ஆசிரியர்கள் பகுதி நேர
Ph.D. செய்ய…
தற்போது ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும்
முழுநேரமாக பிஎச்.டி. பயில வாய்ப்பில்லாமல் பணியில் இருப்பவர்கள் Part time Ph.D. செய்வதற்கான
வாய்ப்பைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதற்காக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில்
சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
யு.ஜி.சி. மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன்
முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால்
வழங்கப்படுகின்றன.
Ph.D. க்கான
பாடப் பிரிவுகள்
1.
கல்வி,
2.
முதியோர் கல்வி,
3.
பொருளாதாரம்,
4.
தொடா் கல்வி,
5.
விலங்கியல்,
6.
தாவரவியல்,
7.
வேதியியல்,
8.
இயற்பியல்,
9.
தமிழ்,
10. மின்னணு ஊடக கல்வி,
11. புவியியல்,
12. வரலாறு,
13. பண்டைய வரலாறு,
14. தொல்லியல்,
15. குற்றவியல் நடைமுறைகள்
உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. படிப்பை
மேற்கொள்ளலாம் என
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தவிரவும் முழுநேரமாக யுஜிசி இளநிலை ஆராய்ச்சி
உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சேர்க்கை பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி
மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களை
என்ற வலைதள முகவரியிலிருந்து
(மேலே உள்ள வலைதள முகவரியைச் சொடுக்கியும் செல்லலாம்) தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க
கடைசி நாள் 04.01.2020 ஆகும்.
விண்ணப்பப்
படிவத்தை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*****
No comments:
Post a Comment