Wednesday, 17 September 2025

கல்வி மற்றும் பொது அறிவுச் செய்திகள் – 18.09.2025

கல்வி மற்றும் பொது அறிவுச் செய்திகள் – 18.09.2025

1) அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2) தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு 127 கோடி ரூபாயை நிதிக்குழு மானியமாக விடுவித்துள்ளது.

3) மதுராந்தகத்தில் 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் நிறுவப்பட உள்ளது.

4) சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் 2 லட்சம் கோடி முதலீடுகளுக்கு வழி வகுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

5) காற்று மாசைத் தடுக்க 3 வாரங்களுக்குள் செயல்திட்டத்தை உருவாக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

6) இந்த ஆண்டின் இறுதிக்குள் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்படும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

7) இன்று 21 மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Education and General Knowledge News – 18.09.2025

1) Prime Minister Narendra Modi has said that India will not be afraid of the threat of nuclear weapons.

2) The Central Government has released Rs 127 crore as a grant to the rural local bodies of Tamil Nadu through the Finance Commission.

3) An international city is to be established on 2000 acres in Mathuranthagam.

4) Finance Minister Nirmala Sitharaman has said that the Goods and Services Tax reform has paved the way for investments of Rs 2 lakh crore.

5) The Supreme Court has ordered the Central and State governments to prepare an action plan within 3 weeks to prevent air pollution.

6) The European Union has said that an agreement will be reached to implement free trade by the end of this year.

7) The Meteorological Department has said that heavy rains are likely in 21 districts today.

*****

போட்டித் தேர்வு / தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற…

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற…

தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்), மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு (யுபிஎஸ்சி), வங்கிப் பணிகளுக்கான தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்ற பெறுவதற்கான செயல்முறையை 3R எனலாம்.

அதாவது Reading – Revising – Repeating என்பதே அந்த 3R ஆகும். இதைத் தமிழில் சொல்வதென்றால் படித்தல் – மீளாய்வு செய்தல் – மீண்டும் மீண்டும் செய்தல் எனலாம். மேலும் இதை படிக்க வேண்டும், திரும்ப படிக்க வேண்டும், திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதும் பொருத்தமாகும்.

முதல் முறை படிக்கும் போது நீங்கள் படிப்பதில் 30 சதவீத அளவே உங்கள் மனதில் தங்கும்.

இரண்டாம் முறை படிக்கும் போது நீங்கள் படிப்பதில் 50 சதவீதம் வரை மனிதல் தங்கும்.

மூன்றாம் முறை படிக்கும் போது 70 சதவீதம் வரை தங்கும்.

நான்காம் முறை படிக்கும் போது இந்த அளவு 80 சதவீதமாகும்.

ஐந்தாம் முறை படிக்கும் போது 90 சதவீதத்தை எட்டுவீர்கள்.

குறைந்தபட்சம் போட்டித் தேர்வுக்காகப் படிக்க வேண்டிய புத்தகங்களை நீங்கள் ஐந்து முறையாவது திரும்ப திரும்ப படிக்க வேண்டும்.

அதற்குப் பின்புதான் நீங்கள் குறிப்பெடுக்க துவங்க வேண்டும். நீங்கள் எடுக்கும் குறிப்புகள் நீங்கள் படித்த பக்கங்களில் பத்தில் ஒரு பங்காக இருப்பது நல்லது. அதாவது பத்து பக்கங்களுக்கு ஒரு பக்கம் என்கிற அளவில் எடுக்கப்படுவதுதான் சரியான குறிப்புகளாகும். அதற்கு நீங்கள் ஐந்து முறை திரும்ப திரும்ப படித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை படிக்கும் போதும், நீங்கள் படித்து முடித்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்களுக்கு நீங்கள் படித்தவற்றைக் கண்களை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள். பிறகு அவற்றை நினைவிலிருந்து சிறு சிறு குறிப்புகளாக எழுதிப் பாருங்கள். இது படித்தவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும். இப்படிச் செய்யும் போது அடுத்தடுத்த முறைகளில் அதற்கேற்ப உங்கள் மனமானது நினைவில் வைத்துக் கொள்வதற்கேற்ப படிக்கத் துவங்கும்.

படிக்கும் போது எப்படிப் படிக்க வேண்டும் என்றால் ஆழ்ந்து படிக்க வேண்டும். அது எப்படியென்றால் நீங்கள் வாட்ஸஆப் அல்லது பேஸ்புக் பார்க்கும் போது எப்படி பார்க்கிறீர்கள்? அப்போது உங்களை யாராவது கூப்பிட்டாலோ, உங்களிடம் எதாவது செய்திகளைச் சொன்னாலோ, அப்போது எவ்வளவு சத்தமான சூழ்நிலைகள் நிலவினாலோ அது எதுவும் உங்கள் கவனத்திற்கே வராமல் உங்கள் கவனம் முழுவதும் வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கில் மட்டும் எப்படி உள்ளதோ அப்படி இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாகப் படிப்பதில் ஒழுக்கம் முக்கியமானது. தினந்தோறும் காலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை படிப்பது என்று முடிவு செய்து விட்டால், அந்த நேரத்தில் படிப்பைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யாமல் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும்.

ஒரு நாளில் வேறு வேலையில்லாமல் வெட்டியாக அமர்ந்திருக்கும் பொழுதுகள் நமக்குப் பல கிடைக்கும். அது போன்ற பொழுதுகளில் படித்தவற்றைப் பற்றி நாம் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பாருங்கள். அதற்கேற்ப குறிப்புகளை உங்கள் வசதிக்கேற்ற வகையில் கையடக்கமாகவோ அல்லது பையடக்கமாகவோ அமையும் வகையில் குறிப்பேடுகளை அமைத்துக் கொண்டு குறிப்பெடுத்து எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முறைகளைக் கையாண்டால் எந்தப் போட்டித் தேர்விலும் உங்களால் வெற்றி வாகை சூட முடியும்.

*****

Tuesday, 16 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.09.2025)

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.09.2025)

1) இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் பாரதப் பிரதமருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.

2) தமிழகத்தில் 68000 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74000 ஆக உயர்கிறது.

3) தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

4) இமாச்சலப் பிரதேம் மற்றும் உத்திரகாண்டில் பெய்த பெருமழைக்கு 18 பேர் பலியாகினர். மகாராஷ்டிராவில் பெய்த பெருமழைக்கு 3 பேர் பலியாகினர்.

5) 12000க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு மின்னணுசில்லு பொருத்தும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

6) இந்தியா அமெரிக்க இடையிலான இருதரப்பு வர்த்தகப் பேச்சு மீண்டும் தொடங்கியது.

7) இன்று 17 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Today's Education & General Knowledge News (17.09.2025)

1) Today is the birthday of Indian Prime Minister Narendra Modi. US President Donald Trump whished the Indian Prime Minister over the phone.

2) The number of polling booths in Tamil Nadu has increased from 68000 to 74000.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has written a letter to the Prime Minister to take steps to alleviate the fertilizer shortage in Tamil Nadu.

4) 18 people died due to heavy rains in Himachal Pradesh and Uttarakhand. 3 people died due to heavy rains in Maharashtra.

5) Chennai Corporation has undertaken the task of implanting micro chips in more than 12000 stray dogs.

6) Bilateral trade talks between India and the US have resumed.

7) Heavy rain warning has been issued for 17 districts today.

*****

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - Paper II) – English Pattern

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - Paper II) – English Pattern

English – Paper II

Total Marks Allotment 30

Grammar

Marks Allotment 18

Prose – Poem – Supplementar Reader

Marks Allotment 12

1. Articles

2. Sentence Pattern

3. Tenses

4. American – British English

5. Compound Words

6. Clipped Words

7. Syllabification

8. If Clause

9. Question Tags

10. Sub Verb Agreements

11. Active & Passive Voice

12. Direct & Indirect Speech

13. Error Spotting

14. Abreviation

15. Sigular - Plural

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பப் படிவம்

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பப் படிவம்

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பப் படிவ மாதிரியைக் கீழே காண்க.

*****

Monday, 15 September 2025

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் (16.09.2025)

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் (16.09.2025)

1) மத்திய கல்வி வாரியப் பள்ளிகளில் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப் பதிவும், அக மதிப்பீடும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2) வருமான வரி தாக்கல் செய்ய நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

3) நாய் கடித்தவர்கள் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

4) முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆந்த்ரோத் நீர்மூழ்கிக் கப்பல் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

5) உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சாதனையாளர் பரிசை இந்தியாவின் வைஷாலி பெற்றார்.



Education & GK News

1) 75 percent attendance and internal assessment have been made mandatory for students appearing for Class 10 and Class 12 exams in Central Board of Secondary Education (CBSE) schools.

2) The Income Tax Department has announced that an additional day will be given today as the deadline for filing income tax returns expired yesterday.

3) The Health Department has advised that those bitten by dogs should get rabies vaccination immediately.

4) The fully-made Androth submarine was handed over to the Navy.

5) India's Vaishali won the championship prize in a chess tournament held in Uzbekistan.

*****

Sunday, 14 September 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.09.2025)

இன்று பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம்.

1) பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரம் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

2) கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2000 கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

3) ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான மூங்கில் உயிரி எத்தனால் ஆலையை அசாமில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகில் இப்படி ஓர் ஆலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

4) மிசோராமின் முதல் தொடர்வண்டி வழித்தடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்.

5) வரத்துக் குறைவாகக் காரணமாக மல்லிகைப்பூ கிலோ 2100 ரூபாயாக உயர்ந்தது.

6) சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு தொடர்பான பதாகைகளை வணிக நிறுவனங்கள் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

7) ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.














Education & GK News

Today is the 117th birth anniversary of Perarignar Anna.

1) Tamil Nadu Chief Minister MK Stalin will launch the Anbukaram scheme today, which will provide Rs 2,000 per month to children who have lost their parents.

2) Tamil Nadu Chief Minister MK Stalin laid the foundation stone for projects worth Rs 2,000 crore at a government function in Krishnagiri.

3) Prime Minister Narendra Modi inaugurated a bamboo bio-ethanol plant worth Rs 5,000 crore in Assam. This is the first time such a plant has been set up in the world.

4) The Prime Minister inaugurated Mizoram's first train route.

5) Jasmine rose to Rs 2,100 per kg due to low supply.

6) Finance Minister Nirmala Sitharaman has urged business entities to display banners related to the reduction in the Goods and Services Tax.

7) US President Donald Trump has said that NATO countries should stop buying crude oil from Russia.

Friday, 12 September 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.09.2025)

1) சி.பி. ராதாகிருஷ்ணன் 15 ஆவது துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2) தங்கத்தின் விலை சவரனுக்கு 82000 ரூபாயை எட்டியது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 142 ரூபாயை எட்டியது.

3) யுபிஐ அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு செப்டம்பர் 15 முதல் பத்து லட்சமாக உயர்கிறது.

4) நேபாள வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

5) இந்தியாவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Education & GK News

1) C.P. Radhakrishnan took charge as the 15th Vice President. President Draupadi Murmu administered the oath of office to him.

2) Gold prices touched Rs 82,000 per sovereign. Silver prices also touched Rs 142 per gram.

3) UPI maximum transaction limit to increase to Rs 10 lakh from September 15.

4) Death toll in Nepal violence rises to 51.

5) US President Donald Trump is likely to attend the Quad summit to be held in India, according to reports.

Thursday, 11 September 2025

TET தீர்ப்புக்குச் சீராய்வு மனு!

TET தீர்ப்புக்குச் சீராய்வு மனு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.09.2025)

1) ஓசூரில் விரைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2) தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்தம் டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

3) சுற்றுலா பயணிகள் வருகையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

4) 900 கோடியில் எழும்பூர் தொடர்வண்டி நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

5) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து குறைந்தது.

6) கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பத்தாயிரம் டன் காய்கறிகள் வரத்தால் காய்கறிகளின் விலை குறைந்தது.

7) நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

8) நேபாளத்தில் முன்னாள் நீதிபதி தலைமையில் சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால ஆட்சி அமைகிறது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced that an international airport will be set up in Hosur soon.

2) A major voter registration exercise is to be carried out in Tamil Nadu in December.

3) Tamil Nadu has topped the list of Indian tourist arrivals.

4) Egmore Railway Station is being renovated at a cost of Rs 900 crore.

5) The water level of Mettur Dam has dropped from 120 feet.

6) The price of vegetables has come down due to the arrival of ten thousand tonnes of vegetables at the Koyambedu vegetable market.

7) The Nepal army is actively involved in the work of maintaining peace in Nepal.

8) An interim government is being formed in Nepal under the leadership of former judge Sushila Gargi.

Wednesday, 10 September 2025

Proverbs - பழமொழிகள்

Proverbs - பழமொழிகள்

Blood is thicker than water.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.

 

Haste makes waste.

பதறாத காரியம் சிதறாது.

 

Knowledge is power.

அறிவே வலிமை.

 

Honesty is the best policy.

நேர்மையே சிறந்த கொள்கை.

 

Health is wealth.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

 

Look before you leap.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

 

Make hay while the sun shines.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

 

No pain, no gain.

உழைப்பின்றேல் ஊதியம் இல்லை.

 

No smoke without fire.

நெருப்பில்லாமல் புகையாது.

 

Old is gold.

பழமையே சிறந்தது.

 

East or west, home is the best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.

 

Practice makes perfect.

சித்திரமும் கைப்பழக்கம்.

 

Prevention is better than cure.

வருமுன் காப்பதே நல்லது.

 

Face is the index of the mind.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

 

The child is the father of man.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

 

The early bird catches the worm.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

 

The pen is mightier than the sword.

பேனா முனை கத்தி வாள் முனையை விட வலிமையானது.

 

Where there is a will, there is a way,

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

 

Union is strength.

ஒற்றுபட்டால் உண்டு வாழ்வு.

 

Work while your work, play while you play.

பருவத்தே பயிர் செய்.

 

A friend in need is a friend in indeed.

உண்மையான நண்பனை ஆபத்தில் அறியலாம்.

 

A journey of a thousand miles begins with single step.

ஆயிரம் மைல் தொலைவு எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது.

 

Birds of the same feather flock together.

இனம் இனத்தைச் சேரும்.

 

Bare words buy no barley.

வெறுங்கை முழம் போடாது.

 

Calm before storm.

புயலுக்கு முன்னே அமைதி.

 

Covet all, lose all.

பேராசை பெரு நஷ்டம்.

 

Diamond cuts diamond.

முள்ளை முள்ளால் எடு.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.09.2025)

1) துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12 இல் பதவி ஏற்பார்.

2) பள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு படிப்புகளை சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) தொடங்கியுள்ளது.

3) தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

4) இசைத் துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்குத் தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 13 அன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

5) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்புக்கு 1600 கோடி ரூபாயையும், இமாச்சலப் பிரதேசத்துக்கு 1500 கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

6) நேபாளத்தில் நடைபெற்று வரும் கிளர்ச்சிகளால் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

7) பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) Vice President-elect C.P. Radhakrishnan will take office on September 12.

2) The Indian Institute of Technology (IIT), Chennai, has started artificial intelligence courses for school teachers.

3) The health department has explained that the rapidly spreading fever in Tamil Nadu is influenza fever.

4) The Tamil Nadu government will felicitate Ilayaraja, who celebrated his golden jubilee in the music industry, on September 13.

5) The central government has allocated Rs 1600 crore for Punjab, which was affected by rains and floods, and Rs 1500 crore for Himachal Pradesh.

6) The Indian government has asked people to avoid traveling to Nepal due to the ongoing unrest.

7) US President Donald Trump has said that he is looking forward to talking to Prime Minister Narendra Modi.