Monday, 11 April 2022

மெல்ல கற்போருக்கான ந – ண – னகரப் பயிற்சிகள்

மெல்ல கற்போருக்கான ந – ண – னகரப் பயிற்சிகள்

            தமிழ் உச்சரிப்பிலும், எழுதுவதிலும் ந – ண – ன வேறுபாட்டில் அமையும் சொற்களில் மாணவர்களுக்குப் பிழைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

            சொல்லும் போது ந – ண – ன ஆகியவற்றை வேறுபடுத்தி அறிவதற்கேற்ற வகையில் நகரத்தைத் தந்நகரம் என்றும், ணகரத்தை டண்ணகரம் என்றும் னகரத்தை றன்னகரம் என்றும் குறிப்பிடுவர்.

எழுத்து

குறிப்பிடும் வழக்கு முறை

தந்நகரம்

டண்ணகரம்

றன்னகரம்

            ந – ண – ன இவ்வெழுத்தகளை உச்சரிப்பில் எவ்வாறு வேறுபடுத்துவது என்ற குழப்பம் மாணவர்களுக்கு எழுவதுண்டு. நகரத்துக்கு இனமாக தகரமும், டகரத்துக்கு இனமாக ணகரமும், னகரத்து இனமாக றகரமும் அமைவதால் அவ்வெழுத்துக்களை உச்சரிக்கும் வகையிலே அவ்வெழுத்துகளை உச்சரிக்கலாம் என்பது மாணவர்களது குழப்பத்தைப் போக்குவதற்குத் துணை செய்யும்.

மேலும் இவ்வெழுத்தகளை உச்சரிக்கும் முறையை விளக்கும் வரைபடத்தையும் பயன்படுத்தலாம். அவ்வரைபடத்தை நீங்கள் கீழே காணலாம்.

            ந – ண – னகரத்தில் அமையும் சொற்களை அட்டவணையிட்டு வாசிக்கச் செய்வதன் மூலமாகவும் எழுதச் செய்வதன் மூலமாகவும் மெல்ல கற்போரை முன்னேற்றம் செய்யலாம். அதற்கான சொற்கள் அடங்கிய அட்டவணை ஒன்றைக் கீழே காண்போம்.


தந்தம்

பண்பு

நான்

நகம்

பணம்

மனம்

நாகம்

கண்ணா

வினா

நிலவு

பணி

பனி

நீர்

தண்ணீர்

பன்னீர்

நுங்கு

நுணுக்கம்

பின்னுதல்

நூல்

தொண்ணூறு

பின்னூட்டம்

நெருப்பு

எண்ணெய்

என்னென்ன

நேரம்

கண்ணே

என்னே

நைந்து

பண்ணை

தென்னை

நொடி

கண்ணொளி

அவனோ

நோக்கம்

கண்ணோட்டம்

மன்னோ

நௌவி

            மேலும் கூடுதல் பயிற்சிக்காக ந – ண – னகர வேறுபாடுகளில் அமையும் சில சொற்களையும் காண்போம்.

நகரம்

கணவன்

கனவு

வெந்நீர்

உண்மை

நன்மை

நிலம்

வெண்மணி

நானிலம்

தந்தவர்

கண்டவர்

சென்றவர்

நிரப்புக

மாணிக்கம்

அனிச்சம்

வெந்தயம்

கண்ணியம்

நன்னயம்

நட்டம்

கண்டம்

குன்றம்

நித்திலம்

மண்டிலம்

நன்னிலம்

 

            ந – ண – னகர வேறுபாடுகளில் அமையும் சொற்களைக் கொண்ட வாக்கியங்களையும் பயன்படுத்தலாம். அப்படிச் சில வாக்கியங்கள்.

1. நன்னன் செய்த பண்டம் நன்றாக இருந்தது.

2. நல்ல மனமும் நன்மை செய்ய பணமும் வேண்டும்.

3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தல் வேண்டும்.

4. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதரை உருவாக்கும்.

5. கண்டங்கள் பிரித்தாலும் எண்ணங்கள் இணைக்கட்டும்.

6. மண்ணுலகம் ஆளும் மன்னரும் நீதிக்குக் கட்டுப்பட்டவர்.

7. நல்ல உணவு நன்னலத்திற்குத் தேவை.

            இத்துடன் உங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் எழுதுங்கள். மெல்ல கற்போருக்கும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உங்கள் ஆலோசனைகள் உதவட்டும்.

*****

No comments:

Post a Comment