Tuesday, 31 December 2019

வாக்கு எண்ணுகைப் பணிக்கான மதிப்பூதியம்


வாக்கு எண்ணுகைப் பணிக்கான மதிப்பூதியம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 இன் வாக்கு எண்ணுகைப் பணிக்கான மதிப்பூதிய விவரம்
எண்ணுகை மேற்பார்வையாளர்
ரூ. 850
எண்ணுகை உதவியாளர்
ரூ. 650
நுண் பார்வையாளர்
ரூ. 500

வாக்கு எண்ணுகைப் பணிகள் குறித்த கட்டகம்

வாக்கு எண்ணுகைப் பணிகள் குறித்த கட்டகம்
வாக்கு எண்ணுவதற்கான அமைப்பு முறை, வாக்கு எண்ணும் பணிமுறை, வாக்குகளை எண்ணி வெற்றியை அறிவிக்கும் முறை என அனைத்து விதமான வாக்கு எண்ணுகைப் பணிகள் குறித்த இக்கட்டகம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் உதவியாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாகும். இக்கட்டகத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


Monday, 30 December 2019

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான கையேடு

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான கையேடு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 இல் வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்கு எண்ணும் அலுவல் முறைகளைப் பற்றிய Counting Instructions Guide ஐ பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


Wednesday, 25 December 2019

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி அறிய…


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி அறிய…
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2019 இல் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி தலைமை அலுவராக (PRO) அல்லது வாக்குப்பதிவு அலுவலர்களாக (P.O.) பணியாற்ற உள்ளவர்கள் தாங்கள் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடியை நாளை 29.12.2019 காலை 10.00 மணி அளவில் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதில் தங்களின் Election ID எண்ணை உள்ளீடு செய்து, தோன்றும் Captcha வைத் தட்டச்சு செய்து Submit கொடுத்து அறியலாம்.
இணைப்பு :

*****

Monday, 23 December 2019

வாக்குச்சாவடி அலுவல் முறைக்கான கையேடு


வாக்குச்சாவடி அலுவல் முறைக்கான கையேடு
            ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 இல் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்குத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் இக்கையேடு வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு மட்மல்லாது அனைத்து வாக்குச்சாவடி அலுவர்களும் படித்துப் பயன்பெறக் கூடியது ஆகும். தேர்தல் பணி குறித்த முழுமையான அறிவையும், தெளிவையும் பெற உதவும் இக்கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

•••••

Sunday, 22 December 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கான நிரப்பப்பட்ட படிவங்கள்


உள்ளாட்சித் தேர்தல் குறிப்புப் படிவங்கள்
            ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 இல் பணிபுரிய இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயன்படும் முக்கிய குறிப்புகளைக் குறித்துக் கொள்வதற்கான இப்படிவம் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கும் பிற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் பெரிதும் பயன்தரும். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான நிரப்பப்பட்ட படிவங்கள்
            வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நிரப்ப வேண்டிய பல்வேறு படிவங்களின் நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவருக்குப் பயனுள்ளது. இதனைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

•••••

Saturday, 21 December 2019

வாக்குப்பதிவு அலுவல் முறைகள்


வாக்குப்பதிவு அலுவல் முறைகள்
வாக்குப்பதிவு அலுவல் முறைகள் எனும் கையேடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 இல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer), வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Officers) மேற்கொள்ள வேண்டிய வாக்குப்பதிவு அலுவல் முறைகள் பற்றி எளிய முறையில் எடுத்துச் சொல்கிறது. வாக்குப்பதிவிற்கு முன், வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவிற்குப் பின் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி வாக்குப்பதிவு அலுவலர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பயனுள்ள குறிப்புகளைப் பற்றி இனிய முறையில் சொல்கிறது இக்கையேடு. இக்கையேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்


இக்கையேட்டைக் காணொலியாகக் காண :


Friday, 20 December 2019

5th,8th Public Exam Time Table - 2020

5th,8th Public Exam Time Table - 2020
5th Public Exam Time Table - 2020

காலம் : முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 12.15 வரை
நாள்
கிழமை
பாடம்
15.04.2020
புதன்
தமிழ்
17.04.2020
வெள்ளி
ஆங்கிலம்
20.04.2020
திங்கள்
கணக்கு

8th Public Exam Time Table - 2020

காலம் : முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 12.15 வரை
நாள்
கிழமை
பாடம்
30.03.2020
திங்கள்
தமிழ்
12.04.2020
வியாழன்
ஆங்கிலம்
08.04.2020
புதன்
கணக்கு
15.04.2020
புதன்
அறிவியல்
17.04.2020
வெள்ளி
சமூக அறிவியல்

*****


ஆசிரியர்கள் பகுதி நேர Ph.D. செய்ய…


ஆசிரியர்கள் பகுதி நேர Ph.D. செய்ய…

தற்போது ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் முழுநேரமாக பிஎச்.டி. பயில வாய்ப்பில்லாமல் பணியில் இருப்பவர்கள் Part time Ph.D. செய்வதற்கான வாய்ப்பைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதற்காக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சேர்க்கை  பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
யு.ஜி.சி. மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன.  
Ph.D. க்கான பாடப் பிரிவுகள்
1.      கல்வி,
2.      முதியோர் கல்வி,
3.      பொருளாதாரம்,
4.      தொடா் கல்வி,
5.      விலங்கியல்,
6.      தாவரவியல்,
7.      வேதியியல்,
8.      இயற்பியல்,
9.      தமிழ்,
10.  மின்னணு ஊடக கல்வி,
11.  புவியியல்,
12.  வரலாறு,
13.  பண்டைய வரலாறு,
14.  தொல்லியல்,
15.  குற்றவியல் நடைமுறைகள்
உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம் என
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தவிரவும் முழுநேரமாக யுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சேர்க்கை பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களை

 என்ற வலைதள முகவரியிலிருந்து (மேலே உள்ள வலைதள முகவரியைச் சொடுக்கியும் செல்லலாம்) தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.01.2020 ஆகும்.
            விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*****

BEO தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…


BEO தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்…
BEO எனப்படும் வட்டாரக் கல்வி அலுவலர்களைத் பணிதெரிவு  செய்வதற்கான தேர்விற்கு தற்போது இணைய வழி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி

மேலே உள்ள வலைதள முகவரியைச் சொடுக்கியும் அவ்விணையதள முவரிக்குச் செல்லலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.01.2020 ஆகும்.
            மேலும் வட்டாரக் கல்வி அலுவர் தெரிவுக்கான தகுதி மற்றும் அறிவிக்கைச் சார்ந்த இன்னபிற விவரங்களை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி PDF ஆவணமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*****

Wednesday, 18 December 2019

EMIS இல் CCE மதிப்பெண்களை நிரப்பும் எளிய முறை


EMIS இல் CCE மதிப்பெண்களை நிரப்பும் எளிய முறை

என்ற வலைதள முகவரிக்குச் சென்று Username மற்றும் Password கொடுத்து உள்நுழைய வேண்டும். (மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கியும் வலைதளத்துக்குச் செல்லலாம்)
உள்நுழைந்த பின்
Students என்ற கலத்தில்
Academic records என்ற கலத்தைத் தேர்வு செய்து
Subject-wise CCE Records என்ற கலத்தைத் தேர்வு செய்து சொடுக்கவும்.
அதைத் தொடர்ந்து திறக்கும் பக்கத்தில்,
Select term
Select class
Select Section
Select Subject ஆகியவற்றில் தேவையான Options களைச் சொடுக்கி
Submit கொடுத்தால் தேவையான வகுப்பின் தேவையான பாடத்திற்கான மதிப்பெண்கள் நிரப்புவதற்கான படிவம் திறக்கும். அதில் ஒவ்வொரு மாணவருக்கும் F.A.(A) விற்கான நான்கு வித மதிப்பெண்கள், F.A.(B)க்கான நான்கு வித மதிப்பெண்கள் மற்றும் S.A. வின் மதிப்பெண்ணுக்கான கலத்தைச் சொடுக்கி தட்டச்சு செய்து மதிப்பெண்களை நிரப்பி Save செய்தல் வேண்டும்.

Co - Scholastic CCE Record மதிப்பெண்களை நிரப்புவதற்கு அதே போல்
Students என்ற கலத்தில்
Academic records என்ற கலத்தைத் தேர்வு செய்து
Co Sholastic CCE Record என்ற கலத்தைத் தேர்வு செய்து சொடுக்கவும்.
அதைத் தொடர்ந்து திறக்கும் பக்கத்தில்
Select term
Select class
ஆகியவற்றில் தேவையான Options களைச் சொடுக்கி
Submit கொடுத்தால் திறக்கும் பக்கத்தில் தேவையான வகுப்பின் Co Sholastic  மதிப்பெண்களைத் தொடர்புடைய கலத்தைச் சொடுக்கி தட்டச்சு செய்து நிரப்பி Save செய்தல் வேண்டும்.
*****


SHAALA SIDDHI ஐ நிரப்பும் எளிய முறை


SHAALA SIDDHI ஐ நிரப்பும் எளிய முறை

            Shaala Siddi ஐ இணையத்தில் நிரப்பி பதிவேற்றுவதற்கு முன் பின்வரும் இணைப்பில் உள்ள Offline Format ஐ பதிவிறக்கம் செய்து அச்சிட்டு அதில் விவரங்களை நிரப்பிக் கொள்ளுதல் நலம்.
இணைப்பு :
            Shaala Siddi இன் Offline Format இல் விவரங்களை நிரப்பிய பின் http://shaalasiddhi.niepa.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று (இம்முகவரி இணைப்பைச் சொடுக்கியும் செல்லலாம்) அதற்கான User name மற்றும் Password ஐ கொடுத்து அதில் கேட்கப்படும் விவரங்களைத் தட்டச்சு செய்தும், Options களில் பொருத்தமானதைச் சொடுக்கியும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
            Username ஐ பொருத்தவரை அது பள்ளியின் UDISE Code ஆகும். Password ஐ பொருத்த வரையில் தொடக்கப்பள்ளி எனில் PUPS@ என ஆரம்பித்து அப்பள்ளியின் UDISE Code இன் கடைசி நான்கு இலக்கமாக அமையும். நடுநிலைப்பள்ளி எனில் PUMS@ என ஆரம்பித்து அப்பள்ளியின் UDISE Code இன் கடைசி நான்கு இலக்கமாக அமையும். இது குறித்து தொடர்புடைய ஆசிரிய பயிற்றுநரிடம் உறுதிப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது ஆசிரியர்களோ இப்படிவத்தை இணையத்தில் பதிவேற்றி சமர்ப்பிக்க முடியும்.
அல்லது Shaala Siddi இன் Offline Format ஐ நிரப்பி தொடர்புடைய ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைத்தால் அவர் இணையத்தில் பதிவேற்றும் பணியை முடித்துக் கொடுப்பார். மேலும் இப்படிவத்தை நிரப்புவதிலோ, இணையத்தில் பதிவேற்றுவதிலோ எழும் ஐயப்பாடுகளுக்கு தொடர்புடைய ஆசிரியர் பயிற்றுநரைத் தொடர்பு கொள்ளுதல் நலம்.
*****



உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அறிய


ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 க்கான வாக்காளர் பாகம் எண், வரிசை எண் மற்றும் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குசாவடி இடம் குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி தங்களது வாக்களர் அடையாள அட்டையின் எண்ணைக் கொடுத்து, அதற்குக் கீழே தென்படும் Captcha வைத் தட்டச்சு செய்து, Show Result என்பதைச் சொடுக்கவும்.


தமிழ் மாதங்கள் குறித்துச் சொல் பகுத்து அறிந்து கொள்ள வேண்டியவை


தமிழ் மாதங்கள் குறித்துச் சொல் பகுத்து அறிந்து கொள்ள வேண்டியவை

01) சித்திரை :
சித்                  = உயிர்
திரை             = மயக்கம் (மாலை)
சித்திரை        = உயிரின் மயக்கம்.
02) வைகாசி :
காசி                = பிரபஞ்சம்
வை                = மனதை வை
வைகாசி        = பிரபஞ்சத்தில் மனதை வை.
03) ஆனி :
                  = ஆன்மா எனும் ஆழ்மனம்
னி                   = மனதை வை
ஆனி              = ஆன்மாவில் மனதை வை.
04) ஆடி :
                  = ஆற்றல்
டி                    = இயக்கம்
ஆடி                = பிரபஞ்சம் ஆற்றல் களம்
05) ஆவணி :
ஆவ               = இயக்கம்
ஆவணி         = இயக்கம் ஆனவன் நீ
06) புரட்டாசி :
புரட்டு           = திரும்பிப்பார்
புரட்டாசி      = நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.

07) ஐப்பசி :
                    = ஐம்புலன்களின்,
பசி                  = தேவை.
ஐப்பசி           = மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின் தேவைகள்.
08) கார்த்திகை :
மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை, பழக்கம்., சூழ்நிலை, பிறர்மனம் தூண்டல், கருஅமைப்பு, தெய்வீகம்.
09) மார்கழி :
மார்கழி         = பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10) தை :
தை                 = இணைப்பு             = இயற்கையோடு இணைதல்.
11) மாசி :
மா                  = பெரிய, பெரியோர்
ஆசி                = வாழ்த்து பெறுதல்
மாசி               = பெரியோரின் வாழ்த்து பெறுதல்.
12) பங்குனி :
பங்கு              = பாகம்
பங்குனி         = இயற்கையின் ஒருபாகம் மனிதன்.
*****