Wednesday, 15 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

1) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நவம்பர் மாதத்துக்கான அரிசியை இந்த மாதமே நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கொளத்தூரில் அதி நவீன துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

4) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

5) பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரும் நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6) பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.






Education & General Knowledge News (16.10.2025)

1) The Tamil Nadu government has announced that rice for the month of November can be purchased at fair price shops this month itself in view of the northeast monsoon.

2) A holiday has been declared for schools only in Tirunelveli, Thoothukudi and Tenkasi districts due to heavy rains.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a modern sub power station in Kolathur.

4) Anti-corruption department officials conducted raids in government offices across Tamil Nadu yesterday.

5) US President Donald Trump has warned that countries joining the BRICS group will be subject to heavy taxes.

6) There is renewed tension on the Pakistan-Afghanistan border.

No comments:

Post a Comment