சிறந்த மாணவர்களின் பண்புகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோமா?
1. அதிகாலையில் முன்பாக எழ
வேண்டும். இரவில் ஒன்பது மணிக்கு முன்பாகவே தூங்கிவிட வேண்டும்.
2. அந்தந்த நாள் பாடத்தை
அன்றன்றே படித்து விட வேண்டும்.
3. வீட்டுப்பாடத்தைத் தள்ளிப்
போடக் கூடாது.
4. கேட்கின்ற பாடத்தை எழுதிப்
பார்க்க வேண்டும்.
5. ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
6. உதவாத வேலைகளை அதாவது
அநாவசியமான வேலைகளை விட்டு விட வேண்டும்.
7. தினசரி நாளிதழ்களைப் படிக்க
வேண்டும்.
8. நூலகத்தில் புத்தகம் எடுத்து
வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
9. சந்தேகங்களைக் கேள்விகள்
கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
10. மற்றவர்களிடம் கூச்சம்
இல்லாமல் பழக வேண்டும்.
11. ஒரு செயலைச் செய்வதற்கு
முன் இரு முறை யோசித்து செய்ய வேண்டும்.
12. அவசர வெற்றிகளில் ஆர்வம்
காட்டக் கூடாது. Slow and steady, win the race என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
13. பொறுமையாகவும் நிதானமாகவும்
வெற்றி பெறுவதில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
14. குறுக்கு வழிகளைப் பரிசீலிக்கவே
கூடாது. குறுக்கு வழிகளில் வெற்றி பெற நினைப்பது என்பது நேர்வழியில் வெற்றி பெறுவதை
விட பல மடங்கு ஆபத்தானது மற்றும் கடினமானது.
15. நீண்ட கால இலக்கை வகுத்து
அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
16. நிறைய படிக்க வேண்டும்
என்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
17. விமர்சனப் பூர்வமாக முன்
வைக்கப்படும் கருத்துகளை அணுக வேண்டும்.
18. தற்காலிக தோல்விகளை நிரந்தர
தோல்விகளாகக் கருதி விடக் கூடாது.
19. அர்ப்பணிப்போடும் முழு
மனதோடும் செய்யப்படும் காரியங்கள் தோற்பதில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
20. தனக்கும் மற்றவர்களுக்கும்
எப்போதும் பயனுள்ளவராக இருக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment