Monday, 21 December 2020

உங்கள் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா?

உங்கள் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா?

            உங்களது குடும்ப அட்டை எனும் ரேஷன் கார்டுக்குப் பொங்கல் பரிசு கிடைக்குமா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

            உங்களது குடும்ப அட்டையின் எண்ணுக்கு மேல் உள்ள குறியீட்டைக் கவனியுங்கள். இக்குறியீடானது PHHRICE, PHAA, NPHH, NPHH-S, NPHHNC என இவ்வைந்து வகைகளில் ஒன்றாக இருக்கும். இக்குறியீடுகளின் விளக்கங்களை முதலில் அறிந்து கொள்வோம்.

குறியீடு

விளக்கம்

PHHRICE

அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை பெற்ற ரேஷன் அட்டைகள்

PHAA

35 கிலோ அரிசியுடன் அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை பெற்ற ரேஷன் அட்டைகள்

NPHH

அரிசி, பருப்பு, எண்ணெய் உட்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற முன்னுரிமை இல்லாத ரேஷன் அட்டைகள்

NPHH-S

அரிசியைத் தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைப் பெறுவதற்கான ரேஷன் அட்டைகள்

NPHHNC

எவ்வித ரேஷன் பொருட்களும் வேண்டப்படாத ரேஷன் அட்டைகள். இவ்வித அட்டைகள் அடையாள அட்டையாகவோ அல்லது முகவரிச் சான்று அட்டையாகவோ மட்டும் பயன்படுத்தக் கூடியன ஆகும்.

இவ்வித ரேஷன் அட்டைகளில் NPHH-S மற்றும் NPHHNC ரேஷன் அட்டைகள் தவிர மற்ற அட்டைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும், அரசு வழங்கும் பரிசுப் பொருட்களும் கிடைக்கும். தாங்கள் NPHH-S ரேஷன் அட்டைதாரராக இருந்தால் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைத்து ரேஷன் பொருட்களையும் பெறும் வகையில் சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசிக்கான ரேஷன் அட்டையாக உரிய சான்றுகள் மூலம் விண்ணப்பம் செய்து மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவோ, நேரடியாக வட்ட வழங்கல் அலுவலரிடமோ விண்ணப்பித்தோ செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணபிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnpds.gov.in/

No comments:

Post a Comment