Monday 4 December 2023

மார்க் சக்கர்பெர்க் பற்றி அறிந்து கொள்வோம்!

மார்க் சக்கர்பெர்க் பற்றி அறிந்து கொள்வோம்!

யார் இந்த மார்க் சக்கர்பெர்க் என்கிறீர்களா?

நீங்கள் முகநூலைப் (பேஸ்புக்) பயன்படுத்தினால் நீங்கள் இவரைப் பற்றி அறியாமல் இருக்க மாட்டீர்கள். இவர்தான் முகநூலை உருவாக்கிய அதன் நிறுவனர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், திரெட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரும் இவரே.

இவரது முழுபெயர் மார்க் எலியட் சக்கர்பெர்க்.

இவரது அப்பா ஒரு பல் மருத்துவர். அம்மா ஒரு மனநல ஆலோசகர். இவருக்கு மூன்று சகோதரிகள். படிக்கும் காலத்தில் கணினி அறிவியலில் மேதை. அப்பாவின் பல் மருத்துவத்திற்கு வரும் நோயாளிகள் குறித்த தரவு சேகரிப்பிற்காகப் பள்ளி வயதிலேயே ஒரு மென்பொருளை உருவாக்கித் தந்திருக்கிறார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது உண்மைதானே!

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் படிப்பை முடிக்காமல் வெளியே வந்து முகநூலை உருவாக்கினார். அங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கு உரையாடும் வகையில் இவர் உருவாக்கியதே முகநூல். இது நடந்தது 2004இல்.

முகநூலை உருவாக்கி மிக இள வயதிலேயே 2008 இல் பில்லியனர் ஆனார். இவர் பிறந்தது 1984 இல். 20 வயதில் முகநூலை உருவாக்கி 24 வயதிலேயே பில்லியனர் ஆகி விட்டார்.

2003இல் பிரிசில்லாவைச் சந்தித்தார். 2012இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் மேக்சிமா, ஆகஸ்ட், ஆரெலியா.

2021இல் மெட்டாவை உருவாக்கினார். மெட்டாவின் கீழ்தான் தற்போது முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், திரெட்ஸ் ஆகியவை இயங்குகின்றன.

இவரது சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர். உலகின் ஏழாவது பெரும் பணக்காரராக இருக்கிறார். இவருக்கு நிறக்குருடு என்ற கண்பார்வை குறைபாடு உள்ளது. இதனால் இவரால் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. பேஸ்புக் லோகோ மற்றும் பின்னணி நீல நிறத்தில் இருப்பதற்கு இது ஒரு காரணம் என்று குறிப்பிடுவர்.

மார்க் சக்கர்பெர்க் பற்றிப் புரிந்து கொள்ள…

மார்க் சக்கர்பெர்க்கின் புகழ்பெற்ற வாசகங்கள் சிலவற்றை நீங்களே பாருங்களேன்.

1. மக்களுக்கு பகிர்வதற்கான அதிகாரத்தை வழங்குவதன் மூலம், உலகை மிகவும் வெளிப்படையானதாக ஆக்குகிறோம்.

2. நீங்கள் அனைவருக்கும் குரல் கொடுத்து மக்கள் அதிகாரத்தை வழங்கும்போது, அமைப்பு பொதுவாக நல்ல இடத்தில் முடிவடையும். எனவே, நமது பங்கை நாம் எதைப் பார்க்கிறோமோ, அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம்.

3. இணைய வலை இப்போது மிக முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. சமீப காலம் வரை, இணையத்தில் இயல்புநிலையாக பெரும்பாலான விஷயங்கள் சமூகமாக இல்லை, பெரும்பாலான விஷயங்கள் உங்கள் உண்மையான அடையாளத்தைப் பயன்படுத்துவதில்லை. இயல்புநிலை சமூகமாக இருக்கும் வலையை நாங்கள் உருவாக்குகிறோம்.

4. தங்கள் நிறுவனங்களின் வெற்றியில் செழித்து வளர்ந்த இளைய தலைமுறையினருடன், நம்மில் பலருக்கு நம் வாழ்நாளில் முன்னரே திருப்பித் தரவும், நமது பரோபகார முயற்சிகளின் தாக்கத்தைப் பார்க்கவும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது.

5. மக்களைப் புரிந்துகொள்வது நேரத்தை வீணடிப்பதில்லை.

6. இன்றைய Facebook என்பது தகவல்களின் தொகுப்பு அல்ல, இது தொடர்பில் இருக்கவும் தகவல்களைப் பகிரவும் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் நபர்களின் சமூகம். அவர்கள் எங்களை நம்பும் வரை மட்டுமே அதைச் செய்வார்கள்.

7. நான் செய்யும் அனைத்தும் உடைந்துவிடும், ஆனால் நான் அதை விரைவாக சரிசெய்கிறேன்.

8. ஆப்ஸ் உலகின் மையம் அல்ல. மக்கள் தான்.

9. ஆப்பிள், கூகுள், அமேசான், சாம்சங் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றை விட பேஸ்புக் மிகவும் வித்தியாசமான இடத்தில் உள்ளது. நாங்கள் ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்.

10. தனியுரிமை மற்றும் இதுபோன்ற சிக்கல்களைப் பற்றி கவலைப்படும் பலர், நாம் செய்யும் எந்த சிறிய தவறுகளையும் எடுத்து, முடிந்தவரை பெரிய ஒப்பந்தமாக மாற்றுவார்கள்.

*****

No comments:

Post a Comment