Thursday, 2 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.10.2025)

1) மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மலர் தூவி மரியாதை செய்தார்.

2) நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மையம் வலு பெற்றுள்ளதால் எண்ணூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல்எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

4) இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.

5) இந்திய பணக்காரர்களின் பட்டியலில் அம்பானி முதலிடத்தையும், அதானி இரண்டாமிடத்தையும், ரோஷிணி நாடார் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.

6) செப்டம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.89 லட்சம் கோடியாக உள்ளது.

7) தனக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.



Education & GK News

1) On the occasion of Mahatma Gandhi's 157th birth anniversary, President Draupadi Murmu paid floral tributes at Rajghat, the memorial of Mahatma Gandhi.

2) A heavy rain warning has been issued for 8 districts including Chengalpattu, Tiruvannamalai and Kanchipuram tomorrow.

3) Cyclone Warning Cage No. 1 has been hoisted at Ennore Port as the depression in the Bay of Bengal has strengthened.

4) Russian President Vladimir Putin is scheduled to visit India on December 5 and 6 on an official visit.

5) Ambani tops the list of India's richest people, Adani second, and Roshni Nadar third.

6) The Goods and Services Tax collection for September is Rs 1.89 lakh crore.

7) US President Donald Trump has insisted that he should be awarded the Nobel Peace Prize.

No comments:

Post a Comment