Tuesday, 17 December 2019

PINDICS ஐ நிரப்பும் எளிய முறை


PINDICS ஐ நிரப்பும் எளிய முறை
ஜூ ன் 2018 லிருந்து ஏப்ரல் 2019 வரையிலான (சென்ற கல்வியாண்டு) பின்வரும் விடுப்பு விவரங்களைக் குறித்து வைத்துக் கொண்டால் PINDICS ஐ மிக எளிய முறையில் கைபேசி மூலமாகவோ, கணினி வழியாகவோ நிரப்பி விடலாம்.

தேவையான விடுப்பு விவரங்கள் (2018 - 2019 கல்வியாண்டு)
Leave Particulars
1. No. of Days Availed CL :
2. No. of Days Availed EL :
3. No. of Days Availed ML :
4. No. of Days Maternity Leave Availed :
5. Other Leave :
Job particulars
6. No. of Days attended Training :
7. No. of Days training given :
8. No. of days attended Election duty :
9. No. of days on duty :
10. No. of days used for Classroom activity :
Total Working Days :

இவ்விவரங்களைக் குறித்துக் கொண்ட பின் emis.tnschools.gov.in என்ற வலைதளத்திற்குப் பள்ளியின் User name, Password  பயன்படுத்திச் சென்று Staff deatails என்ற கலத்தில் Teacher login details என்ற கலத்திற்குச் சென்று ஒவ்வொரு ஆசிரியருக்குமான User name, Password ஐ பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களின் புதிய username, password ஐ பயன்படுத்தி emis.tnschools.gov.in  வலைதளத்தைத் திறந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் Profile திறந்து விடும். அதில் Bardiagram option (icon) ஐ சொடுக்க வேண்டும். அவ்வாறு சொடுக்கினால் PINDICS படிவத்தை நிரப்புவதற்கான வலைதளப்பக்கம் திறந்து விடும். இதற்கு கணினியையோ அல்லது கைபேசியையோ இணைய இணைப்போடு எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி நிரப்புதலைச் செய்யலாம். அப்பக்கத்தில் மேலே குறித்து வைத்த விடுப்பு விவரங்களை நிரப்ப வேண்டும்.
தொடர்ந்து அதில் கேட்கப்படும் கேள்விகளைப் பொருத்து அதற்கேற்ற Options ஐ ஆசிரியர் தன் நிலையைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும்.
நிரப்புதலை முழுமையாக முடித்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option களில் முதலில் save செய்து பின்னர் சரிபார்த்து submit ஐ சொடுக்க வேண்டும்.
Submit கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்து முடித்த பின் தலைமையாசிரியர் emis.tnschools.gov.in என்ற வலைதளத்திற்குப் பள்ளியின் User name, Password  பயன்படுத்திச் சென்று Staff deatails என்ற கலத்தில் HM evaluation  என்ற கலத்திற்குச் சென்று ஒவ்வொரு ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து தலைமையாசிரியர் மதிப்பிட்ட வகையில் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய Options ஐ அந்த ஆசிரியரின் நிலையைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுத்துச் சொடுக்க வேண்டும். இறுதியில் Submit கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலைமையாசிரியர் செய்து நிரப்புதல் வேண்டும்.
*****

No comments:

Post a Comment