Tuesday, 4 April 2023

முதலீட்டுக்கு முன் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை

முதலீட்டுக்கு முன் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை

இந்தியப் பங்குச் சந்தையான ‘தேசியப் பங்குச் சந்தை’ (நேஷனல் ஸ்டாக் எக்சேன்ஜ் - NSE) பின்வரும் விழிப்புணர்வு விவரங்களைப் பகிர்கிறது. பண முதலீடு செய்பவர்களுக்கு இந்த விவரங்கள் அவசியமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இந்த விவரங்களை அறிந்திருக்கலாம். தேசியப் பங்குச் சந்தை இந்த விழிப்புணர்வு விவரங்களை பல வழிகளில் விளம்பரப்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்கள் தரும் விழிப்புணர்வுக்காகவும் உண்மைத் தன்மைக்காகவும் நானும் மீண்டும் ஒரு முறை இந்த விவரங்களைப் பகிர்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

அந்த விவரங்களாவன,

ü முதலீட்டுக்கு அதிக முதிர்வுத் தொகை தருவதாகச் சொல்லும் வாக்குறுதி திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

ü பங்குகள் மற்றும் டெரிவேட்டிவ்களில் நிச்சய உத்தரவாதத் தொகை தருவதாகச் சொல்லும் எந்த விதமான வாய்வழியான மற்றும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை நம்ப வேண்டாம்.

ü முதலீடு செய்வது பற்றிய முழு விவரங்களையும் அறிந்து வைத்திருங்கள்.

ü செபி அமைப்பின் பதிவு பெறாத எந்த முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடுசெய்யாதீர்கள்.

ü பங்குத் தரகர்களிடம் பண ரீதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாமல் காசோலை மற்றும் டிஜிட்டல் ரீதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

ü பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதை அறிந்த பின்பே உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளைச் செய்யுங்கள்.

இந்த ஆறு விவரங்களே பணம் சார்ந்த அனைத்து முதலீடுகளுக்கும் போதுமானது. இந்த விவரங்களை மனதில் நிறுத்தி பண முதலீடுகளைச் செய்தால் முதலீட்டு அபாயங்களுக்கு ஒருவர் ஆளாக வேண்டியதில்லை.

பண முதலீட்டிற்கு முன்பு இந்த விவரங்களையும் மனதில் நிறுத்துங்கள். இந்த விவரங்களுக்கு எதிராக எது இடித்தாலும் நீங்கள் அந்த முதலீட்டைச் செய்ய வேண்டியதில்லை. இந்த ஆறு விவரங்களுக்கும் ஒத்து வரும் முதலீடுகளைச் செய்தாலே போதுமானது.

எல்லாருக்கும் பயனுள்ள இந்தத் தகவலை நீங்களும் எல்லாருக்கும் பகிர்ந்து உதவுங்கள். இந்த முதலீட்டுக்கான விழிப்புணர்வு விவரங்கள் பங்கு முதலீடுகளுக்கு மட்டுமல்லாது பல்வேறு முதலீடுகளுக்கும் பல வகைகளில் பொருத்தமாக இருப்பதையும் நீங்கள் நோக்கலாம்.

*****

No comments:

Post a Comment