Wednesday 5 April 2023

தமிழ் துணையெழுத்துக் குறியீடுகளைக் குறிப்பிடும் முறை

தமிழ் துணையெழுத்துக் குறியீடுகளைக் குறிப்பிடும் முறை

தமிழ் எழுத்துகளை எழுதும் போது பயன்படும் துணையெழுத்துகளை எப்படிக் குறிப்பிடுவது என்பதை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

கீழே உள்ள அட்டவணையில் துணையெழுத்துக் குறியீடுகள் இடம் பெறும் எழுத்துகளும் அவற்றைக் குறிப்பிடுவதற்கான முறைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணை உங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் எழுத்துகளை எழுத கற்றுக் கொடுக்கும் போது துணையெழுத்துகள் வருமிடத்து அவற்றின் துணையெழுத்துகளின் பெயரோடு கற்பித்து விட்டால் துணையெழுத்துகளைத் தவறாக எழுதுவதால் உண்டாகும் எழுத்துப் பிழைகளை எழுதிக் காட்டித் திருத்த வேண்டியதில்லை. அத்துணையெழுத்துகளைச் சுட்டிக் காட்டி அதாவது குறிப்பிட்டுக் காட்டித் திருத்தலாம்.

மேலும் தமிழ் எழுத்துகளை எழுதுவோர் துணையெழுத்துகளுக்கான பெயர்களை அறிந்து வைத்திருப்பது வேண்டப்படுவதுதானே..

குறியீடு இடம் பெறும் எழுத்து

குறிப்பிடும் முறை

கா

துணைக்கால் அல்லது கால்

கெ

ஒற்றைக் கொம்பு

கே

கொம்புச் சுழி

கை

இரட்டைக் கொம்பு

கொம்புக் கால்

கி

சுழியாத மேல் விலங்கு

கீ

சுழித்த மேல் விலங்கு

மு

சுழியாதகீழ் விலங்கு

மூ

சுழித்த கீழ் விலங்கு

பு

இறங்குக் கீற்று

ர / ஏ

சாய்வுக் கீற்று

பூ

இறங்குக்கீற்று கீழ்விலங்கு சுழி

நு

மடக்கேறு கீற்று

நூ

மடக்கேறு கீற்றுக் கால்

கூ

பின்வளை கீற்று

பிறைச்சுழி

*****

No comments:

Post a Comment