து, அந்த இடத்திற்கான சார் பதிவாளர் அலுவலகம், பத்திர எண், பதிவு செய்த வருடம் ஆகிய
மூன்று விவரங்களையும் கொடுத்தால் அந்த இடம் யார் பெயரில் பதியப்பட்டுள்ளது என்பதை அறிந்து
கொள்ளலாம். அதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment