Thursday, 30 November 2023

மெல்ல கற்போருக்கான பதினான்காவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான பதினான்காவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday, 27 November 2023

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு இப்போதே ஒரு நிரப்பப்படாத காசோலை தரப்படுகிறது

நீங்கள் விரும்பிய தொகையை நிரப்பிக் கொள்ளலாம்

அப்படி நிரப்பிக் கொண்டால் நீங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்துபவராகிறீர்கள்

நிரப்ப தயங்கினால் நீங்கள் வாய்ப்புகளைப் பின்னடையச் செய்பவராகிறீர்கள்

வாய்ப்புகளைக் கொடுக்கத்தான் முடியும்

பயன்படுத்திக் கொள்ளாமல் போவதற்கு யார் என்ன செய்ய முடியும்

உங்கள் தயக்கங்களாலோ பயங்களாலோ வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருந்து விடாதீர்கள்

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்

வாய்ப்புகள் கிடைக்கும் போதும், அமையும் போதும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இதுவே எல்லா காலத்திலும் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது

*****

Thursday, 23 November 2023

மெல்ல கற்போருக்கான பதின்மூன்றாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான பதின்மூன்றாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday, 20 November 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான வடமொழிச் சொற்கள் பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான வடமொழிச் சொற்கள்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான வடமொழிச் சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

எவரெஸ்ட்

ரோஜா

தாஜ்மஹால்

ஷாஜஹான்

மும்தாஜ்

ஜான்சிராணி

ஜவஹர்லால் நேரு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ரம்ஜான்

கிறிஸ்துமஸ்

பாகிஸ்தான்

ஜப்பான்

அஸ்ஸாம்

அஸ்கா

குஸ்கா

காஷ்மீர்

ஸ்ரீநகர்

ஜாங்கிரி

ஜிலேபி

குலாப்ஜாமூன்

பாதுஷா

பஜ்ஜி

அஜ்மீர்

*****

Sunday, 19 November 2023

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

தி கிட் திரைப்பட விமர்சனம் :

தி கிட் என்ற திரைப்படம் 1921 இல் சார்லி சாப்ளின் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளரும் சார்லி சாப்ளினே ஆவார். இத்திரைப்படத்தில் குழந்தையாக ஜாக்கி கூகன் நடித்துள்ளார். இத்திரைப்படம் அமெரிக்க மௌன நகைச்சுவை நாடக திரைப்படமாகும்.

தி கிட் என்ற இத்திரைப்படம் சார்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு ஆகும். இத்திரைப்படத்தை அவர் தனது குழந்தை பருவ அனுபவத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார்.

நாடோடியான சாப்ளின் ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையைத் தயக்கத்துடன் காப்பாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே தி கிட் என்ற திரைப்படத்தின் கதையாகும்.

சாப்ளின் குழந்தையை வளர்க்கிறார். அக்குழந்தையின் தாய் இறுதியில் குழந்தையைக் கேட்கும் போது சாப்ளினும் குழந்தை கூகனும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் குழந்தை தாயிடம் சேர்கிறது. சாப்ளினும் குழந்தையை வந்து அடைகிறார். இவற்றை சார்லி சாப்ளின் தமக்கே உரிய நகைச்சுவை காட்சிகளுடன் திரைப்படமாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தேவையான உரையாடல்கள் படக்காட்சிகளிடையே வாக்கியங்களாக வெளிப்படுகின்றன.

இத்திரைப்படம் குழந்தைகளைக் கவரும் திரைப்படம் எனில் அது மிகையில்லை. சாப்ளின் பிழைப்பிற்காகக் குழந்தை கூகனைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கச் செய்வதும், பிறகு அவர் பழுது பார்ப்பவராகச் சென்று பழுது பார்த்து சம்பாதிப்பதும் குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கையான காட்சியாகப் படத்தில் இடம் பெற்றுள்ளது.

துவக்கம் முதல் இறுதி வரை குழந்தைகள் உணர்ச்சிகரமாகவும் சிரித்த வண்ணமாகவும் பார்க்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளையில் அமைந்த மௌன திரைப்படம் எனினும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கமும் உண்டாக்கும் உணர்வுகளும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளன.

இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாப்பதற்கான சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விமர்சனத்தைக் காணொளியாகக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி இயக்கவும்.

*****

Thursday, 16 November 2023

மெல்ல கற்போருக்கான பனிரெண்டாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான பனிரெண்டாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday, 13 November 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘சொல்லக்கேட்டு எழுதுதல்’ பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘சொல்லக்கேட்டு எழுதுதல்’  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘சொல்லக் கேட்டு எழுதுதல்’ பயிற்சிக்கான சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

கத்தரிக்காய்

கடலைக்கொட்டை

முத்துச்சிப்பி

பருத்திச்செடி

பஞ்சுமிட்டாய்

காகிதப்பூ

தொட்டாசிணுங்கி

எறும்புப்புற்று

தேன்கூடு

மரக்கிளை

நீரோடை

ஏற்றத்தாழ்வு

புதிர்க்கதைகள்

படக்கதைகள்

வண்ணப்பூக்கள்

இனிப்புப்பண்டம்

பூச்செடிகள்

திரைப்படம்

வண்ணக்குமிழி

குட்டிப்பையன்

பாட்டுச்சத்தம்

கடற்கரை

குட்டிக்கரணம்

ஈரமணல்

தார்ச்சாலை

ஊர்த்தலைவர்

எதிர்ச்சொற்கள்

மேலே           ×          கீழே

உள்ளே          ×          வெளியே

சூடான          ×          குளிர்ச்சியான

பழைய          ×          புதிய

முன்னால்     ×          பின்னால்

அருகில்         ×          தொலைவில்

*****

Thursday, 9 November 2023

மெல்ல கற்போருக்கான பதினொன்றாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான பதினொன்றாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Tuesday, 7 November 2023

Don't let failures get you down!

Don't let failures get you down!

A lesson in self-confidence from Nobel laureate Maungi Pawendi.

Can you believe the news that the 2023 Nobel Prize winner in Chemistry, Maungi Baventi failed in Chemistry in his first semester exam? That defeat must have affected him greatly. But he made sure not to let that defeat overwhelm him. That is why today he has risen to the level of winning the Nobel Prize in the field of chemistry in which he failed the exam.

He was awarded the Nobel Prize in Chemistry this year for the discovery and synthesis of microscopic quantum dots.

62 year old Moungi Baventi is of Tunisian and French heritage. He has studied science subjects with ease till his schooling. But in 1970, after finishing school and joining Harvard University, a sudden apprehension gripped him.

At that time he did not study for the exams and was intimidated by such a big college and professors.

This is how he recalls the experience of writing his first exam at Harvard University.

“I still remember writing the first chemistry exam. Looking at the first question.. I don't know the answer. Looking at the second question.. Same situation. There was no answer to that either. Finally I scored 20 marks out of 100 in that exam and was known as the last student in the class.

That's what I thought, oh my god, my story is over, what am I going to do here?”

But after that failure, everything that happened in Paventy's life was a miracle of perseverance and self confidence. Paventy then learned to love chemistry and the art of preparing for exams. He had immediately set about fixing himself up.

He learned how to read. He didn't know about it until then. After learning it he scored 100 out of 100 in all the exams he wrote.

This is the message of the Nobel Prize winning chemist Poventi to the youth, “Don't give up perseverance. And don't let any failure destroy you. Because it was my first failure. It would have overwhelmed me. But I didn't give up.”

So don't let any failure overwhelm you. Recover from failure through effort. Come out of failures thinking about what to do, how to do it, and what change to make. Learn from failures and achieve success.

*****

Monday, 6 November 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான 'தமிழ்ச்சொல் அறிவோம்' பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான தமிழ்ச்சொல் அறிவோம்  பயிற்சி

தமிழ் மெல்ல கற்போருக்கான தமிழ்ச்சொல் அறிவோம் பயிற்சிக்கான சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :

கரிக்கோல்

அழிப்பான்

துருவி

வரைமெழுகு

தூவல்

அடையாள அட்டை

புத்தகப்பை

கரும்பலகை

நாள்காட்டி

மின்விசிறி

மேசை

விளையாட்டுத் திடல்

சாலை

வாயிற்கதவு

மதில்

பழச்சாறு

பழப்பாகு

பனிக்கூழ்

மெதுரொட்டி

தண்ணீர்ப்புட்டி

பேருந்து

அலைபேசி

பல்துலக்கி

குவளை

காலுறை

சீருடை

கழுத்துப்பட்டி

பொத்தான்

வெள்ளைத்தாள்

அழைப்புமணி

மட்டை

மின்விளக்கு

மெத்தை

பள்ளிக்கூடம்

நூலகம்

மருத்துவமனை

மருந்துக்கடை

காவல் நிலையம்

பேருந்து நிலையம்

தொடர்வண்டி நிலையம்

விமான நிலையம்

துறைமுகம்

அஞ்சலகம்

வங்கி

இடுப்புப்பட்டி

ஒலிவாங்கி

ஒலிப்பான்

ஒளிப்படம்

கைக்கடிகாரம்

கழிப்பறை

திரையரங்கம்

தலைக்கவசம்

இருசக்கர வாகனம்

மகிழுந்து

சரக்குந்து

உறிஞ்சுக்குழல்

நிலைப்பேழை

வழலைக்கட்டி

கணினி

அச்சுப்பொறி

சுழல் நாற்காலி

தோள் பை

தொலைக்காட்சி

தொலைபேசி

புலனம்

முகநூல்

இணையம்

தேநீர்

குளம்பி

*****

Thursday, 2 November 2023

மெல்ல கற்போருக்கான பத்தாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்போருக்கான பத்தாவது வாரப் பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அடங்கிய பயிற்சி அமைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday, 1 November 2023

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படமாக தி ஜங்கிள் கேங் என்ற திரைப்படத்தைப் பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது. இத்திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பண்ட் பார் நேச்சர் என்ற நிறுவனமும் எர்த் கேர் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் 2012 இல் வெளியானது. இத்திரைப்படத்தின் மொழி தமிழ் ஆகும்.

கிருஷ்னேண்டு போஸ் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே. இத்திரைப்படம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு தொடர்பான அனிமேஷன் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் நோக்கம் இந்தியாவின் பல்வேறு வன விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து விளக்குவதாகும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்க ஊக்குவிப்பதும் இத்திரைப்படத்தின் நோக்கமாகும்.

இத்திரைப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்கள் நடித்துள்ளன. கருப்பு மான் ‘பூரா என்ற பெயரிலும், வாத்து ‘போ என்ற பெயரிலும் தேவாங்கு ‘குட்டு என்ற பெயரிலும் நடித்துள்ளன. இந்த மூன்று பாத்திரங்களும் இந்தியாவின் வடகிழக்கில் தொடங்கி மத்திய இந்தியாவின் வழியாக தெற்கே வந்தடைகின்றன. அப்படி வந்தடையும் வழியில் காண்டாமிருகம், புலி, யானை மற்றும் கரடி போன்ற பல்வேறு விலங்கினங்கள் குறித்த தகவல்களை உரையாடல்கள் வெளியே வெளிப்படுத்துகின்றன. இந்திய வன விலங்கினங்களின் வாழ்விடங்கள் பற்றியும் பேசுகின்றன. இந்திய வன விலங்குகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் பேசுகின்றன. வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுகின்றன.

இத்திரைப்படத் தொடர் ஒவ்வொன்றின் இறுதியிலும் பூமியின் இயற்கை வளங்கள் அழிந்து வருவது சுட்டிக் காட்டப்படுகின்றது. குழந்தைகளும் மாணவர்களுமே அழிந்து வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது. மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படத் தொடர்கள் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துகின்றன.

இத்திரைப்படத்திற்கு சின் இந்தியா கிட்ஸ் திரைப்பட விழா விருது வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 7வது சிஎம்எஸ் வடவரன் திரைப்பட திருவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்திரைப்படத்தைக் கண்டு, களித்த பிறகு பின்வரும் வினாக்களை எழுப்பி ஆசிரியர் மாணவர்களோடு கலந்துரையாடுவது சிறப்பானது.

1. இத்திரைப்படம் உங்களுக்குப் பிடித்துள்ளதா?

2. இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்ன?

3. இத்திரைப்படம் எதைப் பற்றியது?

4. இத்திரைப்படத்தின் முக்கியமான சம்பவங்கள் யாவை?

5. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

6. இத்திரைப்படத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

7. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது?

8. இத்திரைப்படம் குறித்த உங்களது கருத்தைச் சில வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

9. இத்திரைப்படத்திற்கு ஒரு போஸ்டர் தயாரிக்கச் சொன்னால் எப்படித் தயாரிப்பீர்கள்?

10. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களில் ஒன்றை வரையச் சொன்னால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை வரைவீர்கள்?

11. இத்திரைப்படத்தின் முடிவு வேறு எப்படியெல்லாம் அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

12. இத்திரைப்படம் குறித்த உங்கள் விமர்சனத்தை மூன்று நிமிடம் பேசுங்கள்.

13. இது போன்ற விலங்குகள் மற்றும் தாவரங்களைக் காப்பாற்றிப் பராமரிப்பது போன்ற கதைகள் இருந்தால் சொல்லுங்கள்.

14. இத்திரைப்படம் போன்ற ஒரு திரைப்படத்தை உங்கள் கற்பனையில் உருவாக்கி எடுக்கச் சொன்னால் எப்படி எடுப்பீர்கள்?

பின்வரும் வினாக்கள் மூலம் ஆசிரியர் மாணவர்களிடம் ஆர்வமூட்டும் வகையில் கலந்துரையாடி சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நலம் பயக்கும்.

இவ்விவரங்களைக் காணொளியாகக் காண கீழே உள்ள காணொளியை இயக்கிக் காணவும்.

நன்றி!

வணக்கம்!

*****

எட்டாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

எட்டாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

அக்டோபர் 2023 இல் எட்டாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

ஏழாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

ஏழாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

அக்டோபர் 2023 இல் ஏழாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

ஆறாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

ஆறாம் வகுப்பு அடைவுத் தேர்வு – அக்டோபர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

அக்டோபர் 2023 இல் ஆறாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****