Sunday, 12 October 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.10.2025)

1) தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வகை அவசர உதவிகளுக்கும் 108 என்ற தொடர்பு எண்ணை அழைக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை கோரி தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

3) இன்று 11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4) இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்.

5) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட ராணுவ மோதலால் இரு தரப்பிலும் 200 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

6) எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளைப் பாகிஸ்தான் மூடியது.

7) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 100 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.

8) மெக்ஸிகோவில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

Education & General Knowledge News (13.10.2025)

1) The Tamil Nadu government has announced that all types of emergency assistance can be called on 108 as a Diwali precaution.

2) The Supreme Court will deliver its verdict today in the case filed by the Tamilaga Vetri Kazhagam (TVK) seeking a central investigation into the Karur stampede death incident.

3) Heavy rain warning has been issued for 11 districts today.

4) US President Donald Trump left for Israel following the Israel-Hamas ceasefire.

5) 200 soldiers from both sides were killed in a military clash between the two countries on the Pakistan-Afghanistan border.

6) Pakistan closed its borders with Afghanistan following the clash on the border.

7) US President Donald Trump has imposed an additional 100 percent tax on goods imported from China.

8) 41 people died in floods and landslides caused by heavy rains in Mexico.

No comments:

Post a Comment