சர்வேயில் பயன்படும் செயின் பற்றி அறிவோமா?
சர்வேயர்கள் நிலங்களை அளக்க
செயினைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயினில் 100 வளைய இணைப்புக் கம்பிகள் இருக்கும்.
இந்த இணைப்பை லிங்க் என்பார்கள். 100 லிங்க் இணைந்து ஒரு செயினை உருவாக்கும்.
இந்தச் செயினின் நீளம்
20 மீட்டர் ஆகும். அடி கணக்கில் பார்த்தால் 66 அடி ஆகும்.
இந்த செயினைக் கொண்டு ஒரு
சதுரத்தை அமைத்தால் அதன் பரப்பு 400 சதுர மீட்டர். சதுர அடியில் பார்த்தால் 4356 சதுர
அடி ஆகும். இப்பரப்பு 10 சென்ட் அளவைக் குறிக்கும். இதிலிருந்து ஒரு சென்ட் பரப்பைப்
பத்தால் வகுத்துப் பெற்றால் 435.6 சதுர அடி ஆகும். 10 சென்ட் அளவுக்கான 4356 சதுர அடியை
10 ஆல் பெருக்கினால் 43560 சதுர அடி கிடைக்கும். இப்பரப்பே ஒரு ஏக்கர் என்பதாகும்.
இந்தச் செயினைச் சங்கிலி
என்றும் குறிப்பிடுவர். அதாவது ஒரு செயின் அல்லது சங்கிலி என்றால் 20 மீட்டர் அல்லது
66 அடியைக் குறிக்கும்.
ஒரு செயினைப் பத்தால் பெருக்கினால்
200 மீட்டர் அல்லது 660 அடி கிடைக்கும். இதுவே ஒரு பர்லாங் என்று புழக்கத்தில் உள்ள
அளவாகும்.
*****
No comments:
Post a Comment