SHAALA SIDDHI ஐ நிரப்பும் எளிய
முறை
Shaala Siddi ஐ இணையத்தில் நிரப்பி பதிவேற்றுவதற்கு
முன் பின்வரும் இணைப்பில் உள்ள Offline Format ஐ பதிவிறக்கம் செய்து அச்சிட்டு அதில்
விவரங்களை நிரப்பிக் கொள்ளுதல் நலம்.
இணைப்பு :
Shaala
Siddi இன் Offline Format இல் விவரங்களை நிரப்பிய பின் http://shaalasiddhi.niepa.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று (இம்முகவரி இணைப்பைச் சொடுக்கியும் செல்லலாம்) அதற்கான
User name மற்றும் Password ஐ கொடுத்து அதில் கேட்கப்படும் விவரங்களைத் தட்டச்சு செய்தும்,
Options களில் பொருத்தமானதைச் சொடுக்கியும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
Username ஐ பொருத்தவரை
அது பள்ளியின் UDISE Code ஆகும். Password ஐ பொருத்த வரையில் தொடக்கப்பள்ளி எனில்
PUPS@ என ஆரம்பித்து அப்பள்ளியின் UDISE Code இன் கடைசி நான்கு இலக்கமாக அமையும். நடுநிலைப்பள்ளி
எனில் PUMS@ என ஆரம்பித்து அப்பள்ளியின் UDISE Code இன் கடைசி நான்கு இலக்கமாக அமையும்.
இது குறித்து தொடர்புடைய ஆசிரிய பயிற்றுநரிடம் உறுதிப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட
பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது ஆசிரியர்களோ இப்படிவத்தை இணையத்தில் பதிவேற்றி சமர்ப்பிக்க
முடியும்.
அல்லது Shaala Siddi இன் Offline Format ஐ நிரப்பி தொடர்புடைய ஆசிரியர் பயிற்றுநரிடம்
ஒப்படைத்தால் அவர் இணையத்தில் பதிவேற்றும் பணியை முடித்துக் கொடுப்பார். மேலும் இப்படிவத்தை
நிரப்புவதிலோ, இணையத்தில் பதிவேற்றுவதிலோ எழும் ஐயப்பாடுகளுக்கு தொடர்புடைய ஆசிரியர்
பயிற்றுநரைத் தொடர்பு கொள்ளுதல் நலம்.
*****
No comments:
Post a Comment