Wednesday 30 September 2020

TET Certificate Genuineness Application

TET Certificate Genuineness Application

            ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி சான்றிதழுக்கான உண்மைத் தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Tuesday 29 September 2020

ஓய்வூதியதாரர்களுக்கான அரசின் இணையதளம்

ஓய்வூதியதாரர்களுக்கான அரசின் இணையதளம்

ஓய்வூதியதாரர்களுக்காகத் தமிழக அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டால், பின் தங்கள் ஓய்வூதிய எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைந்து தங்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம், பிடித்தம் தொடர்பான விவரங்கள், கடன் பெற்று இருந்தால் அதன் விவரங்கள், 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அலைச்சல் இல்லாமல் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் குறித்த அனைத்த விவரங்களையும் இவ்விணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்விவரத்தை ஓய்வூதியதாரர்கள் பயன்பெற பரவலாகப் பகிர்ந்து உதவவும். ஓய்வூதியதாரர்களுக்கான அவ்விணையதள இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnpensioner.tn.gov.in/pensionportal/


CPS Missing Credit அறிய…

CPS Missing Credit அறிய…

            தொகுப்பூதிய முறையில் (CPS) விடுபட்ட தவணைத் தொகையை (Missing Credit) அறிய தொகுப்பூதிய கணக்கு எண் (CPS No.) மற்றும் பிறந்தநாளை (D.O.B.) ஊள்ளீடு செய்து தொகுப்பூதிய செலுத்துகைப் பட்டியலைப் (CPS Statement) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://cps.tn.gov.in/public/


CPS Missing Credit Form

CPS Missing Credit Form

            தொகுப்பூதிய முறையில் விடுபட்ட தவணைத் தொகையை அறிவதற்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கித் தொகுப்பூதிய கணக்கு எண் மற்றும் பிறந்தநாளை ஊள்ளீடு செய்து தொகுப்பூதிய செலுத்துகைப் பட்டியலைப் பெறவும்.

 http://cps.tn.gov.in/public/

            விடுபட்ட தவணைத் தொகையைத் தொகுப்பூதிய கணக்கில் சேர்ப்பதற்கு நிரப்பிக் கொடுக்க வேண்டிய படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Sunday 27 September 2020

பெற்றோர் அனுமதிக் கடிதம்

பெற்றோர் அனுமதிக் கடிதம்

01.10.2020 முதல் பத்தாம் வகுப்பு / பதினொன்றாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்புப் பயிலும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குப் பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய அனுமதிக் கடிதத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Saturday 26 September 2020

தீபாவளி முன்பணம் கோரும் விண்ணப்பம் - 2020

தீபாவளி முன்பணம் கோரும் விண்ணப்பம் - 2020

2020 ஆம் ஆண்டிற்கான தீபாவளி விழா முன்பணம் கோரும் விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


பள்ளிகளுக்கான கொரோனா விழிப்புணர்வு & பாதுகாப்புக் கையேடு

கொரோனா விழிப்புணர்வு & பாதுகாப்புக் கையேடு

            கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த இச்சூழ்நிலையில் பள்ளி அளவில் விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கையேடு அனைத்துப் பள்ளிகளும் பயன்படுத்தும் வகையில் ஒரு பக்க அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டை அச்சிட்டு தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து இறுதியில் சமூக அக்கறையுடன்... என்பதற்குக் கீழாக தங்கள் பள்ளியின் பெயரை எழுதியோ / பள்ளி முத்திரையிட்டோ பள்ளி மாணவர்களுக்கோ / பெற்றோர்களுக்கோ வழங்கலாம்.

            கையேடு தயாரிப்பு : பா. விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.

            கையேட்டின் PDF ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Friday 25 September 2020

சீருடைப் பணியாளர் தேர்வு - 2020

சீருடைப் பணியாளர் தேர்வு - 2020

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைச் சிறைக் காவலர், தீயணைப்பாளர் போன்ற சீருடைப் பணிகளுக்கு 18 வயது முதல் 24 வயது வரையுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் இணையம் மூலமாக செப்டம்பர் 26, 2020 முதல் அக்டோபர் 26, 2020 வரை விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnusrbonline.org/


வரன் தேடுவோருக்கான ஜாதகப் படிவம்

வரன் தேடுவோருக்கான ஜாதகப் படிவம்

            மணமகன் அல்லது மணமகள் வரன் தேடுவோர் தங்களுக்கான ஜாதகப் படிவத்தைத் தயாரிக்க இணைப்பில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான கட்டங்களில் சொடுக்கித் தட்டச்சு செய்து தயாரித்து அச்செடுத்துக் கொள்ளலாம். அல்லது படிவத்தை அச்செடுத்து கையால் நிரப்பியும் தயார் செய்து கொள்ளலாம். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Wednesday 23 September 2020

பள்ளி மானியத்திற்கான பயனீட்டுச் சான்றிதழ்

பள்ளி மானியத்திற்கான பயனீட்டுச் சான்றிதழ்

            2019 – 2020 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி மானிய ஒதுக்கீட்டிற்கான பயனீட்டுச் சான்றிதழ் படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

 Click Here to Download


Tuesday 22 September 2020

போஷான் அபியான் வினாடி வினாவில் கலந்து கொள்ள

போஷான் அபியான் வினாடி வினாவில் கலந்து கொள்ள

07.09.2020 லிருந்து 30.09.2020 வரை போஷான் அபியான் வினாடி வினா போட்டியில் இணைய வழியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகாளவன.

1.

போஷான் அபியான் இணைய இணைப்பைச் சொடுக்கி (இணைய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறுவதற்கு Email / Mobile Log In With OTP என்பதனுள் அலைபேசி எண்ணைப் பதிவு செய்து Log In With OTP என்பதைச் சொடுக்க வேண்டும்.

2.

தற்போது தோன்றும் திரையில்

1.      மாணவரின் பெயர்

2.      மின்னஞ்சல் முகவரி

3.      நாடு (இதில் இந்தியா என இயல்பாகவே பதிவாகியிருக்கும். வேறு நாடாயின் மட்டும் நாட்டை மாற்றிக் கொள்ளவும்)

4.      அலைபேசி எண்

5.      பிறந்த நாள்

6.      பாலினம் போன்றவற்றைப் பதிவு செய்து Create New Account என்பதைச் சொடுக்க வேண்டும்.

3.

அலைபேசியில் ஒரு முறை கடவுச் சொல்லும், இணையப்பக்கத்தில் நுழைவதற்கான கடவுச்சொல்லும் அடுத்தடுத்து குறுஞ்செய்திகளாக வந்திருக்கும்.

4.

தற்போது தோன்றும் திரையில் ஒரு முறை கடவுச்சொல்லைக் கொடுத்து Create New Account என்பதைச் சொடுக்கி உள்நுழையவும்.

5.

உள்நுழைந்தவுடன் தோன்றும் திரையில் அலைபேசி எண்ணை பயனீட்டுச் சொல்லாகவும், இரண்டாவதாக வந்த குறுஞ்செய்தியில் இருக்கும் கடவுச்சொல்லைக் கடவுச்சொல்லாகவும் பயன்படுத்தி உள்நுழையவும்.

6.

தற்போது தோன்றும் திரையில் உள்ள சின்னங்களில் (icons) My Gov Quiz என்பதைச் சொடுக்கி, அடுத்ததாகத் தோன்றும் திரையில் Poshan Abhiyaan Quiz என்பதைச் சொடுக்கி, அதற்கடுத்தாற் போல் தோன்றும் திரைகளில்ல் Play Quiz மற்றும் Login to play Quiz என்பனவற்றைச் சொடுக்கி அதனைத் தொடர்ந்து Start Quiz என்பதைச் சொடுக்கவும்.

7.

தற்போது தோன்றும் திரையில் மின்னஞ்சல், பெயர், அலைபேசி எண் போன்ற விவரங்கள் பதியப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் அவ்விவரங்களைப் பதிந்து கொள்ளவும். அத்துடன் பிறந்த நாள், பாலினம், மாநிலம், முகவரி போன்ற விவரங்களையும் பதிவு செய்து Submit to Start என்பதைச் சொடுக்கி வினாடி வினாவில் பங்கேற்கவும்.

8.

ஒரு நிமிடத்திற்குள் 6 வினாக்களுக்கு நான்கு விடைகளுள் சரியானதைத் தேர்வு செய்து அடுத்தடுத்த வினாக்களுக்கு Next என்பதைச் சொடுக்கிச் செல்லவும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருககும். ஒரு நிமிடத்திற்கு மேல் இவ்வினாடி வினாவில் கலந்து கொள்ள முடியாது என்பதால் அதற்கேற்ப எத்தனை வினாக்களுக்கு விடையளிக்கப்படுகிறதோ அது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு நிமிடத்திற்குள் விடையளித்து முடித்து விட்டால் Finish Quiz என்பதைச் சொடுக்கவும். ஒரு நிமிடத்தைக் கடந்தால் தாமாகே வினாடி வினா முடிவுக்கு வந்து விடும்.

9.

தற்போது தோன்றும் திரையில் வரும் Download Certificate என்பதைச் சொடுக்கிச் சான்றிதழைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

10.

ஒரு அலைபேசி எண்ணைக் கொண்டு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்ற முடியும் என்பதால் ஒவ்வொரு மாணவரும் அவரவர்க்கு உரிய அலைபேசி எண்ணைக் கொண்டே இவ்வினாடி வினாவில் கலந்த கொள்ள முடியும். செப்டம்பர் 30, 2020 வரை இவ்வினாடி வினாவில் பள்ளி மாணவர்கள் கலந்த கொள்ளலாம்.

இவ்வினாடி வினாவில் கலந்து கொள்வதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize


Saturday 19 September 2020

விலையில்லா முட்டைகள் வழங்கல் பதிவேடு

விலையில்லா முட்டைகள் வழங்கல் பதிவேடு

பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா முட்டைக்கான பதிவேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download


Friday 18 September 2020

கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணி

கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணி

3162 காலிப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 40 வயது வரையுள்ள 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வில்லாத மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இப்பணிக்கு செப்டம்பர் 30, 2020 வரை இணையம் மூலம் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://appost.in/gdsonline


Thursday 17 September 2020

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

1.

முதலில் பள்ளியின் UDISE எண்ணைப் புதுப்பித்தல் (update) செய்யவும்.

2.

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி எனில் 6 முதல் 10 வகுப்பு வரை 5 மாணவர்களை வகுப்புக்கு ஒன்று வீதமோ அல்லது ஒரே வகுப்பிலோ தேர்வு செய்து கொள்ளலாம். 5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். நடுநிலைப் பள்ளி எனில் 6 முதல் 8 வரை 3 மாணவர்களை வகுப்புக்கு ஒன்று வீதமோ அல்லது ஒரே வகுப்பிலோ தேர்வு செய்து கொள்ளலாம்.

3.

மாணவர் விவரங்கள்

பெயர்

பெற்றோர் பெயர்

வகுப்பு

ஆதார் எண்

கைபேசி எண்

இனம்

புகைப்படம் (JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

வங்கிக் கணக்குப் புத்தகம்

4.

செயல்திட்ட விவரங்கள்

செயல்திட்ட தலைப்பு (ஒவ்வொரு மாணவருக்கும்)

செயல்திட்ட கருத்துரு (300 வார்த்தைகளுக்கு மிகாமல்). இக்கருத்ருவைத் தட்டச்சு செய்தோ அல்லது கையால் எழுதி Scan செய்து JPG / PNG / WORD / PDF FORMAT இல் FILE SIZE 2MB  அளவுக்கும் பதிவேற்றம் செய்யலாம். செயல்திட்டத்தைத் தமிழ் மொழியிலும் பதிவேற்றம் செய்யலாம். மேலும் செயல்திட்டம் தொடர்பான படங்கள், ஒலிப்பதிவுகள் (5MB Size), காணொலிகள் (5MB Size) போன்றவற்றையும் பதிவேற்றம் செய்யலாம் எனினும் இது கட்டாயம் இல்லை.

5.

வழிகாட்டி ஆசிரியர் விவரம்

பெயர்

கைபேசி எண்

6.

தலைமை ஆசிரியர் விவரம்

பெயர்

கைபேசி எண்

7.

மாணவர் தேர்வு

குறிப்பிட்ட மாணவர்களைச் செயல்திட்டத்திற்குத் தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து வழிகாட்டி ஆசிரியரின் கருத்து

8.

விண்ணப்பிக்க… (இணைப்பைச் சொடுக்கவும்)

http://www.inspireawards-dst.gov.in/userp/school-authority.aspx 


Tuesday 15 September 2020

விலையில்லா சீருடைகள் வழங்கல் பதிவேடு

விலையில்லா சீருடைகள் வழங்கல் பதிவேடு
2020 – 2021 கல்வியாண்டிற்கான முதல் தொகுப்பு விலையில்லா சீருடைகள் வழங்கல் பதிவேட்டைத் தயாரிக்க கீழே இணைப்பில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு படிவத்தில் 20 மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படிவத்தை பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் சீருடைகள் வழங்கப்பட்ட எண்ணிக்கை சுருக்கத்திற்கான படிவமும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் தேவையான இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுக்குக் கீழே சொடுக்கவும்.
சீருடைகள் வழங்குவதற்கான மாணவர் பட்டியலைப் பெற…

தொடக்கப் பள்ளிக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…

நடுநிலைப் பள்ளிகளுக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…


உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான வரைவோலை விவரம்

உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான வரைவோலை விவரம்

வ. எண்

பல்கலைக்கழகத்தின் பெயர்

வரைவேலை எடுக்க வேண்டிய விவரம்

தொகை

1.

அண்ணாமலை பல்கலைக்கழகம்

The Registrar, Annamalai University payable at Chidambaram

ரூ. 1000/-

2.

அழகப்பா பல்கலைக்கழகம்

The Registrar, Alagappa University payable at Karaikudi

ரூ. 1250/-

3.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

IGNOU payable at New Delhi

ரூ. 400/-

4.

சென்னைப் பல்கலைக்கழகம்

The Registrar, University of Madras payable at Chennai

ரூ. 1000/-

5.

பாரதியார் பல்கலைக்கழகம்

The Registrar, Bharathiyar University payable at Coimbatore

ரூ. 1500/-

6.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Bharathidasan University payable at Tiruchirapalli.

ரூ. 2000/-

7.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

The Registrar, Manonmaniyam Sundaranar University payable at Thirunelveli

ரூ. 1000/-


Sunday 13 September 2020

சென்னைப் பல்கலைக்கழக உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

சென்னைப் பல்கலைக்கழக உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றோர் உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களைப் பெற கீழே உள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

வட்டாரக் கல்வி அலுவருக்குக் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பெற கீழே சொடுக்கவும் :

 Click Here to Download

பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பெற கீழே சொடுக்கவும் :

 Click Here to Download

உண்மைத்தன்மை சான்றிதழுக்கான படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்

 Click Here to Download