தவணை செலுத்துவதில் உள்ள நுட்பங்கள்
கடன் தவணைச் செலுத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட
நாளைக் கடந்தால் கடக்கும் ஒவ்வொரு நாளுக்கேற்ப வட்டி கட்ட வேண்டி வரும் என்ற தகவல்
நாம் அறிந்ததே.
PPF
எனும் (பப்ளிக் பிராவிடன்ட்
பண்ட்) திட்டம், செல்வமகள் போன்ற திட்டங்கள் நீண்ட கால நோக்கில் வரி சேமிப்போடு பயன்தரும்
திட்டங்கள்.
PPF, செல்வமகள் போன்ற வரி சேமிப்புத் திட்டங்களில் தவணை செலுத்தும் போது
அதற்கான வட்டி சேர்வதில் அறிய வேண்டிய ஒரு முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது.
PPF க்கான தவணையைச் செலுத்தும் போது மாதத்தின் ஐந்தாம் தேதி வரை கட்டலாம்.
அதற்குப் பின் கட்டினால் கட்டும் தொகைக்கான வட்டி அடுத்த மாதத்திலிருந்தே கணக்கிடப்படும்.
அந்த மாதத்திலிருந்து கணக்கிடப்படாது.
அதே போல செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கான தவணை செலுத்தும் போது மாதத்தின்
பத்தாம் தேதி வரை கட்டலாம். அதற்குப் பின் கட்டினால் கட்டும் தொகைக்கான வட்டி அடுத்த மாதத்திலிருந்தே கணக்கிடப்படும். அந்த
மாதத்திலிருந்து கணக்கிடப்படாது. இதைக் கருத்தில் கொண்டு PPF, செல்வ மகள் போன்ற திட்டங்களில்
பணம் செலுத்துபவர்கள் பணத்தைச் செலுத்துவதால் கூடுதல் வட்டித் தொகையைப் பெறலாம்.
இனிமேல் PPF, செல்வமகள் போன்ற திட்டங்களில் பணம் செலுத்துவதற்கு முன் முழுமையாக
அந்த மாதத்திலிருந்து வட்டித் தொகையைப் பெற பின்வரும் தவணைத் தேதிகளை இறுதி நாள் போல்
மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.
PPF இல் பணம் செலுத்துவதற்கான தவணைத் தேதி |
மாதத்தின் 5 ஆம் தேதி வரை |
செல்வ மகள் திட்டத்திற்கான தவணைத் தேதி |
மாதத்தின் 10 ஆம் தேதி வரை |
இச்செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் இப்பயனுள்ள செய்தியை மற்றவர்களின்
பயனுக்காகவும் பகிருங்கள்.
No comments:
Post a Comment