Monday, 2 December 2019

உள்ளாட்சித் தேர்தல் – 2019 சிறப்புச் செய்திகள்


உள்ளாட்சித் தேர்தல் – 2019
சிறப்புச் செய்திகள்

Ø டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்.

Ø தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு.

Ø முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.

Ø 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.

Ø அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை.

Ø வேட்பாளர் செலவு - கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம்.

Øதேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது.

Ø ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு.
Ø கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும்
Ø கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும்
Ø ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும்
Ø மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும்
வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும்

Ø 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம்.
தேர்தலுக்கான முக்கிய நாட்கள்
Ø 06.12.2019 வேட்புமனு தாக்கல்
Ø 13.12.2019 வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
Ø 16.12.2019 பரிசீலனை
Ø 18.12.2019 திரும்பப் பெறுதல்
Ø 27.12.2019 முதல் கட்டத் தேர்தல்
Ø 30.12.2019 இரண்டாம் கட்டத் தேர்தல்
Ø 02.01.2020 வாக்கு எண்ணிக்கை
Ø காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்
Ø கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்
Ø மேயர் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதி தேர்தல்.
Ø நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ø நகர்புறங்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment