Saturday, 2 May 2020

ஊரடங்கு நீட்டிப்பும் தளர்வுகளும்

ஊரடங்கு நீட்டிப்பும் தளர்வுகளும்

மத்திய அரசின் இரு வார ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் பின்வரும் தளர்வுகளும், கட்டுபாடுகளும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
v சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி.
v கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.
v அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
v உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம்.
v ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

v பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
v சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
v மொபைல் கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், மின் மோட்டார் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
v ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
v தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.
v கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
v நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.


அவசரத் தேவைகளுக்கு வெளியே செல்ல E Pass பெற…

அவசரத் தேவைகளுக்கு வெளியே செல்ல E Pass பெற…

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் கீழே உள்ள இணைப்பு (Link) மூலமாக இணையத்தில் உள் சென்று, அங்கே உள்ளே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான காரணங்களைப் பதிவு செய்து தங்கள் செல்பேசியில் (Mobile)  காத்திருக்கவும். நீங்கள் செல்லலாம் என்ற உத்தரவு வந்தவுடன் உங்கள் வாகனத்துடன் வெளியே செல்லலாம்.
அதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்


Friday, 1 May 2020

ஒரு பொது அறிவிற்காக...

ஒரு பொது அறிவிற்காக...

1. நுண்ணுயிர்களால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களை மூன்றாகப் பிரிக்கிறார்கள். அவை என்னவென்று தெரியுமா?
பாக்டீரியாவால் உண்டாகும் நோய்கள்
வைரஸால் உண்டாகும் நோய்கள்
புரோட்டோசோவாவால் உண்டாகும் நோய்கள்
என்புருக்கி, காலரா, டைபாய்டு போன்றவை
பெரியம்மை, சளி, இளம்பிள்ளைவாதம், கொரோனா போன்றவை
மலேரியா போன்றவை

2. தற்போது (2020 இல்) உலகச் சுகாதார நிறுவனத்தித் தலைமை இயக்குநராக இருப்பவரின் பெயர் என்ன தெரியுமா?
டெட்ரோஸ் அதானம்

3. பத்து கோடி மக்கள் 1918 ஆம் ஆண்டு உயிரிழக்கக் காரணமான நோய் எதுவென்று தெரியுமா?
ஸ்பானிஷ் ப்ளூ

4. கொரோனாவைப் ப்ளேக் நோய் போன்றது என்று வர்ணித்தவர் யாரென்று தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

5. கொரோனா நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாடு மாவட்டம் எதுவென்று தெரியுமா?
கிருஷ்ணகிரி
*****