வருமான வரி செலுத்துவோருக்கான செயலி - AIS for Tax Payers Apps
வருமான வரி செலுத்துபவர்களுக்காக
வருமான வரித்துறை AIS for Taxpayers என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
AIS என்பது Annual
Information Statement என்பதன் முதல் எழுத்துகளைக் குறிப்பதாகும்.
இச்செயலி மூலம் வரி செலுத்துபவர்கள்
தங்கள் தகவல் சுருக்கம் மற்றும் தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்க்க முடியும்.
இச்செயலி வருமான வரித்துறையால்
இலவசமாக வழங்கப்படும் பயனுள்ள செயலி ஆகும்.
இச்செயலி கூகுளின் ‘ப்ளே
ஸ்டோர்’ மற்றும் ஆப்பிளின் ’ஆப் ஸ்டோர்’ ஆகியவற்றில் கிடைக்கிறது. நீங்கள் AIS for
Taxpayers என ‘ப்ளே ஸ்டோர்’ அல்லது ‘ஆப் ஸ்டோர்’ இல் தேடினால் இச்செயலியைத் தேர்ந்தெடுத்துப்
பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அல்லது கீழே உள்ள பின்வரும் இணைப்புகளைச்
சொடுக்கியும் பதிவிறக்கம் செய்யலாம்.
ப்ளேஸ்டோருக்கு...
https://play.google.com/store/apps/details?id=io.lntinfotech.AIStaxpayer&hl=en&gl=US
ஆப் ஸ்டோருக்கு...
https://apps.apple.com/in/app/ais-for-taxpayers/id1571076423
வரி செலுத்துவோர் தங்கள்
தொடர்பான பல்வேறு தகவல்களைக் காணவும் இந்தச் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பாக வட்டி, ஈவுத்தொகை,
பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், வருமான வரி திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல
தகவல்களை இச்செயலி மூலமாகப் பெற முடியும்.
இந்தச் செயலியைப் பயன்படுத்த
இச்செயலியைப் ப்ளேஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோலிருந்து பதிவிறக்கம் செய்து பான் எண்ணை வழங்க
வேண்டும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு வரும் ஒரு
முறை பயன்பாட்டு எண் (ஓ.டி.பி.) மூலம் அங்கீகரிக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து இ-பைலிங்
போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு நீங்கள் பயன்படுத்தும் வகையில் செயலிக்குள் நுழைய நான்கிலக்க
கடவுச்சொல்லாக (Password) ஓர் எண்ணை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்தச் செயலி உங்கள்
பயன்பாட்டுக்குள் வந்து விடும். இச்செயலி வருமான வரி செலுத்தும் உங்களுக்குப் பல வகைகளில்
உதவும் மற்றும் உதவக் கூடும்.
இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக
அமைந்தால், பலரும் பயன் பெற உதவும் இத்தகவலைப் பலருக்கும் பகிர்ந்து பயன் பெறச் செய்யவும்.
*****
No comments:
Post a Comment