Tuesday, 22 September 2020

போஷான் அபியான் வினாடி வினாவில் கலந்து கொள்ள

போஷான் அபியான் வினாடி வினாவில் கலந்து கொள்ள

07.09.2020 லிருந்து 30.09.2020 வரை போஷான் அபியான் வினாடி வினா போட்டியில் இணைய வழியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகாளவன.

1.

போஷான் அபியான் இணைய இணைப்பைச் சொடுக்கி (இணைய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறுவதற்கு Email / Mobile Log In With OTP என்பதனுள் அலைபேசி எண்ணைப் பதிவு செய்து Log In With OTP என்பதைச் சொடுக்க வேண்டும்.

2.

தற்போது தோன்றும் திரையில்

1.      மாணவரின் பெயர்

2.      மின்னஞ்சல் முகவரி

3.      நாடு (இதில் இந்தியா என இயல்பாகவே பதிவாகியிருக்கும். வேறு நாடாயின் மட்டும் நாட்டை மாற்றிக் கொள்ளவும்)

4.      அலைபேசி எண்

5.      பிறந்த நாள்

6.      பாலினம் போன்றவற்றைப் பதிவு செய்து Create New Account என்பதைச் சொடுக்க வேண்டும்.

3.

அலைபேசியில் ஒரு முறை கடவுச் சொல்லும், இணையப்பக்கத்தில் நுழைவதற்கான கடவுச்சொல்லும் அடுத்தடுத்து குறுஞ்செய்திகளாக வந்திருக்கும்.

4.

தற்போது தோன்றும் திரையில் ஒரு முறை கடவுச்சொல்லைக் கொடுத்து Create New Account என்பதைச் சொடுக்கி உள்நுழையவும்.

5.

உள்நுழைந்தவுடன் தோன்றும் திரையில் அலைபேசி எண்ணை பயனீட்டுச் சொல்லாகவும், இரண்டாவதாக வந்த குறுஞ்செய்தியில் இருக்கும் கடவுச்சொல்லைக் கடவுச்சொல்லாகவும் பயன்படுத்தி உள்நுழையவும்.

6.

தற்போது தோன்றும் திரையில் உள்ள சின்னங்களில் (icons) My Gov Quiz என்பதைச் சொடுக்கி, அடுத்ததாகத் தோன்றும் திரையில் Poshan Abhiyaan Quiz என்பதைச் சொடுக்கி, அதற்கடுத்தாற் போல் தோன்றும் திரைகளில்ல் Play Quiz மற்றும் Login to play Quiz என்பனவற்றைச் சொடுக்கி அதனைத் தொடர்ந்து Start Quiz என்பதைச் சொடுக்கவும்.

7.

தற்போது தோன்றும் திரையில் மின்னஞ்சல், பெயர், அலைபேசி எண் போன்ற விவரங்கள் பதியப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் அவ்விவரங்களைப் பதிந்து கொள்ளவும். அத்துடன் பிறந்த நாள், பாலினம், மாநிலம், முகவரி போன்ற விவரங்களையும் பதிவு செய்து Submit to Start என்பதைச் சொடுக்கி வினாடி வினாவில் பங்கேற்கவும்.

8.

ஒரு நிமிடத்திற்குள் 6 வினாக்களுக்கு நான்கு விடைகளுள் சரியானதைத் தேர்வு செய்து அடுத்தடுத்த வினாக்களுக்கு Next என்பதைச் சொடுக்கிச் செல்லவும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருககும். ஒரு நிமிடத்திற்கு மேல் இவ்வினாடி வினாவில் கலந்து கொள்ள முடியாது என்பதால் அதற்கேற்ப எத்தனை வினாக்களுக்கு விடையளிக்கப்படுகிறதோ அது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு நிமிடத்திற்குள் விடையளித்து முடித்து விட்டால் Finish Quiz என்பதைச் சொடுக்கவும். ஒரு நிமிடத்தைக் கடந்தால் தாமாகே வினாடி வினா முடிவுக்கு வந்து விடும்.

9.

தற்போது தோன்றும் திரையில் வரும் Download Certificate என்பதைச் சொடுக்கிச் சான்றிதழைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

10.

ஒரு அலைபேசி எண்ணைக் கொண்டு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்ற முடியும் என்பதால் ஒவ்வொரு மாணவரும் அவரவர்க்கு உரிய அலைபேசி எண்ணைக் கொண்டே இவ்வினாடி வினாவில் கலந்த கொள்ள முடியும். செப்டம்பர் 30, 2020 வரை இவ்வினாடி வினாவில் பள்ளி மாணவர்கள் கலந்த கொள்ளலாம்.

இவ்வினாடி வினாவில் கலந்து கொள்வதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://auth.mygov.in/user/login?destination=oauth2/authorize


No comments:

Post a Comment