ஓய்வூதியதாரர்களுக்கான அரசின் இணையதளம்
ஓய்வூதியதாரர்களுக்காகத் தமிழக அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில் தங்களைப்
பதிவு செய்து கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டால், பின் தங்கள் ஓய்வூதிய எண் மற்றும்
கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைந்து தங்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம், பிடித்தம் தொடர்பான
விவரங்கள், கடன் பெற்று இருந்தால் அதன் விவரங்கள், 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன்
வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அலைச்சல் இல்லாமல் ஓய்வூதியதாரர்கள்
தங்களின் ஓய்வூதியம் குறித்த அனைத்த விவரங்களையும் இவ்விணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்விவரத்தை ஓய்வூதியதாரர்கள் பயன்பெற பரவலாகப் பகிர்ந்து உதவவும். ஓய்வூதியதாரர்களுக்கான
அவ்விணையதள இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment