Thursday, 28 December 2023

வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான இணையதளங்களை அறிவீர்களா?

 வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான இணையதளங்களை அறிவீர்களா?

வீடு கட்ட அனுமதி பெறும் வழிமுறைகளைத் தற்போது இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். வீடு கட்ட என்னென்ன வகையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்று தெரியுமா?

1. மனை அனுமதி,

2. வரைபட அனுமதி.

மனை அனுமதியை ‘லேண்ட் அப்ரூவல்’ என்றும் வரைபட அனுமதியை ‘பிளான் அப்ரூவல்’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மனை அனுமதி எனும் லேண்ட் அப்ரூவலுக்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.tnlayoutreg.in/

வரைபட அனுமதி எனும் பிளான் அப்ரூவலுக்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://onlineppa.tn.gov.in/

இது தவிர வீடு கட்டுவதற்கான தற்காலிக மின் இணைப்பைப் பெற்றுக் கொள்வதும் நலமாகும். அவ்வாறின்றி நீங்கள் வீடு கட்டுவதற்கு முறைகேடாக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரியவந்தால் மின்சார வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும் நிலைக்கு ஆளாவீர்கள். வீடு கட்டுவதற்கான தற்காலிக மின்சார இணைப்பைப் பெறவும் நீங்கள் இணையதளம் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணையளதத்திற்குச் செல்ல, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.tangedco.org/

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

*****

Wednesday, 27 December 2023

CUET (PG) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

CUET (PG) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் CUET நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. CUET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஜனவரி 24, 2024 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இந்நுழைவுத் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://pgcuet.samarth.ac.in/

*****

Monday, 25 December 2023

சிட்பண்டு நிறுவனம் பதிவு பெற்றதா என்பதை அறிந்து கொள்ள…

சிட்பண்டு நிறுவனம் பதிவு பெற்றதா என்பதை அறிந்து கொள்ள…

சிட்பண்டில் சீட்டு சேருவதற்கு முன்பாக நீங்கள் சேரப் போகும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான தமிழக அரசின் இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் சேர இருக்கும் சிட்பண்டு நிறுவனம் பதிவு பெற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

 https://www.tnreginet.gov.in/

*****

Sunday, 24 December 2023

வெள்ள பாதிப்பால் சான்றிதழ்களை இழந்தோர் சான்றிதழ்களைப் பெற…

வெள்ள பாதிப்பால் சான்றிதழ்களை இழந்தோர் சான்றிதழ்களைப் பெற…

கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் கட்டணமின்றிச் சான்றிதழ் நகல்களை பெறலாம். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து சான்றிதழ்களின் நகல்களைப் பெறலாம். இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெறுவதற்கான அவ்விணையளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://mycertificates.com/

*****

Thursday, 21 December 2023

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா?

டிசம்பர் 22 அன்று தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றுதான்.

ஏன் அந்தத் தினத்தில் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

அன்றுதான் கணித மேதையான சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள். இவர் தமிழகத்தைச் சார்ந்த கணித மேதை என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது தஞ்சைவாசிகளுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். அவரது மனைவியின் பெயர் ஜானகியம்மாள்.

சீனிவாச ராமானுஜம் பிறந்தது 22.12.1887 இல். இறந்தது 26.04.1920 இல். அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதற்குள் அவர் கணித உலகில் நிகழ்த்திய சாதனைகள் அளவிடற்கரியன.

அவரது 125வது பிறந்த தினம் 26.12.2011 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்றார்.

இந்த விழாவில்தான் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடுவது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2012 முதல் ஒவ்வொராண்டும் டிசம்பர் 22 வது நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தகவல் கணித ஆர்வமுள்ள உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

Monday, 18 December 2023

தோல்விகள் உங்களை மூழ்கடிக்க விட்டு விடாதீர்கள்!

தோல்விகள் உங்களை மூழ்கடிக்க விட்டு விடாதீர்கள்!

நோபல் பரிசு பெறும் மௌங்கி பவென்டி சொல்லும் தன்னம்பிக்கைப் பாடம்.

வேதியியலில் 2023 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறும் மௌங்கி பவென்டி கல்லூரியின் முதல் பருவத் தேர்வில் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்தவர் என்ற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? அந்தத் தோல்வி அவரை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால் அந்தத் தோல்வி அவரை மூழ்கடித்து விடாமல் அவர் பார்த்துக் கொண்டார். அதனால்தான் இன்று எந்த வேதியியல் தேர்வில் தோல்வியைடைந்தாரோ அதே வேதியியல் துறையில் நோபல் பரிசு பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

நுண் குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக நடப்பாண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுகிறார்

அமெரிக்காவின் மஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மௌங்கி பவென்டி. 62 வயதாகும் மௌங்கி பவென்டி துனிசிய மற்றும் பிரெஞ்சு பாரம்பரியத்தை உடையவர்.  இவர் தனது பள்ளிப் படிப்பு வரை எளிதாகவே அறிவியல் பாடங்களைப் படித்து வந்துள்ளார். ஆனால், 1970 இல் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும், அவரைத் திடீரென ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது.

 அப்போது அவர் தேர்வுகளுக்கு படிக்காமலும், அவ்வளவு பெரிய கல்லூரி மற்றும் பேராசிரியர்களைப் பார்த்து மிரண்டும் போயிருந்திருக்கிறார்.

தான் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் முதல் தேர்வு எழுதிய அனுபவத்தை அவர் இப்படி நினைவு கூர்கிறார்.

“முதல் வேதியியல் தேர்வெழுதியது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. முதல் கேள்வியைப் பார்க்கிறேன்.. பதில் தெரியவில்லை. இரண்டாவது கேள்வியைப் பார்க்கிறேன்.. அதே நிலைதான். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இறுதியாக அந்தத் தேர்வில் 100க்கு 20 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பிலேயே கடைசி மதிப்பெண் எடுத்த மாணவராக அறியப்பட்டேன். அப்போது நான் நினைத்தது இதுதான், அடக்கடவுளே.. என் கதை முடிந்துவிட்டது, இனி நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்?” 

ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு பவென்டி வாழ்க்கையில் நிகழ்ந்ததெல்லாம் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நிகழ்த்திய ஆச்சரியங்கள். பிறகு பவென்டி வேதியியலைக் காதலிக்கக் கற்றுக்கொண்டார், அதோடு தேர்வுகளுக்குத் தயாராகும் கலையையும் அறிந்துகொண்டார். உடனடியாக தன்னை சரி செய்யும் பணியைத் தொடங்கிவிட்டிருந்தார்.

எப்படி படிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டார். அதுவரை அது பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைக் கற்றுக் கொண்ட பிறகு சந்தித்த தேர்வுகள் அனைத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தார். 

இதன் மூலம் நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானியான பவென்டி இளைஞர்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான், “விடாமுயற்சியை விட்டு விடாதீர்கள். மற்றும் எந்த தோல்வியும் உங்களை அழிக்க விட்டுவிடாதீர்கள். ஏனெனில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. அது என்னை மூழ்கடித்துவிட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நான் விட்டுவிடவில்லை.”

ஆகவே எந்தத் தோல்வியும் உங்களை மூழ்கடிக்க விட்டு விடாதீர்கள். தோல்விகளிலிருந்து விடா முயற்சி மூலமாக மீண்டு வாருங்கள். என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், என்ன மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசித்து தோல்விகளிலிருந்து வெளியே வாருங்கள். தோல்விகளிலிருந்து பாடம் படித்து வெற்றியைப் பெறுங்கள்.

*****

Monday, 11 December 2023

கற்றல் கற்பித்தலை வளப்படுத்தும் ஸ்டோரிவீவர் இணையதளம்!

கற்றல் கற்பித்தலை வளப்படுத்தும் ஸ்டோரிவீவர் இணையதளம்!

கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான வளங்கள் நிறைந்த தளமாக ஸ்டோரிவீவர் தளம் உள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் இவ்விணையதளத்தைத் தங்களை வளப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தளத்தில் நீங்கள் Sign in செய்து இதில் உள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கதைகளைப் படிக்கலாம். நீங்களும் வளங்களைப் பங்களிக்கலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கும் வளங்கள் நிறைந்த பயனுள்ள இந்த தளத்திற்கு அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி நீங்கள் இவ்விணையதளத்தை அடையலாம்.

 https://storyweaver.org.in/en

*****

Monday, 4 December 2023

ஆறாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

ஆறாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

நவம்பர் 2023 இல் ஆறாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

ஏழாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

ஏழாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

நவம்பர் 2023 இல் ஏழாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

எட்டாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர் 2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

எட்டாம் வகுப்பு அடைவுத் தேர்வு – நவம்பர்  2023 – வினாத்தாள் & விடைக்குறிப்பு

நவம்பர் 2023 இல் எட்டாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட அடைவுத்தேர்விற்கான வினாத்தாளும் அதற்கான விடைக்குறிப்புகளும் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

மார்க் சக்கர்பெர்க் பற்றி அறிந்து கொள்வோம்!

மார்க் சக்கர்பெர்க் பற்றி அறிந்து கொள்வோம்!

யார் இந்த மார்க் சக்கர்பெர்க் என்கிறீர்களா?

நீங்கள் முகநூலைப் (பேஸ்புக்) பயன்படுத்தினால் நீங்கள் இவரைப் பற்றி அறியாமல் இருக்க மாட்டீர்கள். இவர்தான் முகநூலை உருவாக்கிய அதன் நிறுவனர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், திரெட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரும் இவரே.

இவரது முழுபெயர் மார்க் எலியட் சக்கர்பெர்க்.

இவரது அப்பா ஒரு பல் மருத்துவர். அம்மா ஒரு மனநல ஆலோசகர். இவருக்கு மூன்று சகோதரிகள். படிக்கும் காலத்தில் கணினி அறிவியலில் மேதை. அப்பாவின் பல் மருத்துவத்திற்கு வரும் நோயாளிகள் குறித்த தரவு சேகரிப்பிற்காகப் பள்ளி வயதிலேயே ஒரு மென்பொருளை உருவாக்கித் தந்திருக்கிறார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது உண்மைதானே!

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் படிப்பை முடிக்காமல் வெளியே வந்து முகநூலை உருவாக்கினார். அங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கு உரையாடும் வகையில் இவர் உருவாக்கியதே முகநூல். இது நடந்தது 2004இல்.

முகநூலை உருவாக்கி மிக இள வயதிலேயே 2008 இல் பில்லியனர் ஆனார். இவர் பிறந்தது 1984 இல். 20 வயதில் முகநூலை உருவாக்கி 24 வயதிலேயே பில்லியனர் ஆகி விட்டார்.

2003இல் பிரிசில்லாவைச் சந்தித்தார். 2012இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் மேக்சிமா, ஆகஸ்ட், ஆரெலியா.

2021இல் மெட்டாவை உருவாக்கினார். மெட்டாவின் கீழ்தான் தற்போது முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், திரெட்ஸ் ஆகியவை இயங்குகின்றன.

இவரது சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர். உலகின் ஏழாவது பெரும் பணக்காரராக இருக்கிறார். இவருக்கு நிறக்குருடு என்ற கண்பார்வை குறைபாடு உள்ளது. இதனால் இவரால் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. பேஸ்புக் லோகோ மற்றும் பின்னணி நீல நிறத்தில் இருப்பதற்கு இது ஒரு காரணம் என்று குறிப்பிடுவர்.

மார்க் சக்கர்பெர்க் பற்றிப் புரிந்து கொள்ள…

மார்க் சக்கர்பெர்க்கின் புகழ்பெற்ற வாசகங்கள் சிலவற்றை நீங்களே பாருங்களேன்.

1. மக்களுக்கு பகிர்வதற்கான அதிகாரத்தை வழங்குவதன் மூலம், உலகை மிகவும் வெளிப்படையானதாக ஆக்குகிறோம்.

2. நீங்கள் அனைவருக்கும் குரல் கொடுத்து மக்கள் அதிகாரத்தை வழங்கும்போது, அமைப்பு பொதுவாக நல்ல இடத்தில் முடிவடையும். எனவே, நமது பங்கை நாம் எதைப் பார்க்கிறோமோ, அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம்.

3. இணைய வலை இப்போது மிக முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. சமீப காலம் வரை, இணையத்தில் இயல்புநிலையாக பெரும்பாலான விஷயங்கள் சமூகமாக இல்லை, பெரும்பாலான விஷயங்கள் உங்கள் உண்மையான அடையாளத்தைப் பயன்படுத்துவதில்லை. இயல்புநிலை சமூகமாக இருக்கும் வலையை நாங்கள் உருவாக்குகிறோம்.

4. தங்கள் நிறுவனங்களின் வெற்றியில் செழித்து வளர்ந்த இளைய தலைமுறையினருடன், நம்மில் பலருக்கு நம் வாழ்நாளில் முன்னரே திருப்பித் தரவும், நமது பரோபகார முயற்சிகளின் தாக்கத்தைப் பார்க்கவும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது.

5. மக்களைப் புரிந்துகொள்வது நேரத்தை வீணடிப்பதில்லை.

6. இன்றைய Facebook என்பது தகவல்களின் தொகுப்பு அல்ல, இது தொடர்பில் இருக்கவும் தகவல்களைப் பகிரவும் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் நபர்களின் சமூகம். அவர்கள் எங்களை நம்பும் வரை மட்டுமே அதைச் செய்வார்கள்.

7. நான் செய்யும் அனைத்தும் உடைந்துவிடும், ஆனால் நான் அதை விரைவாக சரிசெய்கிறேன்.

8. ஆப்ஸ் உலகின் மையம் அல்ல. மக்கள் தான்.

9. ஆப்பிள், கூகுள், அமேசான், சாம்சங் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றை விட பேஸ்புக் மிகவும் வித்தியாசமான இடத்தில் உள்ளது. நாங்கள் ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்.

10. தனியுரிமை மற்றும் இதுபோன்ற சிக்கல்களைப் பற்றி கவலைப்படும் பலர், நாம் செய்யும் எந்த சிறிய தவறுகளையும் எடுத்து, முடிந்தவரை பெரிய ஒப்பந்தமாக மாற்றுவார்கள்.

*****