Thursday, 30 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2025 (வெள்ளி)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2025 (வெள்ளி)

1) இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2) தேசிய ஒற்றுமைத் தினத்தையொட்டி நவம்பர் 1 முதல் 15 வரை பாரதத் திருவிழா என்ற பெயரில் தேசிய அளவிலான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

3) தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா இன்று தொடங்குகிறது.

4) உச்சநீதி மன்றத்தில் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நவம்பர் 24 அன்று பதவியேற்பார்.

5) சதுரங்க விளையாட்டில் தமிழகத்தின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி தேர்வாகியுள்ளார்.

6) இந்திய மின்உற்பத்தி திறன் 500 ஜிகா வாட்டைக் கடந்தது.

7) 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

8) உலகக் கோப்பை மகளிர் மட்டைப்பந்து போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Education & General Knowledge News – 31.10.2025 (Friday)

1) Today is the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel, celebrated as National Unity Day.

2) A national-level celebration called Bharath Festival will be held from November 1 to 15 on the occasion of National Unity Day.

3) The Sataya festival at the Thanjavur Big Temple begins today.

4) Suryakant will take oath as the 53rd Chief Justice of the Supreme Court on November 24.

5) Ilamparithi has been selected as the 35th Grand Master of Tamil Nadu in the game of chess.

6) India's power generation capacity has crossed 500 gigawatts.

7) US President Donald Trump has ordered the USA military to conduct nuclear weapons tests again after 30 years.

8) The Indian team has advanced to the final of the Women's Cricket World Cup.

No comments:

Post a Comment