Monday, 13 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.10.2025)

1) நிகழ் கல்வியாண்டு முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.

2) விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

3) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நான்கு நாட்களுக்குக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

4) கரூர் நெரிசல் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்பு நிறுவன விசாரணைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

5) நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

6) உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2026ம் ஆண்டு 3 முறை டெட் (TET) தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்புத் தேர்வு நடத்த பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7) அரசு முறைப் பயணமாக கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வருகை தந்துள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த். அனிதா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார். அனிதாவின் தந்தை ஆனந்த் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். பஞ்சாபியான தாய் சரோஜ் மயக்க மருந்து நிபுணர் ஆவார். குயீன்ஸ், ஆக்ஸ்போர்ட், டல்ஹவுசி மற்றும் டொரன்டோ பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றுள்ளார் அனிதா ஆனந்த். 2019 இல் அரசியலில் நுழைந்து ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்று ட்ரூடோ அமைச்சரவையில் இடம் பெற்றார். 2021ல் கனடா பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.





Education & General Knowledge News (14.10.2025)

1) The Tamil Nadu government has issued a government order to cancel the eleventh standard public examination from the current academic year.

2) The School Education Department has advised school students to create awareness about an accident-free Diwali.

3) The Tamil Nadu Legislative Assembly session begins today. The session will be held for four days.

4) The Supreme Court has ordered a Central Bureau of Investigation investigation into the Karur stampede death incident.

5) The UGC NET exam will be conducted on a computer-based basis across the country from December 31 to January 7. The exam center will be announced 10 days before the UGC NET exam.

6) As per the Supreme Court order, the Tamil Nadu government has issued a government order to conduct the TET exam for in-service teachers three times in 2026. The Teachers Recruitment Board has been given permission to conduct special exams in the months of January, July and December.

7) Canadian Foreign Minister Anita Anand is on an official visit to India. Canadian Foreign Minister Anita Anand is a native of Vellalur in Coimbatore district. Anita Anand's paternal grandfather is freedom fighter Vellalur Annasamy Sundaram. Anita's father Anand is a general surgeon. Her Punjabi mother Saroj is an anesthesiologist. Anita Anand holds degrees from Queen's, Oxford, Dalhousie and Toronto universities. She entered politics in 2019 and won the Aquila constituency and was appointed to the Trudeau cabinet. It is noteworthy that Anita Anand, who is of Indian origin, also served as Canada's Minister of Defence in 2021.

No comments:

Post a Comment