Thursday, 11 December 2025

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

உங்கள் அலைபேசியின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செயலிதான் (App) சஞ்சார் செயலி ஆகும்.

திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், இணைய மோசடிகள் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சஞ்சார் சாத்திஎன்ற செயலியை மத்திய அரசு இச்செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம், செல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதைப் பதிவு செய்து அனைத்து தளங்களிலும் முடக்கலாம்.

மோசடி அழைப்புகள், மோசடி குறுஞ்செய்திகள் வரும் எண்களை இந்த செயலி மூலம் ரிபோர்ட் ஸ்பேம்செய்து புகார் அளிக்கலாம்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன, எத்தனை பயனில் உள்ளது என்பதையும் இச்செயலி மூலமாக அறியலாம். உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டுகள் பெறப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை இச்செயலி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் இச்செயலி மூலமாக செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணையும் சரிபார்க்கலாம்.

இச்செயலின் பயன் என்னவென்று கேட்டால்,

கடந்த 11 மாதங்களில் மட்டும் சஞ்சார் சாத்தி செயலி உதவியுடன் தொலைந்து போன 7 லட்சத்துக்கும் அதிகமான அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 42 லட்சம் பேர் இந்த செயலியைப் பயன்படுத்தித் தொலைந்த செல்போன்களை அனைத்து தளங்களில் இருந்து துண்டித்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் இந்தச் செயலி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா! அப்படிப் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment