Wednesday 19 April 2023

மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான வகுத்தல் மற்றும் கூட்டல் கலந்த கணித விநோதங்கள்

மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான

வகுத்தல் மற்றும் கூட்டல் கலந்த கணித விநோதங்கள்

மெல்ல மலரும் கணித மாணவர்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களில் திறன் பெறச் செய்வது கணித ஆசிரியரின் அடிப்படைக் கடமையும் பொறுப்பும் ஆகும்.

கணித அடிப்படைச் செயல்களில் திறன் பெற வழக்கமான கணக்குகளைக் கொடுப்பதை விட வினோதங்கள் அடங்கிய கணக்குகளைக் கொடுக்கும் போது மெல்ல மலரும் மாணவர்களின் கணித ஆர்வம் தூண்டப்படும்.    

அவ்வகையில் வகுத்தலும் கூட்டலும் கலந்த இக்கணித வினோத கணக்குகளை மெல்ல மலரும் கணித மாணவர்களுக்கான பயிற்சியாக வழங்கலாம்.

111 ÷ (1 + 1 + 1)  = 37

222 ÷ (2 + 2 + 2)  = 37

333 ÷ (3 + 3 + 3)  = 37

444 ÷ (4 + 4 + 4)  = 37

555 ÷ (5 + 5 + 5)  = 37

666 ÷ (6 + 6 + 6)  = 37

777 ÷ (7 + 7 + 7)  = 37

888 ÷ (8 + 8 + 8)  = 37

999 ÷ (9 + 9 + 9)  = 37

•••••

No comments:

Post a Comment